வியாழன், 30 நவம்பர், 2017

யாழ்ப்பாணத்தை தாக்கவுள்ள ஓகி புயல்


ஓகி புயல்  இன்று இரவு 
யாழ்ப்பாணத்தை தாக்கவுள்ளதாக  காலநிலை அவதனிப்பு மத்திய நிலையம் தற்போது சிவப்பு எச்சரிக்கையாக அறிவித்துள்ளது. சுமார் 100-110 km வேகத்தில் காற்று வீசும் எனவும் அது மட்டுமல்லாது சுமார் 300mm மழை வீழ்ச்சியும் பதிவாகலாம் எனவும் மக்களை அவதானமாக இருக்குமாறும் முன் ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறும். கடற்கரையோர மக்களை அவதானமாக இருக்குமாறும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம் எனவும் அறிவித்துள்ளது...

திங்கள், 27 நவம்பர், 2017

கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு

கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக இன்று (திங்கட்கிழமை) வட.மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
தமிழீழத்திற்கான விடுதலைப் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கும், போரில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் இருந்த இடத்தில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், துயிலுமில்லம் முன்பாக இந்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றுள்ளன.

இலங்கையின் வடக்கில் தொடரும் இராணுவ நில ஆக்கிரமிப்பின் ஓர் கட்டமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களில் ஒன்றான கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் காணப்படுகின்றது.
வறணி – கொடிகாமம் வீதியில் குறித்த தென்மராட்சி பிரதேசத்திற்கான விடுதலைப்புலிகளது மாவீரர் துயிலுமில்லம் அமைந்திருந்தது.1996ம் ஆண்டு படையினரால் யாழ்குடாநாடு கைப்பற்றப்பட்டவேளை இம்மாவீரர் துயிலுமில்லம் இடித்தழிக்கப்பட்டிருந்தது.

எனினும் பின்னர் ரணில் – புலிகள் ஒப்பந்தத்தையடுத்து குறித்த மாவீரர் துயிலுமில்லம் மீளகட்டியெழுப்பப்பட்டிருந்தது.எனினும் 2008ம் ஆண்டினில் இராணுவத்தினால் அது மீண்டும் இடித்தழிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது குறித்த மாவீரர் துயிலுமில்ல வளவில் படைத்தளமொன்றை அமைத்து படையினர் நிலை கொண்டுள்ளனர்.


அழதே அம்மா வீரர்கள் தின சிறப்புக் கவிதை

அழாதே அம்மா
விதை குழியில்
இருந்து என்னால்
உன் விழி நீர்
துடைக்க முடியவில்லை
அழாதே அம்மா

கருவறையில் சுமந்தாய்
பத்து மாதம் தவமிருந்தாய்
பத்திரமாய் என்னை
நீ வளர்த்தாய்
சுமையென்று நீயும்
என்ன எண்ணியதில்லை
அழாதே அம்மா


நான் வளர்கின்ற போது
பகையின் வஞ்சனை
நான் அறிந்தேன்
உன்னை போல் பல
அம்மாக்களின் விழிகளில்
கண்ணீரும் செந்நீரும்
வடிவதை கண்டேன்
அழாதே அம்மா

தலைவரின் வழியிலே
பலரின் விழி நீர் துடைத்திட
களத்திலே ஆயுதம் ஏந்தி
தலை நிமிர்ந்து நானும்
புலியென நடந்தேன்
அழாதே அம்மா

ஈழ விடுதலைக்கு தானே
நானும் களத்திலே
உயிர் நீத்தேன் அம்மா
விதை குழியில் உறங்குகின்றேன்
என்ன போல் பல பிள்ளைகள்
இங்கே உறக்கம் கொள்கின்றார்கள்
அழாதே அம்மா

துயில்கின்ற வீரரின்
உறக்கத்தை கலைத்து விடாதே
நீயும் அழுது அம்மா
விடுதலைக்காய் மடிந்த
உன் மகன் வீரன் என்று
நீயும் பெருமை கொள்ளு தாயே
அழாதே அம்மா

விதை குழியில் இருந்து
என்னால் எழமுடிய வில்லை
விடிகின்ற தேசத்தில்
விடுதலை வீரனாய் நானிருப்பேன்
என்றும் உன் நினைவுகளிலே
நானும் கலந்திருப்பேன்
அழாதே அம்மா

விடுதலை தேசம் ஒன்று மலர்ந்தால்
மறுபடியும் உன் மகனாய்
நான் பிறப்பேன் உன் மடியில்
நான் தூக்கம் கொள்வேன்
அப்போது நான் வாழ்வேன்
உன் மகனாய் அம்மா
அதுவரையும் நீயும்
அழாதே அம்மா

உன்னை போல் பல அம்மாக்கள்
அழுது கொண்டே இருக்கின்றனர்
அவர்களிடம் போய் சொல்
இனியும் விழி நீர் வேண்டாம் என்று
விடுதலை ஒளி படும் எம் வித்துடல் மீது
அன்று உயிர் பெறுவோம் நாங்கள்
அதுவரையும் நீயும்
அழாதே அம்மா

ஞாயிறு, 26 நவம்பர், 2017

அழாதே அம்மா மாவீரர் தின சிறப்புக் கவிதை

அழாதே அம்மா
விதை குழியில்
இருந்து என்னால்
உன் விழி நீர்
துடைக்க முடியவில்லை
அழாதே அம்மா

கருவறையில் சுமந்தாய்
பத்து மாதம் தவமிருந்தாய்
பத்திரமாய் என்னை
நீ வளர்த்தாய்
சுமையென்று நீயும்
என்ன எண்ணியதில்லை
அழாதே அம்மா


நான் வளர்கின்ற போது
பகையின் வஞ்சனை
நான் அறிந்தேன்
உன்னை போல் பல
அம்மாக்களின் விழிகளில்
கண்ணீரும் செந்நீரும்
வடிவதை கண்டேன்
அழாதே அம்மா

தலைவரின் வழியிலே
பலரின் விழி நீர் துடைத்திட
களத்திலே ஆயுதம் ஏந்தி
தலை நிமிர்ந்து நானும்
புலியென நடந்தேன்
அழாதே அம்மா

ஈழ விடுதலைக்கு தானே
நானும் களத்திலே
உயிர் நீத்தேன் அம்மா
விதை குழியில் உறங்குகின்றேன்
என்ன போல் பல பிள்ளைகள்
இங்கே உறக்கம் கொள்கின்றார்கள்
அழாதே அம்மா

துயில்கின்ற வீரரின்
உறக்கத்தை கலைத்து விடாதே
நீயும் அழுது அம்மா
விடுதலைக்காய் மடிந்த
உன் மகன் வீரன் என்று
நீயும் பெருமை கொள்ளு தாயே
அழாதே அம்மா

விதை குழியில் இருந்து
என்னால் எழமுடிய வில்லை
விடிகின்ற தேசத்தில்
விடுதலை வீரனாய் நானிருப்பேன்
என்றும் உன் நினைவுகளிலே
நானும் கலந்திருப்பேன்
அழாதே அம்மா

விடுதலை தேசம் ஒன்று மலர்ந்தால்
மறுபடியும் உன் மகனாய்
நான் பிறப்பேன் உன் மடியில்
நான் தூக்கம் கொள்வேன்
அப்போது நான் வாழ்வேன்
உன் மகனாய் அம்மா
அதுவரையும் நீயும்
அழாதே அம்மா

உன்னை போல் பல அம்மாக்கள்
அழுது கொண்டே இருக்கின்றனர்
அவர்களிடம் போய் சொல்
இனியும் விழி நீர் வேண்டாம் என்று
விடுதலை ஒளி படும் எம் வித்துடல் மீது
அன்று உயிர் பெறுவோம் நாங்கள்
அதுவரையும் நீயும்
அழாதே அம்மா

சனி, 25 நவம்பர், 2017

2018ம் ஆண்டு பூமியை விழுங்க காத்திருக்கிறது பேராபத்து! அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்...

வரும் 2018ம் ஆண்டில் உலகம் முழுவதும் பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய நிலநடுக்கங்கள் அதிக அளவில் நடக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
பூமியின் சுழற்சி வேகம் குறைந்து வருவதால் ஏற்படும் நிலநடுக்கங்கள் குறித்து கடந்த 1900ம் ஆண்டு முதல் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கொலராடோ எனும் பல்கலையை சேர்ந்த ராபர்ட் பில்ஹம் மற்றும் மோன்டானா பல்கலையின் ரெபிக்கா பென்டிக் ஆகிய ஆராச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு அறிக்கைகள் இந்த ஆண்டு ஜியோபிசிக்கல் ரிசர்ச் லெட்டர்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: நாள்தோறும் சில மில்லி செகண்ட் என்ற அளவில் புவியின் சுழற்சியில் மாற்றம் ஏற்படும்.
ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக புவி சுழற்சி வேகத்தில் பெரிய அளவில் மாற்றம் வருகிறது.
பொதுவாக ஆண்டிற்கு 15 முதல் 20 முறை ரிக்டர் அளவுகோலில் 7 என்ற அளவிலான பயங்கர நிலநடுக்கங்கள் நிகழும்.

ஆனால் தற்போது புவியின் சுழற்சியில் ஏற்பட்டுள்ள மாறுபாடு காரணமாக 2018 ல் சராசரியாக 25 முதல் 30 முறை நிலநடுக்கங்கள் ஏற்படலாம்.
ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை இது போன்ற புவி சுழற்சி வேகம் குறைந்து, 5 வது ஆண்டில் அதிக அளவிலான பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்படும்.
வரும் 2018-ம் ஆண்டில் துவங்க உள்ள அதிக அளவிலான பயங்கர நிலநடுக்கங்களுக்கான புவியின் சுழற்சி வேக குறைவானது 4 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கி விட்டது.
இவ்வாறு அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற ஒரு ஆய்வு முடிவு கடந்த அக்டோபர் மாதமும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
32 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் இது போன்ற ஆய்வுகளில் நிலநடுக்கங்களின் அளவு தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது.

தங்கத் தலைவருக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள்



வாழ்த்துகின்றோம் எம் அண்ணா!
ஆழ்கடல் தன்னில் அவதரித்த முத்தே! ஈழத்
தமிழரின் நிகரற்ற சொத்தே! வாழ்திடும்
போதே வரலாறு தந்தவன் மானத்தோடு
எம்மை தலை நிமிரச் செய்தவன்!
எங்கள் மண்ணின் கிழக்குச் சூரியன்
ஈழத்தாயவள் தந்த வீரத் திருமகன்!
கரிகாலனே! கடும்பகை எல்லாம் வெறும்
தூசென்று காட்டி நிற்கும் தீரனே!
தரையோடு தொடங்கினாய் இயக்கம்!
இன்று வான், தரை,கடலெங்கும்
தலைவா உன் முழக்கம்! பகை வெடிக்கும்
ஈழம் விரைவில் மலர்ந்து சிரிக்கும்!
'அண்ணா! உன் பெயர் சொல்ல
புல்லும் கூடப் புலியென எழும்!
அடிமைத் தளையை அறுக்கப் பிறந்த
தலைவா! உன்னால் ஈழம் வாழும்!
தமிழ் மானம் காத்த தலைவா வாழி!
தமிழ் வீரம் நிலைநாட்டிய தலைவா வாழி!
ஈனர் படையை எரிக்கப் பிறந்த எங்கள்
தலை மகனே வாழி!.


எச்சரிக்கை யாழ்ப்பாணத்தை தாக்கவுள்ள புயல்


2009 ம் ஆண்டு வீசிய நிஷா புயல்  மற்றும் வெள்ள அனர்த்தம் போல்  இன்று இரவு அல்லது நாளை யாழ்ப்பாணத்தை தாக்கவுள்ளதாக  காலநிலை அவதான மத்திய நிலையம் தற்போது அறிவித்துள்ளது. சுமார் 90-110 km வேகத்தில் காற்று வீசும் எனவும் அது மட்டுமல்லாது சுமார் 200mm மழை வீழ்ச்சியும் பதிவாகலாம் எனவும் மக்களை அவதானமாக இருக்குமாறும் முன் ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறும் அறிவித்துள்ளது.

சனி, 18 நவம்பர், 2017

கொடிகாமத்தில் 36kg கேரளா கஞ்சா மீட்பு

 கொடிகாமம் திருநாவுக்கரசு பாடசாலைக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் பொதி செய்து கொண்டிருந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணிக்கு கொடிகாம பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை  அடுத்து  36kg கேரளா கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர். குறித்த கஞ்சாவை வைத்திருந்த இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.



வியாழன், 9 நவம்பர், 2017

வரும்19 ம் திகதி பாரிய இயற்கை அழிவுகள் ஏற்படுமாம் எச்சரிக்கை


3600 ஆண்டுகளாக காத்திருந்த பேரழிவு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறப் போகின்றதா என்ற பீதி இப்போது மக்களிடையே ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று நேற்று அல்ல உலகம் இதோ அழியப்போகின்றது, நாளை அழியப் போகின்றது என்ற செய்திகள் (வதந்திகள்) மக்களிடையே அவ்வப்போது வந்து சென்ற வண்ணமே இருக்கின்றது.

இதன் காரணமாக உலக அழிவு என்றாலே உலக மகா பொய் என்ற ஓர் உணர்வு மக்களிடையே ஏற்பட்டு விட்டது. அதுவும் நன்மைக்கே காரணம் பல முறை பொய்களைச் சொல்லி வந்தால் அது மெய்யாகும் போது பீதிகள் குறைவடையும் என்பதால்.

இப்போது இந்த நவம்பர் 19ஆம் திகதி ஆரம்பமாக உள்ளதாக கூறப்படும் பேரழிவுக்கு காரணமாக பிளானட் எக்ஸ் அல்லது இருண்ட கிரகத்தினைக் கூறுகின்றார்கள் சதியாலோசனைக் கோட்பாட்டாளர்கள்.

இருண்ட கிரகம் தொடர்பில் முக்கியமான விடயம் யாதெனின் இது வரையிலும் இந்த அழிவுக் கிரகத்தின் இருப்பினை விஞ்ஞானிகள் மறுக்கவும் இல்லை, அதே சமயம் உறுதி செய்யவும் இல்லை.

இருக்கு ஆனால் இல்லை என்ற ஓர் கொள்கைளிலேயே விஞ்ஞானிகள் இருக்கின்றனர் என்றாலும் கோடிக்கணக்காக டொலர்களைக் கொட்டி தேடப்படும் ஆய்வுகள் காரணமாக பிளானட் எக்ஸ் எனப்படும் கிரகத்தின் இருப்பினை விஞ்ஞானிகள் மறைமுகமாக ஏற்றுக் கொள்கின்றார்கள் என்பதே உண்மை.

நிரூபு என அடையாளப்படுத்தப்படும் இந்தக் கிரகம் 3600 வருடங்களுக்கு ஒருமுறை எமது சூரிய மண்டலத்தின் சுற்றுப்பாதைக்குள் பிரவேசிக்கும் எனக் கூறப்படுகின்றது.

அதன் படி தற்போது இந்தக் கிரகம் பூமியின் சுற்றுப்பாதைக்குள் வரவுள்ளதாகவும் அதன் மாற்றங்கள் எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி முதல் தென்படும் எனவும் சில ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும், இந்தக் கிரகம் எமது சூரியத் தொகுதியினை அண்மிக்கும் போது பூமியில் நிலநடுக்கங்கள் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக எதிர்வரும் 16ஆம் திகதி பூமியின் டெக்டோனிக் தட்டுகள் நகர்வடையும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பாரிய நிலப்பிளவு ஏற்பட்டு பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து அலாஸ்கா, ரஷ்யா மற்றும் அமெரிக்க வெஸ்ட் கோஸ்ட் மட்டுமல்லாது இந்தோனேசியா மற்றும் ஜப்பான் ஆகியவற்றிற்கு இடையிலான பகுதிகளை அழிவடையும் எனக் குறிப்பிடப்படுகின்றது.

மேலும் இந்த பேரழிவின் காரணமாக மில்லியன் கணக்கான மக்களும் பாதிப்படைவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிரூபு கிரகம் பூமியை நெருங்கும் போது பூமியில் இயற்கை3600 ஆண்டுகளாக காத்திருந்த பேரழிவு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறப் போகின்றதா என்ற பீதி இப்போது மக்களிடையே ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று நேற்று அல்ல உலகம் இதோ அழியப்போகின்றது, நாளை அழியப் போகின்றது என்ற செய்திகள் (வதந்திகள்) மக்களிடையே அவ்வப்போது வந்து சென்ற வண்ணமே இருக்கின்றது.

இதன் காரணமாக உலக அழிவு என்றாலே உலக மகா பொய் என்ற ஓர் உணர்வு மக்களிடையே ஏற்பட்டு விட்டது. அதுவும் நன்மைக்கே காரணம் பல முறை பொய்களைச் சொல்லி வந்தால் அது மெய்யாகும் போது பீதிகள் குறைவடையும் என்பதால்.

இப்போது இந்த நவம்பர் 19ஆம் திகதி ஆரம்பமாக உள்ளதாக கூறப்படும் பேரழிவுக்கு காரணமாக பிளானட் எக்ஸ் அல்லது இருண்ட கிரகத்தினைக் கூறுகின்றார்கள் சதியாலோசனைக் கோட்பாட்டாளர்கள்.

இருண்ட கிரகம் தொடர்பில் முக்கியமான விடயம் யாதெனின் இது வரையிலும் இந்த அழிவுக் கிரகத்தின் இருப்பினை விஞ்ஞானிகள் மறுக்கவும் இல்லை, அதே சமயம் உறுதி செய்யவும் இல்லை.

இருக்கு ஆனால் இல்லை என்ற ஓர் கொள்கைளிலேயே விஞ்ஞானிகள் இருக்கின்றனர் என்றாலும் கோடிக்கணக்காக டொலர்களைக் கொட்டி தேடப்படும் ஆய்வுகள் காரணமாக பிளானட் எக்ஸ் எனப்படும் கிரகத்தின் இருப்பினை விஞ்ஞானிகள் மறைமுகமாக ஏற்றுக் கொள்கின்றார்கள் என்பதே உண்மை.

நிரூபு என அடையாளப்படுத்தப்படும் இந்தக் கிரகம் 3600 வருடங்களுக்கு ஒருமுறை எமது சூரிய மண்டலத்தின் சுற்றுப்பாதைக்குள் பிரவேசிக்கும் எனக் கூறப்படுகின்றது.

அதன் படி தற்போது இந்தக் கிரகம் பூமியின் சுற்றுப்பாதைக்குள் வரவுள்ளதாகவும் அதன் மாற்றங்கள் எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி முதல் தென்படும் எனவும் சில ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும், இந்தக் கிரகம் எமது சூரியத் தொகுதியினை அண்மிக்கும் போது பூமியில் நிலநடுக்கங்கள் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக எதிர்வரும் 16ஆம் திகதி பூமியின் டெக்டோனிக் தட்டுகள் நகர்வடையும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பாரிய நிலப்பிளவு ஏற்பட்டு பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து அலாஸ்கா, ரஷ்யா மற்றும் அமெரிக்க வெஸ்ட் கோஸ்ட் மட்டுமல்லாது இந்தோனேசியா மற்றும் ஜப்பான் ஆகியவற்றிற்கு இடையிலான பகுதிகளை அழிவடையும் எனக் குறிப்பிடப்படுகின்றது.

மேலும் இந்த பேரழிவின் காரணமாக மில்லியன் கணக்கான மக்களும் பாதிப்படைவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிரூபு கிரகம் பூமியை நெருங்கும் போது பூமியில் இயற்கை அழிவுகள், நில நடுக்கங்கள் என்பன அதிகரிக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

அவ்வகையில் தற்போது பூமியில் ஆங்காங்கே ஏற்படும் நில அதிர்வுகள் மற்றும் இயற்கை அனர்த்தங்களைப் பார்க்கும் போது இந்த சதியாலோசனைக் கோட்பாடு என்பது மெய்யாக இருக்குமோ? என்ற பீதி ஏற்பட்டுள்ளது. அழிவுகள், நில நடுக்கங்கள் என்பன அதிகரிக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

அவ்வகையில் தற்போது பூமியில் ஆங்காங்கே ஏற்படும் நில அதிர்வுகள் மற்றும் இயற்கை அனர்த்தங்களைப் பார்க்கும் போது இந்த சதியாலோசனைக் கோட்பாடு என்பது மெய்யாக இருக்குமோ? என்ற பீதி ஏற்பட்டுள்ளது.

புதன், 1 நவம்பர், 2017

பெண்களிடமோஅல்லது ஆண்களிடமோ காதல் சொல்வது எப்படி

ஒரு ஆண் ஒரு பெண்ணிடமோ அல்லது ஒரு பெண் ஒரு ஆணிடமோ, தங்கள் காதலை வெளிப்படுத்தி, அன்பை இணையிடம் தொடர்கிறார்கள். பெண்களைத் துரத்தித்துரத்தி காதல் செய்வதால் ஒரு பயனும் இல்லை.

தன் மீது விருப்பம் இல்லாத பெண்ணின் மீது ‘காதலை வெளிப்படுத்துகிறேன்’ என்ற பெயரில் தொந்தரவு செய்வதால், பெண் உட்சபட்ச கோபம் அடையக் கூடுமே தவிர , எந்தவிதத்திலும் காதல் ஏற்பட வாய்ப்புகள் இல்லை. அப்படின்னா எப்படி தான் காதலை சொல்வது…

பொய் சொல்லக் கூடாது

நீங்கள் விரும்பும் பெண் அழகினாலோ, கல்வி, வசதி வாய்ப்புகளாலோ அல்லது மற்ற காரணங்களாலோ உங்களை ஈர்த்திருக்கலாம்.

இதில், தனக்கு காதல் வந்த காரணத்தை நேரடியாகச் சொல்லாமல், தனக்கு சௌகரியமாக பொய்யான காரணத்தைத் சொல்லி காதலை வெளிப்படுத்துவது கூடவே கூடாது.

நீங்கள் எந்த விஷயத்துக்காக அவரை விரும்புகிறீர்கள் என்பதை முதல் முறையிலேயே சொல்லிவிடுவது நல்லது.
உனக்குப் பிடிச்சா மட்டும் ஓகே சொல்லுங்கள்

தனக்கு ஏற்கெனவே தெரிந்த பெண்ணாக இருந்தாலும் சரி, புதிதாக அறிமுகமாகி இருக்கும் பெண்ணாக இருந்தாலும் சரி, உங்கள் காதலை வெளிப்படுத்திய நொடியில் இருந்து அவரிடம் இருந்து ‘ஆம்’ என்ற பதிலே வரவேண்டும் என்பதை எதிர்ப்பார்க்காதீர்கள்.

‘இது என் விருப்பம், அதே போல உனக்கு என்னைப் பிடித்திருந்தால் மட்டும் சம்மதி’ என்று சொல்லலாம். இப்படிச் செய்வது உங்கள் மீது
மரியாதையை உயர்த்தும்.

எடுத்ததும் ஐ லவ் யூ வேண்டவே வேண்டாம்

முதல் புரபோசலை ‘ஐ லவ் யூ’ என்ற வாக்கியமாக இல்லாமல் ,வேறு எப்படி எல்லாம் இருக்கலாம் என்று சிலர் தேடிப்பிடித்து முயற்சித்து, வித்தியாசமாகச் சொன்னாலும் பெருமளவில் ‘ஐ லவ் யூ’ என்கிற வாக்கியமே காதலை வெளிப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

ஆகவே, ‘ஐ லவ் யூ’ வை தனக்குப் பிடித்த பெண்ணிடம் சொல்வதற்கு முன்பாக , உங்கள் மீது சிறு அளவிலாவது அந்தப் பெண்ணுக்கு விருப்பம் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொண்டு ‘ஐ லவ் யூ’ சொல்லுங்கள்.

நான் இப்படித்தான்’னு சொல்வதுதான் பெஸ்ட்

நீங்கள் விரும்பும் பெண்உங்களுடைய தோற்றம், பேச்சு, பழகும் விதம் இதையெல்லாம் பார்த்து உங்கள் மீது வேறொரு பிம்பத்தை வைத்திருக்கலாம்.

ஆனால், நீங்கள் அவர்களின் நினைப்புக்கு அப்படியே நேர்மாறாக இருக்கலாம். பார்த்ததும் காதல் என்பது திரைப்படத்திற்கு வேண்டுமானால் சுவாரஸ்யமாக இருக்கலாம்.
அதனால், உங்கள் கல்வி, வேலை, குடும்பச்சூழல், உங்கள் எதிர்காலத் திட்டம், பிடித்தவை, பிடிக்காதவை உள்ளிட்ட அடிப்படை விஷயங்களை அவர்களிடம் தெரிவித்து, அவர்கள் அவற்றையெல்லாம் தெளிவாகப் புரிந்துகொண்டார்களா என்று தெரிந்த பின் காதலைச் சொல்வது நல்லது.


அதே போல பெண்ணைப் பற்றிய முழு விவரங்களை நீங்களும் தெரிந்துவைத்துக்கொள்வதும் அவசியம்.

செல்போன் புரபோசல் வேண்டவே வேண்டாம்
ஆணுக்கும் பெண்ணுக்குமான தகவல் தொடர்பு செல்போன் வழியே பரிமாறப்பட்டாலும் நீங்கள் முதன் முதலாக வெளிப்படுத்தும் காதல், நேரில் இருக்கும்படி பார்த்துக்கொள்வது நல்லது.

நேரில் சொல்லும்போது, அந்தத் தருணத்தில் உங்கள் முகங்களில் வெளிப்படும் மலர்ச்சி உங்களுக்குக் கிடைக்கும் வாழ்நாள் பொக்கிஷம். அந்த அனுபவத்தைத் தவறவிடாதீர்கள்.

கட்டாயப்படுத்துவது கூடவே கூடாது
ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் விருப்பம் இல்லாதவரிடம் கட்டாயப்படுத்திக் காதலைச் சொல்வது நல்லதல்ல. அதனால், நீங்கள் காதலிக்கும் நபர் உங்கள் காதலை ஏற்றுக்கொள்ளப் போதுமான அவகாசம் கொடுங்கள்.


ரத்தத்தால் கடிதம் எழுதுவது, அழுது கெஞ்சுவது, போகும் இடமெல்லாம் பின் தொடர்வது இதெல்லாம் காதலில் சேராது. உங்கள் மீது அனுதாபத்தை ஏற்படுத்தி காதலிக்க வைத்தால், அதுவும் கட்டாயப்படுத்துவது போலத்தான். அதனால், காதலை மெல்லிய பூங்காற்றாய் நுகரப் பழகுங்கள். இப்படிசெய்து பாருங்கள்
வெற்றி நிச்சயம்