2017 இல் இலங்கைக்கு சூட்டப்படவுள்ள புதிய பெயர் – ஐ.நாவில் வைத்து ஜனாதிபதி அறிவிப்பு
இலங்கை எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஏழ்மையில் இருந்து விடுதலை அடையும் ஆண்டாக பெயரிடப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 1.20 மணியளவில், ஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றியிருந்தார்.
ஆயுபோவன், வணக்கம், அஸ்ஸலாமு அலைக்கும் என தெரிவித்த ஜனாதிபதி, அங்கு தனது உரையினை ஆரம்பித்தார்.
இதன்போது அவர், இலங்கை நாட்டின் ஜனாதிபதியாக இந்த கூட்டத்தொடரில் கலந்துக்கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்திருந்தார்.
புதிய அரசாங்கம் உருவாகி 20 மாதங்கள் கடந்துள்ள நிலையில் மக்களிடம் காணப்பட்ட பயம் மற்றும் சந்தேகத்துடான வாழ்க்கை முறையினை மாற்றி மக்களுக்கு வேண்டிய சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது ஆட்சியில் இலங்கையினை உலகில் உள்ள மிகவும் சந்தோசமான நாடுகளினுள் ஒன்றாக மாற்றி மக்களிடம் கையளிப்பதே குறிக்கோளாக கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.