சனி, 25 நவம்பர், 2017

தங்கத் தலைவருக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள்



வாழ்த்துகின்றோம் எம் அண்ணா!
ஆழ்கடல் தன்னில் அவதரித்த முத்தே! ஈழத்
தமிழரின் நிகரற்ற சொத்தே! வாழ்திடும்
போதே வரலாறு தந்தவன் மானத்தோடு
எம்மை தலை நிமிரச் செய்தவன்!
எங்கள் மண்ணின் கிழக்குச் சூரியன்
ஈழத்தாயவள் தந்த வீரத் திருமகன்!
கரிகாலனே! கடும்பகை எல்லாம் வெறும்
தூசென்று காட்டி நிற்கும் தீரனே!
தரையோடு தொடங்கினாய் இயக்கம்!
இன்று வான், தரை,கடலெங்கும்
தலைவா உன் முழக்கம்! பகை வெடிக்கும்
ஈழம் விரைவில் மலர்ந்து சிரிக்கும்!
'அண்ணா! உன் பெயர் சொல்ல
புல்லும் கூடப் புலியென எழும்!
அடிமைத் தளையை அறுக்கப் பிறந்த
தலைவா! உன்னால் ஈழம் வாழும்!
தமிழ் மானம் காத்த தலைவா வாழி!
தமிழ் வீரம் நிலைநாட்டிய தலைவா வாழி!
ஈனர் படையை எரிக்கப் பிறந்த எங்கள்
தலை மகனே வாழி!.