புதன், 25 மார்ச், 2020

கொண்டு செல்ல எதுவுமில்லை மக்களே.....


                   நாளைக்கும் நிலவுவரும் நாமிருக்கமாட்டோம் என்பது தான் உண்மை இன்று நாங்கள் உயிரோடு இருப்போம் ஆனால் நாளை நாங்கள் இந்த உலகத்தில் இருப்பமோ இல்லையோ தெரியாது ஆகவே இந்த உலகத்தில் பல ஏழை மக்கள் வாழ்கின்றார்கள் ஏன் உங்கள் ஊரிலேயே அல்லது உங்கள் வீட்டுக்கு அருகாமையிலேயோ ஒருவேளை உணவிற்காக பல கஸ்ரங்களை எதிர் கொள்கின்றார்கள் உங்களிடம் பணமோ பொருளோ இருந்தால் கொஞ்சம் அவர்களுக்கும் கொடுங்கள் நாங்கள் போகும் போது எதையுமே கொண்டு செல்ல போறதில்லை ஆகவே கொடுத்து செல்வோம் ஏழைகளுக்கு மேலும்
யாரிடமும் கோபப்படாதீர்கள் யாரையும் குற்றம் சுமத்தாதீர்கள் யாருக்கும் தீங்கு செய்யாதீர்கள் இந்த உலகம் நிச்சயம் இல்லை சில நாட்களோ, சில மாதங்களோ, சில வருடங்களோ எங்கள் வாழ்வு முடிந்து விடும் அதுவரை சந்தோஷமாக அன்பு பாசம் எல்லாத்தையும் பகிருங்கள் விலங்குகளாக இருக்கட்டும் மனிதர்களாக இருக்கட்டும் எல்லோரிடமும் உங்கள் அன்பை காட்டுங்கள் இன்று என்பதே நிஜம்.
சொத்து , பணம் , கார் , பங்களா எல்லாம் இருந்தும் கொடிய நோய் வந்தால் கட்டிய மனைவியோ பெற்ற பிள்ளையோ கூட அருகில் வரமுடியாது .
யாரும் ஈமச்சடங்குகள் கூட செய்ய முடியாது. எவனோ , எங்கோ தூக்கிக்கொண்டு போய் மருந்தை அடித்து குழியில் போட்டு புதைத்துவிட்டு போவான்.
இந்த லட்சணத்தில் திமிர், தலைக்கனம், பந்தா, பொறாமை, புறம்பேசுவது, அடுத்தவங்களை கெடுக்க நினைப்பது, பணம், பதவி, அதிகாரம், சொத்து, சுகம், ஸ்டேட்டஸ், ஜாதி, தராதரம் பார்ப்பது, பழி உணர்வு .....எல்லாம் எதற்காக!

அதிகமாக ஆடினால் (கொரோனா) அடக்கமாக்கும் பொழுது கொண்டு செல்ல எதுவுமில்லை மக்களே..... என்பது தான் உண்மை......