வெள்ளி, 28 அக்டோபர், 2016

சார்க் அமைப்பு - பொது அறிவு விபரங்கள்

சார்க் அமைப்பு - பொது அறிவு விபரங்கள்

சார்க் அமைப்பு - – SAARC
(தென்ஆசிய நாடுகளிள் பிராந்திய ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு)
(SOUTH ASIAN ASSOCIATION FOR REGIONAL COOPERATION)


  • ஆரம்பம் : December 8, 1985 டாக்கா (பங்களதேஷ்)
  • தலைமையகம் : நேபாளம் - கட்மண்டு
  • அங்கத்துவம் : 


  1. இந்தியா   
  2. இலங்கை   
  3. பாக்கிஸ்hதான்  
  4. பங்களாதேஷ்  
  5. நேபாளம்
  6. பூட்டான்
  7. மாலைதீவு
  8. ஆப்கானிஸ்தான் (2007 முதல்) இறுதியாக இணைந்தது  


  • சார்க் நாடுகளின் தேசிய கீதத்தை இயற்றியவர் : மேர்சலின் ஜெயக்கொடி (இலங்கை)
  • 2 ம் உலக மகா யுத்தத்தின் பின் உலகமெங்கும் பல பிராந்திய ஒத்துழைப்பு நிறுவனங்கள் தோன்றின.
  • அவை பல காரணங்கள் கருதி உருவாக்கப் பட்டன. அத்தகைய வகையினுள் சார்க் அமைப்பு உருவானது.
  • இதை உருவாக்குவதில் முன் நின்றவர் பங்களாதேஷ் முன்னாள் ஜனாதிபதி ஷியாஉர் ரஹ்மான் தொடக்கத்தில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பூட்டான், பங்களாதேஷ், மாலைதீவு, நேபாளம் என இருந்தது.
  • பின்பு மிக அண்மையில் ஆப்கானிஸ்தான் இணைந்து கொண்டது.
  • பல இலட்சியங்களையும் கொள்கைகளும் கொண்டு உருவாக்கப்பட்ட சார்க் ஒத்துழைப்புக்கான விடயங்களை
  • தயாரித்துக் கொண்டு முதலாவதாக டாக்கா நகரில் 1985 கூடியது.
  • இவ்வமைப்பின் முக்கிய விடயங்களாக கல்வி, கலை, வானிலை, சுகாதாரம், அஞ்சல், விளையாட்டு, போக்குவரத்து, தொலைத் தொடர்பு, போதைத் தடுப்பு என்பன காணப்பட்டது.
  • கொள்கைகளை அடைந்து கொள்ள சார்க் நான்கு பிரிவுகளை உண்டாக்கியது.


  1. நிரந்தரக் குழு 
  2. வெளிநாட்டு அமைச்சர்கள் குழு 
  3. உச்சிமாநாட்டுக்குழு 
  4.  தொழில்நுட்பக் குழு

சார்க் அமைப்பை கவனித்துக் கொள்ளவென சில பார்வையாளர் நாடுகளும் உள்ளன. அவையாவன

  1. யப்பான் 
  2. பர்மா 
  3. ஈரான் 
  4. சீனா 
  5. அமெரிக்கா 
  6. மொரிசியஸ் 
  7. தென்கொரியா 
  8. அவுஸ்திரேலியா 
  9. ஐரோப்பிய யூனியன்.

சார்க் அமைப்பானது, கடந்த காலங்களில் பல இடங்களில் கூடியுள்ளது. இது வரை 17 தடவை கூடியுள்ளது.
சார்க் அமைப்பானது உருவாக்கப்பட்டு அதன் நடவடிக்கைகள் சிலவற்றில் வெற்றியும் கண்டுள்ளது.

செலுத்துகை-ஊடகங்கள்-transmission-media

செலுத்துகை-ஊடகங்கள்-transmission-media


வழிப்படுத்தப்பட்ட ஊடகங்கள் (Guided Media)
  •  திருகப்பட்ட கம்பிச்சோடி / முறுக்கிய கம்பிச்சோடி (Twisted Pair)
திருகப்பட்ட கம்பிச்சோடி என்பது ஒன்றுடனொன்று திருகப்பட்டிருக்கும் இரு கம்பிச்சோடிகளாகும். ஒரு ஒழுங்கான திருகு சுருள், முன் வரைவிலுள்ள காவலிடப்பட்ட இரு செப்புக்கம்பிகளாகும். ஒரு தனித்த தொடர்பாடல் இணைப்பாக கருதப்படும். புதிய LAN (உள்ளகவலைபரப்பு) இன் பயனுறுனிலை இணைப்புக்களுக்காக விரும்பப்படும் பிரபல்யமான ஒன்றாக திருகப்பட்ட கம்பிச்சோடி கணப்படுகிறது.
செலுத்தல் குணம்சங்களின்படி இரு வகையான திருகப்பட்ட கம்பிச்சோடிகள் காணப்படுகின்றன.
கவசமிடப்பட்ட திருகப்பட்ட கம்பிச்சோடி (Shielded Twisted Pair – STP)
கவசமிடப்படாத திருகப்பட்ட கம்பிச்சோடி(Unshielded Twisted Pair – UTP)
அனுகூலங்கள்
விலை அதிகமற்றது
இலகுவாக கிடைக்கா கூடியது
பெரும்பாலான தொலைபெசிதொகுதியில் காணப்படுகிறது.
பிரதிகூலங்கள்
ஏனைய ஊடகங்களைபோல் (ஓரச்சு வடம்)உயர்கதியை கொண்டிறாது.
வனொலி அதிர்வெண், மின் கந்தவியல் அதிர்வெண் குறுக்கீடுகளை உணர்திறனுடயது.
ஏனைய ஊடகங்களைபோல் (ஓரச்சு வடம்) நீடித்து உழைக்காது.
  • ஓரச்சு வடம் (Co – axial Cable)
இந்த வடமானது ஓரு மைய அச்சுக்கானது என கூறப்படும். ஏனெனில்
ஓர் பொதுவான அச்சினையே இரண்டு கடத்திகளும் பகிர்ந்து கொள்ளும். இது ஒரு ஒற்றை உள்ளகத்தையும் அதன் மேற்போர்வையாக செயற்படும் வெளியக கட்த்தியாகவும் இருக்கிறது. சமிக்ஞையானது உள்ளகத்தின் மீது பரப்பப்படும். உள்ளகம் மற்றும் வெளியகம் ஒரு காவலியினால் தனியாக்கப்பட்டுள்ளன.

அனுகூலங்கள்
வனொலி அதிர்வெண், மின் கந்தவியல் அதிர்வெண் கொஞ்சம் எதிர்ப்பானது.
திருகப்பட்ட கம்பிச்சோடியை விட நீடித்து உழைக்க கூடியது.
திருகப்பட்ட கம்பிச்சோடியை விட கதியை கொண்டது.
பிரதிகூலங்கள்
திருகப்பட்ட கம்பிச்சோடியை விட விலை கூடியது
கடுமையான குறுக்கீடுகளை உணர்திறனுடயது.
  • ஒளியிழை நார் (Fiber Optics)
இவை ஒரு மெல்லிய கண்ணாடி அல்லது பிளாஷ்டிக் இழைநார்கள் ஊடாக தரவைச் செலுத்துவதற்கு ஒளியலைகளை பயன்படுத்துகின்றன. இது ஒளிக்கீற்றுகளின் செலுத்துகை துடிப்புகளிலுள்ள நூற்றுக்கணக்கான கண்ணடி அல்லது பிளஷ்டிக் கம்பிகளை கொண்டதாகும்.

அனுகூலங்கள்
வனொலி அதிர்வெண், மின் கந்தவியல் அதிர்வெண் என்பவற்றிற்கு எதிர்ப்பானது.
உயர்ந்த பாதுகாப்பு தன்மை உடையது
மிகவும் நீடித்து உழைக்க கூடியது.
பிரதிகூலங்கள்
உற்பத்தி சேவையை பொறுத்தமட்டில் மிக மிக செலவு கூடியது.
அமைப்பு ஏற்பாடு வடிவமைப்பு என்பவை மிகவும் சிக்கலானவை.

வழிப்படுத்தப்படாத ஊடகங்கள் (Unguided Media) /கம்பியில்லா ஊடகங்கள் (Wireless Media)

பெளதீகரீதியான வடமாக்கல் போன்ற கட்டுப்பாடுகளுடனல்லாது வலையமைப்புக்களில் தரவுகளை தொடர்பாட முடியும் என்ற் கனவு உண்மையென்பதை உணரலாம். இவை கம்பியில்லாத தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன.இரு பிரதான கம்பியில்லாத தொழில்நுட்பங்களாக வனொலி செலுத்துகை, செங்கீழ்கதிர் செலுத்துகை என்பன காணப்படுகின்றன.
  • வானொலி செலுத்துகை
இவை இல்குவாக ஊடுருவிச்செல்லக்கூடியது. வானொலியானது அதன் கதியால் வரையரை செய்யப்பட்டிருந்தும் பல மேல் கணனிகளுக்கான தெரிவு முறையாகவுள்ள கம்பியில்லா செலுத்துகையாகும்.

  • செங்கீழ்கதிர் செலுத்துகை

இவை மிக குறைந்த மீடிறனை கொண்ட ஒளியலைகளை தரவு ஊடுகடத்துவதற்கு பயன்படுத்தாலாம். இவை சுவர் தளங்களை ஊடுருவிச்செல்ல முடியாது. இன்று நாண் இல்லாத விசைபலகை, அச்சுயந்திர்ம் என்பவற்றில் இது பயன்படுத்தப்படுகிறது.
நுண்ணலை செலுத்துகை
நீண்ட தூரத்துக்கான தரவுகளை ஊடுகடத்துவதற்கு பயன்படும். இது ஒரு குறுகிய அலை நீளம் கொண்ட அதிர்வெண் கதிராகும்.
  • செய்மதி மூலமான செலுத்துகை
செய்மதி மூலமான செலுத்துகைகளுக்கான சமிக்ஞைக்ள் ஆகாயவெளியில் 500 – 22000 வரையிலான உயரத்தில் உள்ள செய்மதிகளுக்கு அனுப்பப்படும்
தரவு ஊடுகடத்தும் முறைகள்
  • தரவு ஊடுகடத்தல் இரு பிரதானமுறையில் நடைபெறலாம்.
தொடர் தரவு ஊடுகடத்தல் (Serial Data Transmission): இங்கு தரவுகள் ஒன்றன் பின் ஒன்று வீதம் ஊடுகடத்தப்படுகின்றன. கணினி வலையமைப்பில் இவ்வாறு தரவுகள் பிட்(bit)களாக ஊடுகடத்தப்படும்.
சமாந்திர தரவு ஊடுகடத்தல்(Parallel Data Transmission): ஓரே தடவையில் அதிக எண்ணிக்கையிலான பிட்கள் ஊடுகடத்தப்படும். இதற்கு குறைந்தப்பட்சம் 8 கம்பிகளையேனும் பயன்படுத்துவது வழக்கம்.
தரவு ஊடுகடத்தல் கதி( Data Transmission Speed)
பிட்களை (bit) கொண்டு தரவு ஊடுகடத்தலின் கதியை அளப்பதற்கு ஒரு செக்கனில் ஊடுகடத்தப்படும் பிட்களின் எண்ணிக்கை (bit per second –bps) கருத்தில் கொள்ளப்படும். Kbps, Mbps, Gbps அலகுகளும் தரவு ஊடுகடத்தலின் கதியை அளப்பதற்கு பயன்படுத்தப்படும்.
தரவு ஊடுகடத்தல் வழிமுறைகள் ( Data Transmission Modes)
தரவு ஊடுகடத்தல் பிரதானமாக மூன்று வழிகளில் நடைபெறும்.
  1. ஒற்றை வழிப்போக்கு (Simplex) : தரவு ஒரு திசையில் மாத்திரம் செல்கிறது. மற்றைய திசையில் தரவு ஊடுகடத்தப்பட எவ்வித வாய்ப்பும் இல்லை.
  2. அரை இருவழிப்போக்கு(Half-Duplex): இரு திசைகளிலும் தரவுகளை ஊடுகடத்துவதற்காக இருக்கின்றபோதிலும் ஒரு தடவையில் ஒரு திசையில் மாத்திரம் ஊடுகடத்தத்தக்க தரவு ஊடுகடத்தல் முறை அரை இருவழிப்போக்கு தரவு ஊடுகடத்தல் எனப்படும்.
  3. இருவழிப்போக்கு (Full Duplex):   ஒரே சந்தர்ப்பத்தில் இரு திசைகளிலும் தரவு ஊடுகடத்தல் நடைபெறத்தக்க தரவு ஊடுகடத்தல் முறை இருவழிப்போக்கு தரவு ஊடுகடத்தல் எனப்படும்.

கணனிக் குதைகள் (Computer Ports)

கணனிக் குதைகள் (Computer Ports)


கணனிக் குதைகள் Computer Ports
கணனியுடன் பிற பாகங்களை இணைப்பதற்கான தொடுப்புகள் குதைகள் எனப்படும்.
  • மின்வலு இணைப்புக் குதை (Power Supply Port)



கணனியுடன் மின் இணைப்பை ஏற்படுத்த பயன்படும்.
  • Ps2 குதைகள் (Ps2 Ports)





இவை விசைப்பலகை, சுட்டி என்பவற்றை தொடுக்க பயன்படுத்தப்படுகிறது. விசைப்பலகையை தொடுக்க ஊதா நிறமும், பச்சை நிறம் சுட்டியை தொடுக்கவும் பயன்படுத்தப்படும். தற்காலத்தில் ps2 port களுக்கு பதிலாக USB குதைகள் பயன்படுத்தப்படுகின்றன.
  • 3. USB குதைகள் ( USB – Universal Serial Bus)


இவை அச்சுயந்திரம்,வருடி விசைப்பலகை, சுட்டி என்பவற்றை கணனியுடன் இணைக்க பயன்படுத்தப்படுகிறது. இக்குதையின் மூலம் பிற துணையுறுப்புக்களை தொடுத்தவுடன் பயன்படுத்த முடிவதால் Plug & Play யென அழைக்கப்படுகிறது. இதன் மூலம் 127 துணையுறுப்புக்களை தொடுக்கலாம்.

  • தொடர் குதை (Serial Port /COM port/ Communication Port)







இவை serial mouse, modem என்பவற்றை இணைக்க பயன்படுத்தப்படும். Pin 9, Pin 25 என இருவகைகள் மேல் உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது. முனைப்பகுதிகள் கொண்டுள்ள குதைகள் MALE உற்புற அமைப்பை கொண்டவை FEMALE எனவும் அழைக்கப்படும்.


  • சமாந்திரக்குதை (Parallel Port)





இது அச்சுயந்திரத்தை தொடுக்க பயன்படுத்தப்படுகிறது.


  •  VGA குதை (Video Graphic Array Port)





இவை Monitor, Projector என்பவற்றை தொடுக்க பயன்படுத்தப்படுகிறது.

  •  ஒலி விளையாட்டு துணையுறுப்புக்குதைகள் (Sound and Game Ports)


இவை ஒலி விளையாட்டு துணையுறுப்புகளை இணைக்க பயன்படும். Joystick, Speakers, Microphone, external sound devices and Etc


  •  வலையமைப்பு குதை (Network Port)





இலங்கை விடயங்கள் - பொது அறிவு :

இலங்கை விடயங்கள் - பொது அறிவு : பாகம் 1





திங்கள், 24 அக்டோபர், 2016

தமிழ்அரசியல் வாதிகளை விரட்டுவோம் தமிழர்களை பாதுகாப்போம்....




அன்று வித்தியாவுக்காக கடையடைப்பு  போராட்டம் இன்று  பல்கலை மாணவர்களுக்காக! இதனால் என்ன நன்மை வித்தியாவுக்காக நீதி வேண்டி எவ்வளவு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது என்று எல்லோருக்கும் தெரியும் அதனால் என்ன நன்மை கிடைத்தது.? ஒன்றுமே இல்லை தப்பு செய்கின்றவர்கள் தமிழ் அரசியல் வாதிகளால் உல்லாசமாக இருக்கின்றார்கள்.
அதேபோலத்தான் இந்த நாடகமும்
 தமிழ் அரசியல் வாதிகள் இருக்கும் மட்டும் தமிழர்களுக்கு செத்தவீடு அதிகரித்து கொண்டேயிருக்கும்...
ஆதலால் தமிழ்அரசியல் வாதிகளை விரட்டுவோம்  தமிழர்களை பாதுகாப்போம்....

கடலில் மூழ்கபோகும் யாழ்ப்பாணம்! சர்வதேச ஆய்வுக்குழு எச்சரிக்கை

கடலில் மூழ்கபோகும் யாழ்ப்பாணம்! சர்வதேச ஆய்வுக்குழு எச்சரிக்கை

யாழ்ப்பாணம் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக சர்வதேச ஆய்வுக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமகாலத்தில் பூமியில் ஏற்பட்டு வரும் அதிதீவிர உஷ்ணமாக காலநிலை காரணமாக, பனி மலைகள் வேகமாக உருகி வருகிறது. இதன்மூலம் கடலின் நீர் மட்டம் வழமையை விடவும் வேகமாக அதிகரித்து வருகிறது.
2025 இல் கடல் மட்டம் அரை மீற்றரினால் உயரும் எனவும், 2050, 2075 என கடல் மட்டத்தில் ஏற்படப்போகும் அதிகரிப்பு காரணமாக பாரிய சிக்கல் நிலை ஏற்படும் எனவும் IPCC (Intergovernmental Panel on Climate Change) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் அண்ணளவாக 40 சதவீதமான மக்கள் கரையோரங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான அனர்த்தம் காரணமாக அவர்களுக்கு ஆபத்துகள் ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள தேவையான முன்நடவடிக்கைகள் துறைசார் தரப்பினர் மேற்கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இத்தகவலை அனைவரும் அறிந்துக்கொள்வது சிறந்தது..

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

25ம் திகதி செய்வாய்க் கிழமை வடபகுதி எங்கும் பூரண ஹர்த்தால்!! பல்கலைக்கழக மாணவர்கள் கொலைக்கு கண்டனம்!! Mathees.com


கொக்குவில் பகுதியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கைப் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாணம் உட்பட வடபகுதியில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முழுமையான ஹர்த்தாலுக்கு

அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அனைத்து தமிழ்க்கட்சிகளும் ஒன்று கூடி இந்த முடிவை எடுத்துள்ளன. நீதிமன்றங்கள் உட்பட்ட அரச நிறுவனங்கள் பாடசாலைகள், வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள், அரச தனியார் போக்குவரத்துச் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு இக் ஹர்த்தால் இடம்பெறவுள்ளது.

1.இலங்கை தமிழரசுக் கட்சி

2.தமிழீழ விடுதலை இயக்கம்

3.ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி

4.தமிழர் விடுதலைக் கூட்டணி

5.தமிழீழ மக்கள் விடுதலை கழகம்

6.தமிழர் சமூக ஜனநாயக கட்சி

7.தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து இக் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

சனி, 22 அக்டோபர், 2016

இன்று இடம்பெற்ற கிழக்கு மாகாண ஆசிரியர் போட்டிப்பரீட்சை! வினாக்கள்!

இன்று இடம்பெற்ற கிழக்கு மாகாண ஆசிரியர் போட்டிப்பரீட்சை! வினாக்கள்!

MATHEES.COM   22-10-2016
1:- ஜனாதிபதியின் பதவிக்காலம் யாது ?
2:-மத்திய வங்கியின்ஆளுநர் யார் ?
3:- இலவச கல்வியின் தந்தை யார் ?
4:-தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படுவோரின் எண்ணிக்கை ?
5:-2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிநடை பெற உள்ள இடம் ?
6:-பாராளுமன்றத்தை சுற்றி ஓடும் நதி எது ?
7:- வடக்கு கிழக்கு பிரிக்கப்படட ஆண்டு எது ?
8:-2016 க்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற நாடு எது?
9:-UNO கிளையிலுள்ள மரத்தின் பெயர் என்ன ?
10:-முதியோர் எனப்படுவோரின் வயது யாது ?
11:-உருகுவே ஜனாதிபதி யார்?
12:- உயர் கல்வி அமைச்சரின் பெயர் என்ன?
13:-2016 UN எத்தனையையாவது ஆண்டு நிறைவை கொண்டாடியது ??
14:-மாணிக்க கங்கை சேரும் இடம் ?
15:- நாசா அனுப்பிய விண்கலத்தின் பெயர் என்ன?
16: ஐ.நா செயலாளர் யார் ?
17:-இந்தியாவின் மாநிலங்களின் எண்ணிக்கை ?
18:-கர்ப்பிணிகளுக்கு நுளம்பினால்
ஏற்படும் வைரஸ் தாக்கம் என்ன?
19:-தவளை எதனால் சுவாசிக்கும் ?
20:-அண்மையில் புனிதர் படம் பெற்றவர் யார் ?
21:-தென் அதிவேக பாதையின் கீழ் ஓடும் நதி ?
22:-அரநாயக்க அனனர்த்தம் ஏற்படட இடத்தில் உள்ள மலை எது?
23:-அந்தமான் தீவு எந்த சமுத்திரத்தில் உள்ளது ?
24:-எங்கிருந்து ஐரோப்பாவுக்குள் அகதிகள் அதிகம் வந்தனர் ?
25:-கணனியின் தந்தை யார்?
26:- அரச திணைக்கழகங்களின் ஒழுக்க கோவை பற்றி எதில் குறிக்கப்பட்டிருக்கும்?
27:-நீரழிவு உருவாக காரணமான ஓமோன்?
28:-பொது மக்கள் படடயம் என்றால் என்ன?
29:-அபிவிருத்தி செய்யப்படும் பெரிய நீர்த்தேக்கம் எது ?
30:-பிரேத பரிசோதனை செய்ப்பவரின் பெயர் என்ன?
31:-யல்லிக்கட்டுக்கு பிரபலமான நாடு ?
32:-இலங்கையில் பாரிய வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற இடம் எது ?
33:- அமெரிக்காவின் ஜனநாய கட்சி வேட்ப்பாளர் யார் ?
34:-பரா ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற இலங்கை வீரர் ?
35:கணனி திருடர் எவ்வாறு அழைக்கப்படுவர் ?
36:-திருகோணமலையில் உள்ள பிரட்றிக் கட்டடம் யாருடைய காலத்தில் கட்டப்பட்டது?
37:-பெற்றோலிய நாடுகளை அழைக்கும் சிறப்பு பெயர் என்ன?
38:-இராக் இரான் சவுதிஅரேபியா ஓமான் கட்டிட நாடுகள் எவ்வாறு அழைக்கப்படும் ?
39:- உலக ஓசோன் தினம் எப்போது ?
40:-வறுமையாக வாழ்ந்த ஜனாதிபதி என அழைக்கப்படட உருகுவே ஜனாதிபதி யார்?

வியாழன், 20 அக்டோபர், 2016

பேரழிவு நெருங்கி விட்டது! உலக அழிவை உறுதிபடுத்தும் குகை கோயில்

பேரழிவு நெருங்கி விட்டது! உலக அழிவை உறுதிபடுத்தும் குகை கோயில்!

இந்து புராணக்கதைகளும் மனித வாழ்க்கையுடன் ஒன்றியதாக உள்ளது. முன்னோர்கள் கூறிய பல சம்பவங்களும் அறிவியல் சார்ந்த வையாக உண்மையை உரைப்பதாக உள்ளன.
அதுபோல ஒன்றுதான் மகாராஷ்டிரா மாநிலத்தில் கூறப்படும் சம்பவம். மகாராஷ்டிராவில் 6-ஆம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால் கட்டப்பட்ட ஹரிஷ்சந்திரேஷ்வர் கோயிலுக்கு அருகில் “கேதாரேஸ்வர்” என்ற குகைக் கோயில் உள்ளது.
இந்த குகைக்குள் நீரால் சூழப்பட்ட 5 அடி உயர சிவலிங்கத்தைக் காணலாம். லிங்கத்தை சுற்றியுள்ள தண்ணீரைக் கடந்து தான் லிங்கத்தை அடைய வேண்டும் என்பதால் லிங்கத்தை அடைவது கடினம்.
மழைக் காலங்களில் குகைக்கு அருகில் கூட செல்ல முடியாது.சிவலிங்கத்தை சுற்றி நான்கு தூண்கள் இருந்துள்ளன. இவற்றில் மூன்று தூண்கள் ஏற்கனவே சிதிலமடைந்த நிலையில் ஒரே ஒரு தூண் மட்டும் நன்றாக உள்ளது.
இந்த தூணும் எப்போது சிதிலமடைகிறதோ அன்று உலகம் அழிந்துவிடும் என்று கூறப்படுகிறது. இந்த நான்கு தூண்களும், “சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம்” என அழைக்கப்படுகின்றன.
எஞ்சி இருப்பது கலியுக தூண் மட்டும்தான்.ஸ்ரீரங்கத்தில் இருக்கும் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டால், இலங்கை அழிந்துவிடும் என்று கூறுவதும் குறிப்பிடதக்கது.

புதன், 19 அக்டோபர், 2016

அவள் ஒரு வீரத்தாய்.!!


அவள் ஒரு வீரத்தாய்.!!

அந்தி வானம்
சாயும் நேரம்
யாா் வரவை
எதிர்பாா்த்திருக்கிறாள்
அன்பு தாய் இவள்…
போா்க்களம் சென்ற
மைந்தன் மீண்டும்
வருவான் என எண்ணியே
இவள் காத்திருப்பு…!
சில நாட்கள், வாரங்கள்
வருடங்களாகியும்
அன்னை இவள்..!
ஏக்கப்பாா்வை கலையவில்லை.!!
உற்றாா் உறவினா்
என பலா் புடைசூழ
காத்திருப்புச் செய்தி,
அது இடி என அவள்
காதுகளின் ஊடாக
மின்னலென
நெஞ்சை தாக்கியது
என் மகன் வீரமரணமா…??
ஓஓஓஓஓஓ….!!
அவள் அழவில்லை
கத்தவில்லை கதறவில்லை
ஏன் என்றால்
அவள் வீரணை
ஈன்ற வீரத்தாயல்லவோ..!

வெள்ளி, 14 அக்டோபர், 2016

நீங்க எந்த ராசி?.. வாழ்க்கை ஓகோன்னு இருக்க இவங்களை தான் கல்யாணம் பண்ணிக்கணும்..


ராசிபலன், ஜாதகம் அகியவற்றில் ஈடுபாடு கொண்டவர்கள் பலர் உண்டு. இதை அதிகம் நம்பாதவர்கள் கூட தினமும் குறைந்தபட்சம் வீட்டு காலண்டரில் உள்ள ராசிபலனையாவது பார்ப்பார்கள்.

அதன்படி ஒரு ராசியை சேர்ந்தவர்களின் குணாதிசயம் மற்றும் அவர்கள் எந்த ராசிகாரர்களை திருமணம் செய்தால் வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்பதை பார்க்கலாம்.
துலாம் - சிம்மம்
இந்த இரு ராசியில் உள்ளவர்கள் சமுதாதயத்தில் எல்லோரிடமும் சகஜமாக பழக கூடியவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசுபவர்கள் மற்றும் சிம்மராசிகாரர்கள் கொஞ்சம் பிடிவாதகாரர்களாகவும் துலாம் ராசிகாரர்கள் மற்றவர்களை மனமார பாரட்டும் குணம் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.
மேஷம் - கும்பம்
இந்த ராசியில் கணவன் - மனைவியாக இருப்பவர்கள் எப்போதும் உற்சாகமாக இருப்பார்கள். இவர்கள் புதுமையானம் வித்தியாசமான விடயங்களை மேற்கொள்ள விரும்புபவர்களாக இருப்பார்கள். தனிப்பட்ட சுதந்திரம் ஒருவருக்கொருவர் இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.
மேஷம் - கடகம்
மேஷ ராசிகாரர்கள் எப்போது மனதில் பட்டதை தைரியமாக பேச கூடியவர்கள் மற்றும் ஆற்றல் மிகுந்தவர்கள். தங்கள் துணையான கடக ராசிகாரர்களிடமும் அப்படி இருக்க வேண்டும் என சொல்வார்கள்.
மேஷம் - மீனம்
இரு ராசிகாரர்களும் ஒருவரிடம் ஒருவர் நல்ல புரிதலோடு இருப்பார்கள். இந்த ராசியில் கணவன் மனைவியாக இருப்பவர்களிடம் நல்ல ஆழமான அன்பு ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும்.
ரிஷபம் - கடகம்
இந்த ராசியில் கணவன் மனைவியாக இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் பாராட்டி கொள்ள தவர மாட்டார்கள். கடகம் ராசிகாரருக்கு நல்ல மனதும் அதற்கு ஏற்றார் போல ரிஷப ராசி காரர்கள் நடந்து கொள்வார்கள்.
ரிஷபம் - மகரம்
இந்த ராசியில் உள்ள தம்பதிகளின் அன்பு ஒருவர் மனதில் இன்னொருவர் என்ன நினைக்கிறார் என தெரியும் அளவு அன்யோன்யமாக இருக்கும். ரிஷப ராசிகாரர்கள் மகர ராசி காரர்களின் நல்ல குணத்தை பாரட்டுவதோடு அதை பின்பற்றவும் செய்வார்கள்.
தனுசு - மேஷம்
தன் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை செய்பவர் தனுசு ராசி உள்ளவர்கள்!. மேஷ ராசிகாரர்களும் அதே குணம் உடையவர்கள் தான். இந்த தம்பதிகளுக்குள் எந்த வித ஒளிவு மறைவும் இருக்காது.
கடகம் - மீனம்
இந்த ராசியில் உள்ள தம்பதிகளுக்குள் நல்ல மனோதத்துவ, ஆன்மீக ரீதியான புரிதல் இருக்கும். இந்த ராசியில் உள்ள தம்பதிகள் ஒருவரை ஒருவர் மனம் புண்படாமல் நடந்து கொள்பவர்கள் ஆவர்.
சிம்மம் - தனுசு
இந்த இரு ராசியில் உள்ள தம்பதிகள் அதிகம் வெளியிடங்களுக்கு, பார்ட்டிகளுக்கு போகும் குணம் உடையவர்கள். சிம்ம ராசிகாரர்கள் கொஞ்சம் பிடிவாத குணமுடையவர்களாக இருந்தாலும் நல்ல தன்னம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள்.
கன்னி - மகரம்
கன்னி ராசிகாரர்கள் கொஞ்சம் கம்மியாக எல்லாரிடமும் பேசுபவர்களாக இருந்தாலும் ஒரு தடவை பேச ஆரம்பித்தால் பின்னர் சகஜமாக கலகலப்பாக இருப்பார்கள். அந்த சகஜமான பேச்சே மகர ராசிகாரர்களை அவர்களை நோக்கி ஈர்க்கும்
சிம்மம் - மிதுனம்
இந்த இரு ராசிகளில் உள்ள தம்பதிகளும் புதுமை மற்றும் சாகச விரும்பிகளாக இருப்பார்கள். சிம்ம ஆட்கள் கொஞ்சம் கடின படிவு ஆட்களாக இருந்தாலும் ,மிதுன ராசி காரர்கள் அவர்களை தங்கள் அன்பால் வீழ்த்துவார்கள்.
கும்பம் - மிதுனம்
இந்த இரு ராசியில் உள்ள தம்பதிகள் வாழ்க்கையில் எவ்வளவு மேடு பள்ளங்கள் வந்தாலும் இணைந்தே இருப்பார்கள். கும்ப ராசிகாரர்கள் நல்ல புதுமையாக யோசிப்பவர்களாக இருப்பார்கள் அதை மிதுன ராசிகாரர்கள் ஆமோதிப்பார்கள்.
விருச்சிகம் - சிம்மம்
விருச்சிக ராசிகாரர்கள் கொஞ்சம் பொறாமை குணம் கொண்டவர்களாக திகழ்வார்கள் மற்றும் கோபம் வந்தால் வார்த்தையை கொட்டி விடுவார்கள். ஆனால் அதை சிம்ம ராசிகாரர்கள் திறமையாக சமாளிக்க கூடியவர்கள்.
மிதுனம் - துலாம்
இந்த ராசியில் உள்ள தம்பதிகள் இல்லற இன்பத்தில் பெரும் வேட்கையுடையவர்களாக இருப்பார்கள். இவர்களுக்குள் உள்ள அன்யோன்யம் எப்போதும் புதியதாகவே இருக்கும்.

வியாழன், 13 அக்டோபர், 2016

பொது அறிவுக்கான 100 அறிவியல் கேள்விகளும் பதில்களும்!

பொது அறிவுக்கான 100 அறிவியல் கேள்விகளும் பதில்களும்!

1.பாரசூட்டினைக் கண்டுபிடித்தவர்?ஏ.ஜே.கார்னரின்
2.இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் யார்?இளவரசர் பிலிப்
3.சயீக் ரஷீத் பாகிஸ்தானின் எந்தக் கட்சித் தலைவர்?அவாமி முஸ்லிம் லீக்
4.பாகிஸ்தானின் முன்னாள் மந்திரி சயீக் ரஷீத் எந்த தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தார்?லஸ்கர்-இ-தொய்பா
5.இந்திய சினிமாவின் முதல் பேசும் படம்?ஆலம் ஆரா (1931)
6.செஞ்சிக் கோட்டை ______________________ துறையால் பாடுகாக்கப்படுகிறது?தொல் பொருள் ஆய்வுத் துறை
7.புகைப்பிடித்தால் என்ன நோய் வரும்?புற்றுநோய்
8.புகைக்கும் பொருட்கள் எதனால் செய்யப்படுகிறது?புகையிலை
9.காமராசர் பிறந்த ஆண்டு?1903
10.காமராசரின் தந்தை பெயர் என்ன?குமாரசாமி
11.அனைத்து மக்களுக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும். கல்வி தான் வீட்டையும்,நாட்டையும் உயர்த்தும் என சட்டம் கொண்டு வந்து செயல்படுத்தியவர் யார்?காமராசர்
12.காமராசர் சிறையில் எத்தனை நாட்கள் கழித்தார்?3000
13.காமராசர் எந்த ஆண்டு தமிழக முதல்வரானார்?1954
14.காமராசரின் பிறந்த நாள் எப்படி கொண்டாடப்படுகிறது?கல்வி வளர்ச்சி நாள்
15.திருச்சி பாரத மிகுமின் நிறுவனம் யார் ஆட்சிக் காலத்தில் உருவானது?காமராசர்
16.“கல்விக் கண் திறந்த வள்ளல்” என்று காமராசரை பாராட்டியது யார்?பெரியார்
17.வட இந்திய செய்தித்தாள்கள் காமராசரை எப்படி போற்றினர்?காலா காந்தி
18.பள்ளியில் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்?காமராசர்
19.உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது எது?தீக்கோழி
20.தொலைக்காட்சி எந்த ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டது?1930
21.தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் யார்?சுவாரிகன்
22.மாம்பழத்திற்கு புகழ்பெற்ற நகரம்?சேலம்
23.தேனீக்களில் எத்தனை பிரிவுகள் உள்ளன?3 (இராணித் தேனீ, ஆண் தேனீ,வேலைக்காரத் தேனீ)
24.தேனீக்கள் தங்கள் கூட்டை எங்கே அமைத்துக் கொள்ளும்?மலைப் பொந்து
25.வேலைக்காரத் தேனீக்களின் வேலை என்ன?தேன் எடுத்தல்
26.தேன் கூட்டில் மற்றொரு தேனீ தோன்றினால் என்ன நிகழும்?வேறு கூடு கட்டும்
27.மனிதர்களால் நேரடியாக செய்ய இயலாத பல கடினமான செயல்களை எளிதாகவும், சரியாகவும் ______________ செய்யும்?ரோபோ
28.நம் நாட்டில் ரோபோக்களின் பயன்பாடு ________________?பெருமளவில் இல்லை
29.செஞ்சிக் கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது?விழுப்புரம்
30.புவியில் காணப்படும் நீரில் கடல் நீரின் அளவு?97.3%
31.1984-ல் மத்திய பிரதேசத்தில் நச்சு வாயு தாக்கிய நகரம்?போபால்
32.வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?1972
33.எந்த ஒலிம்பிக் போட்டியில் அதிக அளவிலான வீரர்கள் கலந்து கொண்டனர்?2000 (சிட்னி) 10,651 வீரர்கள்
34.பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற இந்தியர்?அமர்த்தியா சென்
35.பொருளாதார அடிப்படை வளர்ச்சி என்பது?உற்பத்தி, நுகர்ச்சி, பகிர்வு
36.போக்குவரத்து மற்றும் தொழில்கள் என ஒரு கருத்தினை மையமாகக் கொண்டு வரையப்படும் படங்கள் ___________________ படங்கள் எனப்படும்?கருத்துசார்
37.”அவணி சிம்மன்” என்றும் ”உலகின் சிங்கம்” எனவும் புகழப்பட்டவர்?சிம்ம விஷ்ணு
38.கார் படை மேகங்களானது ___________________ மேகங்களாகும்?செங்குத்தான
39.அமெரிக்க ஐக்கிய நாட்டின் வெப்ப தல காற்றின் பெயர்?சின்னூக்
40.யோகா முறையின் தந்தை என்றழைக்கப்படுபவர்?பதஞ்சலி முனிவர்
41.தன்னுடைய எடையைப் போல் இருபது மடங்கு எடையைத் தூக்கும் ஆற்றல் மிக்க உயிரினம்?எறும்பு
42.உலகிலேயே பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?இந்தியா
43.தீக்குச்சி தயாரிக்கப் பயன்படும் மரம்?பைன்
44.உலக தண்ணீர் தினமாகக் கொண்டாடப்படும் நாள்?மார்ச் 22
45.முதுமலை சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா அமைந்துள்ள மாவட்டம்?நீலகிரி
46.இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம்?ராஜஸ்தான்
47.சூறைக்காற்றினை அமெரிக்க ஐக்கிய நாட்டில் _____________ என அழைக்கின்றனர்?டுவிஸ்டர்
48.உலகில் அதிக அளவு சூரிய ஆற்றலை உற்பத்தி செய்யும் நாடு?ஜெர்மனி
49.தமிழ்நாட்டில் ________________ என்னும் இடத்தில் பழுப்பு நிலக்கரி அதிக அளவில் கிடைக்கிறது?நெய்வேலி
50.சீனாவில் உள்ள யாங்டிசி ஆற்றின் குறுக்கே முப்பள்ளத்தாக்கு அணையில்_____________ மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது?நீர் மின்சக்தி
51.தங்க கழுத்துப் பட்டை பணியாளர்கள் என அழைக்கப்படுபவர்?ஆலோசனை வழங்குபவர்
52.”ஜாரவாஸ்” எனப்படும் தொன் முதுமக்கள் காணப்படும் இடம்?அந்தமான் நிக்கோபார்
53.____________ ஆம் ஆண்டை ஐ.நா. சபை உலக பெண்கள் ஆண்டாக அறிவித்துள்ளது?1978
54.பணத்தில் செலவழிக்கப்படாமல் இருக்கும் ஒரு பகுதியே ____________ ஆகும்?சேமிப்பு
55.__________ தான் இடையீட்டுக் கருவியாக செயல்படுகிறது?பணம்
56.ஆண்டுதோறும் _____________ மாதத்தின் முதல் வாரம் சாலைப் பாதுகாப்பு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது?ஜனவரி
57.கணிப்பொறி மொழியைக் கண்டுபிடித்தவர்?கிரேஸ் கோப்பர்
58.இந்தியாவில் உள்ள மிகப்பெரிய உப்பு நீரைக் குடிநீராக்கும் திட்டம் அமைந்துள்ள இடம்?மீஞ்சூர்
59.போலந்து நாட்டின் தலைநகர்?வார்சா
60.கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரிய போட்டி?விம்பிள்டன்
61.ரபேல் நடால் எந்த நாட்டைச் சார்ந்தவர்?ஸ்பெயின்
62.லுகாஸ் ரோசல் எந்த நாட்டைச் சார்ந்தவர்?செக் குடியரசு
63.மிகப் பழமையான அண்ணா பல்கலைக்கழகம் எங்குள்ளது?கிண்டி
64.எந்த வரியிலிருந்து உள்ளாட்சி நிர்வாகத்திற்கு வருமானம் வருவதில்லை?மதிப்புக் கூட்டப்பட்ட வரி
65.ஊர் மன்றக் கூட்டங்கள் ஆண்டுக்கு எத்தனை முறை கூடுகிறது?4
66.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த மாவட்டம் எது?புதுக்கோட்டை
67.சந்திரனின் மறுபக்கத்தை “லூனா 3” முதன்முதலில் புகைப்படம் எடுத்த வருடம்?1959
68.கோடைக்காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் நாடு எது?ஆஸ்திரேலியா
69.சூறாவளிகள் அதிகமாக உருவாகும் பெருங்கடல்?அட்லாண்டிக்
70.உலகின் நீண்ட கடற்கரை எது?மியாமி
71.தேசிய கீதம் முதன்முறையாக பாடப்பட்ட தினம்?டிசம்பர் 27 1911
72.உலகிலேயே அதிக அளவு அணுசக்தியைப் பயன்படுத்தும் நாடு?பிரான்ஸ்
73.ஐந்தாம் நிலைத் தொழில் புரிவோர் யார்?திட்டம் வகுப்போர்
74.உலகின் மிக ஆழமான மரியானா அகழி அமைந்துள்ள பெருங்கடல்?பசிபிக்
75.மிக அதிக உயரத்தில் உள்ள நகரத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி எது?மெக்ஸிகோ (7349 அடி)
76.விம்பிள்டன் பட்டத்தை 6 முறை வென்றவர் யார்?ரோஜர் பெடரர்
77.ரோஜர் பெடரர் எந்த நாட்டைச் சார்ந்தவர்?சுவிட்சர்லாந்து
78.உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் யார்?யோகன் பிளேக் (100 மீட்டரை 9.75விநாடிகளில் கடந்தார்)
79.எந்த நாடுகளில் மிகப்பரந்த பாக்ஸைட் கனிம இருப்புகள் காணப்படுகின்றன?ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் ஜமைக்கா
80.உலகின் மிகப்பெரிய உள்நாட்டு மீன்பிடி ஏரி எது?டோன் லேசாப்
81.மியான்மர் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாடு எது?பர்மா
82.முல்லைப் பெரியாறு அணையினைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் யார்?பென்னி குவிக்
83.”சுதர்மம்” என்றால் என்ன?கடமை உணர்வு
84.மருத்துவர்கள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?ஜூலை 1
85.மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் நிலதங்கா கிராமத்தில் நடைபெறும் திருவிழா?ஹீல்
86.மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் நிலதங்கா கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின பெண்களின் பெயர்?சந்தால்
87.மத்திய பிரதேச மாநிலத்தின் எல்லை மாநிலங்கள்?சட்டீஸ்கர், மஹாராஷ்டிரா,குஜராத், ராஜஸ்தான்
88.மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் என்ன?போபால்
89.மத்திய பிரதேச மாநிலம் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?1956
90.மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை?230
91.மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்த லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை?29
92.மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்த ராஜ்யசபா தொகுதிகளின் எண்ணிக்கை?11
93.மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை?50
94.மத்திய பிரதேச மாநிலத்தின் மாநில மொழி?ஹிந்தி
95.மத்திய பிரதேச மாநிலத்தில் பாயும் முக்கிய நதிகள்?நர்மதா, தப்தி, மகாநதி
96.மத்திய பிரதேச மாநிலத்தின் மாநில விலங்கு?சதுப்பு நில மான்
97.மத்திய பிரதேச மாநிலத்தின் மாநில பறவை?பாரடைஸ் பிளைகேட்ச்சர்
98.அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா எந்த மாகாணத்தைச் சார்ந்தவர்?இல்லினாய்ஸ்
99.இந்தியாவின் முதல் ராணுவ அமைச்சர் யார்?என்.கோபாலசாமி ஐயங்கார்
100.தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம்?காளிதாஸ்