ஞாயிறு, 23 அக்டோபர், 2016

25ம் திகதி செய்வாய்க் கிழமை வடபகுதி எங்கும் பூரண ஹர்த்தால்!! பல்கலைக்கழக மாணவர்கள் கொலைக்கு கண்டனம்!! Mathees.com


கொக்குவில் பகுதியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கைப் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாணம் உட்பட வடபகுதியில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முழுமையான ஹர்த்தாலுக்கு

அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அனைத்து தமிழ்க்கட்சிகளும் ஒன்று கூடி இந்த முடிவை எடுத்துள்ளன. நீதிமன்றங்கள் உட்பட்ட அரச நிறுவனங்கள் பாடசாலைகள், வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள், அரச தனியார் போக்குவரத்துச் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு இக் ஹர்த்தால் இடம்பெறவுள்ளது.

1.இலங்கை தமிழரசுக் கட்சி

2.தமிழீழ விடுதலை இயக்கம்

3.ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி

4.தமிழர் விடுதலைக் கூட்டணி

5.தமிழீழ மக்கள் விடுதலை கழகம்

6.தமிழர் சமூக ஜனநாயக கட்சி

7.தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து இக் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளன.