புதன், 19 அக்டோபர், 2016

அவள் ஒரு வீரத்தாய்.!!


அவள் ஒரு வீரத்தாய்.!!

அந்தி வானம்
சாயும் நேரம்
யாா் வரவை
எதிர்பாா்த்திருக்கிறாள்
அன்பு தாய் இவள்…
போா்க்களம் சென்ற
மைந்தன் மீண்டும்
வருவான் என எண்ணியே
இவள் காத்திருப்பு…!
சில நாட்கள், வாரங்கள்
வருடங்களாகியும்
அன்னை இவள்..!
ஏக்கப்பாா்வை கலையவில்லை.!!
உற்றாா் உறவினா்
என பலா் புடைசூழ
காத்திருப்புச் செய்தி,
அது இடி என அவள்
காதுகளின் ஊடாக
மின்னலென
நெஞ்சை தாக்கியது
என் மகன் வீரமரணமா…??
ஓஓஓஓஓஓ….!!
அவள் அழவில்லை
கத்தவில்லை கதறவில்லை
ஏன் என்றால்
அவள் வீரணை
ஈன்ற வீரத்தாயல்லவோ..!