உலகில் பெறுமளவு சாதித்து பணக்காரராக இருக்கும் சிலர் தூங்குவதற்கு முன் என்ன செய்கிறார்கள் என்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெறும் 4 மணி நேரம் தான் தூங்குவாராம்.
உறங்குவதற்கு முன் இவர்கள் செய்யும் சில பழக்கவழக்கங்கள் இவை தான்..
பில் கேட்ஸ்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நிறுவிய பில் கேட்ஸ் தூங்குவதற்க்கு முன் கண்டிப்பாக அரை மணி நேரம் புத்தகம் படிப்பாராம். இரவு எவ்வளவு தாமதமாக ஆனாலும் அரை மனி நேரம் படித்துவிட்டே உறங்க செல்வாராம்.

Sheryl Sanadberg
பேஸ்புக்கில் COOவாக இருக்கும் இவர் உறங்க செல்வதற்கு முன் கைபேசியை அனைத்துவிட்டு தான் தூங்க செல்வாராம்.

Arianna Huffington
அமெரிக்காவை சேர்ந்த இவர் ஒரு பத்திரிக்கையாளர். 2014ஆம் ஆண்டு உலகில் உள்ள 100 சக்திவாய்ந்த பெண்களில் இவரும் ஒருவர். இவர் உறங்க செல்வதற்கு முன் இவருடைய கைபேசியை அனைத்துவிட்டு, நல்ல சூடான நீரில் ஒரு குளியல் போட்டுவிட்டு புத்தகம் படித்துவிட்டு தான் உறங்குவாராம்.

Oprah Winfrey
அமெரிக்கவை சேர்ந்த இவர் ஒரு நடிகை, தொகுப்பாளினி, தொழிலதிபர் என பல துறைகளில் கால்பதித்த இவர் தினமும் இரண்டு வேலை தியானம் செய்வாராம்.

Gwyneth Paltrow
அமெரிகாவை சேர்ந்த இவர் ஒரு நடிகை, பாடகி, சமையல் புத்தகம் எழுதுவது, பேஷ்ன் ஷோக்களில் கோச் என பல துறைகளில் சாதித்த இந்த பெண்மணி உறங்க செல்வதற்கு முன் தலையில் மசாஜ் செய்துகொள்வது வழக்கமாக கொண்டுள்ளார்.

Elon Musk
அமெரிக்க தொழிலதிபரான இவர் SpaceX, Tesla போன்ற நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். இவர் தினமும் டயட் coco cola 8 கேன் குடிப்பதோடு உறங்குவதற்கு 6 மணி நேரத்திற்கு முன் caffeine என்ற போதைபொருளை உபயோகிப்பாராம். மேலும், இவர் எத்தனை மணி நேரம் தூங்குகிறார் என்று இவரது கைபேசியில் உள்ள ஆப்பின் மூலன் தெரிந்துகொள்வாராம்.

Stephen King
அமெரிக்காவை சேர்ந்த எழுத்தாளாரான இவர் திகல், மாயை, கற்பனை கதைகள் எழுத்தாளர் ஆவார். இவர் உறங்கு செல்வதற்கு முன் பல்துலக்குவதோடு, கட்டாயம் அவர் கைகளை கழுவி கொள்வாராம்.

Kenneth Chenault
அமெரிக்க தொழிலதிபர், Fortune 500 நிறுவனத்தின் நிறுவனரும் ஆன இவர் உறங்க செல்வதற்கு முன் நாளை என்ன செய்ய வேண்டும் என்ற மூன்று விடயங்களை கட்டாயம் எழுதிவைப்பாராம்.

Eminem
அமெரிக்காவை சேர்ந்த இவர் ராப் சிங்கர், பாடல் எழுத்தாளர், நடிகரும் ஆவார். இவர் தூங்கும் அறை இருட்டாக இருக்க வேண்டுமாம். அப்போது தான் நல்ல உறக்கம் வரும் என்று நம்பும் இவர் கட்டாயம் எல்லா லைட்களையும் அனைத்துவிட்டு தான் உறங்குவாராம்.

ஒபாமா
அமெரிக்காவின் 44வது அதிபராக இருந்த ஓபாமா முறையாக தூங்குவராம். இவர் உறங்குவதற்கு முன் நல்ல புத்தகங்களை படிப்பதோடு, சில நேரங்களில் டிவி நிகழ்ச்சியையும் பார்த்துவிட்டு உறங்குவாராம்.
