திங்கள், 29 பிப்ரவரி, 2016

ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்



நட்சத்திரங்கள் மொத்தம் 27.இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்..

உதாரணமாக 27 நட்சத்திரங்களின் பட்டியல் கொடுத்துள்ளேன்.


இவற்றில் உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 3,5,7,12,21,25 வது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வந்தால் பிரிவு,மனவருத்தம்,விவாகரத்து ,குறை ஆயுள்,குழந்தை இன்மை,அசுபம் போன்ற பலன்கள் ஏற்படலாம்.

இவை தவிர்த்த நட்சத்திரங்களில் முக்கியமான பொருத்தங்களான...,
தினபொருத்தம்,கணபொருத்தம்,யோனிபொருத்தம்,ராசி பொருத்தம்,ரஜ்ஜு பொருத்தம்வர வேண்டும்..இவை இல்லாதவை பொருத்தம் இல்லை..பத்து பொருத்தங்களில் இந்த ஐந்து பொருத்தங்கள் மிக அவசியம்.
தினப்பொருத்தம்;
பெண் நட்சத்திரம் தொடங்கி ஆண் நட்சத்திரம் வரை எண்ணி வர,2,4,6,8,9,11,13,15,18,20,24,26 வது நட்சத்திரமாக வந்தால் தினப்பொருத்தம் உண்டு..இதன் பலன் செல்வாக்குடன் வாழ்தல்,தம்பதிகள் ஒற்றுமை.
கணப்பொருத்தம்;
செல்வ வளத்துடன் வாழ்தல் குறிக்கும் பொருத்தம்,இருவர் நட்சத்திரமும் ராட்ஷ கணமாக இருத்தல் கூடாது..தேவகணம்,மனுஷ கணம்,ராட்ஷகணம் என பிரிக்கப்பட்டிருக்கும்..தேவ கணம்-தேவ கணம்,மனுஷ கணம்-மனுஷ கணம் பொருத்தம் உண்டு.

மகேந்திரபொருத்தம்;
பெண் நட்சத்திரம் தொடங்கி,எண்ணும்போது ஆன் நட்சத்திரம்1,4,7,10,13,16,19,22,25 வது நட்சத்திரமாக வரக்கூடாது..இதன் பலன் குழந்தை பாக்யம்.ஆயுள் விருத்தி.இந்த பொருத்தம் வந்தாலும் ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன்,குரு நிலையை ஆராய வேண்டும்..லக்னத்துக்கு 5ஆம் இடத்தையும் ராசிக்கு 5ஆம் இடத்தையும் பார்க்கனும்.அதில் ராகு ,கேது உட்பட ஏதேனும் பாவ கிரகங்கள் இருக்கிரதா என கவனிக்கவும்.ஆணின் ஜாதகத்தில் சுக்கிரனும்,பெண் ஜாதகத்தில் குருவும் நன்றக இருந்தால் குழந்தை பாக்யத்தில் பிரச்சினை இருக்காது.5ஆம் இடத்து அதிபதி பாவ கிரக தொடர்பில் இருக்கிறாரா என்பதையும் தகுந்த ஜோதிடரின் துணையுடன் ஆராய வேண்டும்..இது சரியில்லாவிட்டால் மகேந்திர பொருத்தம் இருந்தாலும் குழந்தை பாக்யத்தில் பிரச்சினை இருக்கும்.
யோனி பொருத்தம்;
எட்டலை,பத்தலை பிரச்சினை வரக்கூடாது என்றால் இந்த பொருத்தம் அவசியம்.தாம்பத்தியம் செக்ஸ் திருப்தியை பற்றி சொல்லக்கூடிய முக்கியமான பொருத்தம்...
.ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஆடு,குதிரை,சிங்கம் என யோனி பிரிக்கப்பட்டிருக்கும்...அதற்கு பகையான யோனியும் சொல்லப்பட்டிருக்கும்..பகை யோனி நட்சத்திரங்களை சேர்க்க கூடாது......
பாம்பு என ரொகிணிக்கு கொடுக்கப்பட்டிருக்கும்..எலி என பூரத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கும்..பாம்பு, எலியை கண்டால் விடுமா விழுங்கிவிடும்..ரோகிணிக்கு பூரம் .அடங்கித்தான் போக முடியும்...நாய் ,பூனை என சொல்லப்பட்டிருக்கும் நட்சத்திரங்களை சேர்த்தால் குடும்பத்தில் நிம்மதி இருக்குமா.இதெல்லாம் கவனிக்க வெண்டும் அதுதான் யோனி பொருத்தம்.
ராசிபொருத்தம்;
பெண் ராசிக்கு புருஷன் ராசி வது ராசியானால் மரணம்,3 வது ராசி துக்கம்,4 வது ஏழ்மை,5 வது ராசி வைதவ்யம்.வது ராசி புத்திர நாசம்,7 வது உத்தமம்.மாங்கல்யம்,ஆயுள் விருத்தி,8 வது அதிக புத்திர லாபம்,9 வது செளமங்கல்யம்,10 வது ஐஸ்வர்யம்,11வது சுகம்,12 வது ஆயுள் விருத்தி,இருவருக்கும் ஒருவருக்கொருவர் ராசியோ லக்னமோ மறையக்கூடாது அதாவது 6,8,12ல் இருக்க கூடாது..அப்படி இருந்தால் ஒத்துப்போகாது.

ரஜ்ஜு பொருத்தம்;
ரோகிணி சந்திரன் நட்சத்திரம்..அஸ்தம் சந்திரன் நட்சத்திரம்.இப்படி ஒரே கிரகத்தின் நட்சத்திரங்களை இனைக்க வேண்டாம்..மாங்கல்ய பொருத்தம் என்னும் இருவரது ஆயுளை பற்றி சொல்லும் முக்கியமானபொருத்தம்.27 நட்சத்திரங்களையும் சிரசு ரஜ்ஜு,பாத ரஜ்ஜு,தொடை ரஜ்ஜு,உதர ரஜ்ஜு,என பிரித்திருப்பார்கள்..கணவன்,மனைவி நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவில் இருந்தால் கண்டம்,நஷ்டம்,விபத்து என சொல்கிறது..இரண்டு நட்சத்திரங்களும் வேறு வேறு ரஜ்ஜுவில் இருந்தால் பொருத்தம் உண்டு.

பொருத்தம் சுலபமாக பார்க்க உதவும் அட்டவணை..

பெண் நட்சத்திரப்படி பொருத்தம் பார்ப்பதே சரியானது. 

நட்சத்திர பொருத்தம் பார்த்தாலும் அவசியம் ஜாதகத்தை ஆராய்ந்து திருமணம் செய்வது நல்லது....இருவருக்கும் லக்னத்துக்கு 7ஆம் இடம் சந்திரனுக்கு 7ஆம் இடம் ,பார்க்கனும்..4ஆம் இடமாகிய ஒழுக்க ஸ்தானத்தை பார்க்கனும்.10 ஆம் இடமாகிய்ட தொழில் ஸ்தானம்,2 ஆம் இடமாகிய குடும்ப ஸ்தானம்...மாமனார் ,மாமியார் ஸ்தானம்,குடும்ப ஒற்றுமை,குணநலன் எப்படி என்ற விபரமெல்லாம் ஜாதகத்தில் தெளிவாக தெரியும்.இருவருக்கும் என்ன திசை நடக்கிறது..? அந்த திசை யோகமான திசையா நஷ்டம் தரும் திசையா என்பதை ஆராய்ந்து செய்தால்தான் திருமணம் இனிக்கும்..!!
தொகுப்பு- மதி
னைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்', 'கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்' என்று சான்றோர்கள் சொல்லி வைத்துள்ளனர். ஆயிரம் காலத்துப் பயிர் எனப்படும் திருமண வாழ்வு சிறக்க முன்னோர்கள் சில வழிமுறைகளை கடைப்பிடித்தனர். பணப்பொருத்தம் பார்ப்பதை விட மனப்பொருத்தமும், மண் பொருத்தமும், மங்கல நாண் சூட நட்சத்திரப் பொருத்தமும் பார்க்க வேண்டும் என்று கண்டறிந்தனர். 'வாழ்பவனுக்கு நட்சத்திரம்' என்று கண்டறிந்தனர். 'நம்பிக்கையூட்டும் நட்சத்திரப் பொருத்தங்கள் வாயிலாக நாம் வரனைத் தேர்ந்தெடுக்கலாம். வரம் தரும் தெய்வம் 'வரன்' தரவேண்டுமானால் அதற்குரிய வழிபாடுகளையும் முன்னோர்கள் கண்டறிந்தனர்.

எனவே திருமணம் பேச முன்வரும் போது முதலில் நட்சத்திரப் பொருத்தம் நன்றாக இருக்கிறதா என்று பார்த்து ஜாதகம் வாங்குவதை முன்னிட்டு கீழ்கண்ட அட்டவணை வழங்கப்படுகிறது. அதன்பிறகு வரன்கள் ஜாதகத்தில் தசாபுத்தி சந்திப்பு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஏதேனும் தோஷங்கள் உள்ளதா என்று பார்க்க வேண்டும், செவ்வாய் தோஷம், சனி தோஷம், சர்ப்ப தோஷம் மற்றும் கிரக தோஷங்கள் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். அவற்றைப் பரிகாரங்கள் மூலம் நிவர்த்தி செய்ய முடியுமானால் அதைப் பின்பற்றலாம். அல்லது சுத்த ஜாதகங்களைத் தேர்ந்தெடுத்து அதிக பொருத்தம் அமைந்த வரனை பரிசீலித்து செய்தால் வாழ்க்கை வசந்தமாகும் இல்லறம் நல்லறமாகும். 

வருத்தமில்லாத வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் திருமணப் பொருத்தங்கள் மொத்தம் பத்தாகும். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணத்தை முன்னிட்டு பொருத்தத்தை குறிக்கும். இந்தப் பத்துப் பொருத்தங்கள் நீங்கலாக கிரக தோஷங்கள் இருக்கின்றனவா என்றும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து ஆணின் நட்சத்திரத்தை எண்ணிப் பார்ப்பது வழக்கம்.

குறிப்பாக கணப் பொருத்தம் என்பது ஒருவரின் குணத்தைக் குறிக்கும். ரஜ்ஜூ என்பது மாங்கல்யப் பொருத்தம், மகேந்திரம் என்பது புத்திர பாக்கியத்திற்குரிய பொருத்தம். இவற்றைப் போல ஒவ்வொரு பொருத்தமும் ஒவ்வொன்றைக் குறிக்கும் விதத்தில் உள்ளது. இவற்றில் முக்கியப் பொருத்தங்கள் பலவும் பொருந்தியுள்ளதா என்று பார்த்து முடிவெடுப்பது நல்லது.

இந்தப் பத்துப் பொருத்தங்கள் நீங்கலாக மற்ற பொருத்தங்களையும் தம்பதியர்கள் இருவருடைய ஜாதகத்தையும் வைத்துப் பார்த்து தசாபுத்தியறிந்து பிறகு திருமணம் செய்ய முடிவு செய்தால் முத்தான வாழ்க்கை மலரும். முன்னேற்றமும் கிட்டும்.

பத்துப்பொருத்தங்கள்  எவை  எவை?

1. தினம், 2. கணம், 3. மகேந்திரம், 4. ஸ்தீரி தீர்க்கம், 5. யோனி,
6. ராசி, 7. ராசிஅதிபதி, 8. வசியம், 9. ரஜ்ஜூ, 10. வேதை


பெண்ணின் நட்சத்திரம் அஸ்வினி (மேஷ ராசி)

வ.  ஆணின் நட்சத்திரம் ராசி அமையும் பொருத்தங்கள், மொத்தப்பொருத்தம்

                                                                           
1.    அஸ்வினி (மேஷம்)    பொருத்தம் உண்டு                 
2.    பரணி (மேஷம்)   - அமையும்பொருத்தங்கள் - 1, 2, 5, 6, 7, 9, 10  மொத்தப்பொருத்தம்  -  7
3.    கார்த்திகை 1-ம் பாதம் (மேஷம்) - அமையும்பொருத்தங்கள் -  2, 5, 6, 7, 9, 10  மொத்தப்பொருத்தம் - 6
4.       கார்த்திகை 2, 3, 4-ம் பாதம் (ரிஷபம்) - அமையும்பொருத்தங்கள் - 2, 5, 7, 9, 10   மொத்தப்பொருத்தம் - 5
5.    ரோஹிணி (ரிஷபம்)  - அமையும்பொருத்தங்கள்   1, 2, 3, 5, 7, 9, 10 மொத்தப்பொருத்தம்   7
6.      மிருகசீரிஷம் 1, 2-ம் பாதம் (ரிஷபம்)  - அமையும்பொருத்தங்கள் -  2,5,7,9,10  மொத்தப்பொருத்தம்  5
7.       மிருகசீரிஷம் 3, 4-ம் பாதம் (மிதுனம்)  - அமையும்பொருத்தங்கள்  - 2,5,9,10  மொத்தப்பொருத்தம்  4
8.    திருவாதிரை (மிதுனம்) - அமையும்பொருத்தங்கள்  - 1,2,5,9,10 - மொத்தப்பொருத்தம் -  5
9.    புனர்பூசம் 1,2,3-ம் பாதம் (மிதுனம்) - அமையும்பொருத்தங்கள் - 2,3,5,9,10 - மொத்தப்பொருத்தம்  5
10.    புனர்பூசம் 4-ம் பாதம் (கடகம்) - அமையும்பொருத்தங்கள்  - 2,3,5,7,9,10 -  மொத்தப்பொருத்தம் - 6
11.    பூசம் (கடகம்)   - அமையும்பொருத்தங்கள் - 1,2,4,5,7,9,10 - மொத்தப்பொருத்தம் - 7
12.     ஆயில்யம் (கடகம்) - அமையும்பொருத்தங்கள் -   ரஜ்ஜூ தட்டும்    - மொத்தப்பொருத்தம் -
13.     மகம் (சிம்மம்) - அமையும்பொருத்தங்கள் - ரஜ்ஜூ தட்டும் -    மொத்தப்பொருத்தம்- 
14.     பூரம் (சிம்மம்) - அமையும்பொருத்தங்கள்  -   1,2,4,5,7,8,9,10 -  மொத்தப்பொருத்தம் - 8
15.    உத்திரம் 1-ம் பாதம் சிம்மம் - அமையும்பொருத்தங்கள்  - 2,4,5,7,8,9,10 - மொத்தப்பொருத்தம் -  8
16.    உத்திரம் 2,3,4-ம் பாதம் (கன்னி)  - அமையும்பொருத்தங்கள் -  2,4,5,9,10  மொத்தப்பொருத்தம் - 5
17.  ஹஸ்தம் (கன்னி)  - அமையும்பொருத்தங்கள் -  1,2,3,4,9,10 -   மொத்தப்பொருத்தம் - 6
18.    சித்திரை 1,2-ம் பாதம் (கன்னி)  - அமையும்பொருத்தங்கள் -  2,4,5,9,10 மொத்தப்பொருத்தம்  - 5
19.    சித்திரை 3,4-ம் பாதம் (துலாம்)  - அமையும்பொருத்தங்கள் -  2,4,5,6,7,9,10  மொத்தப்பொருத்தம் -  7
20.     சுவாதி (துலாம்) - அமையும்பொருத்தங்கள்  -  1,2,4,6,7,9,10 -  மொத்தப்பொருத்தம் - 7
21.    விசாகம் 1,2,3-ம் பாதம் (துலாம்)  - அமையும்பொருத்தங்கள்  - 2,3,4,5,6,7,9,10 -  மொத்தப்பொருத்தம் - 8
22.    விசாகம் 4-ம் பாதம் (விருச்சிகம்)   - அமையும்பொருத்தங்கள் - 2,3,4,5,7,8,9,10    மொத்தப்பொருத்தம் - 8
23.    அனுஷம் (விருச்சிகம்)  - அமையும்பொருத்தங்கள்  - 1,2,4,5,7,8,9,10 - மொத்தப்பொருத்தம் - 8
24.    கேட்டை (விருச்சிகம்)  - அமையும்பொருத்தங்கள்  - ரஜ்ஜூ தட்டும் -   மொத்தப்பொருத்தம் - 
25.    மூலம் (தனுசு)- அமையும்பொருத்தங்கள் - ரஜ்ஜூ தட்டும்  - மொத்தப்பொருத்தம் - 
26.   பூராடம் (தனுசு)    - அமையும்பொருத்தங்கள் - 1,2,4,5,6,7,9,10   மொத்தப்பொருத்தம்  - 8
27.    உத்ராடம் 1-ம் பாதம் (தனுசு) -  அமையும்பொருத்தங்கள் - 2,4,5,6,7,9,10  மொத்தப்பொருத்தம் - 7
28.    உத்ராடம் 2,3,4-ம் பாதம் (மகரம்)  - அமையும்பொருத்தங்கள் -  2,4,5,6,7,9,10   மொத்தப்பொருத்தம் - 7
29.    திருவோணம் (மகரம்) -  அமையும்பொருத்தங்கள் - 1,2,3,4,5,6,7,9,10 மொத்தப்பொருத்தம்  -  9
30.  அவிட்டம் 1,2-ம் பாதம் (மகரம்) - அமையும்பொருத்தங்கள்  -  2,4,5,6,7,9,10  மொத்தப்பொருத்தம் - 7
31.    அவிட்டம் 3,4-ம் பாதம் (கும்பம்) - அமையும்பொருத்தங்கள் - 2,4,5,6,7,9,10 மொத்தப்பொருத்தம்  - 7
32.    சதயம் (கும்பம்)  - அமையும்பொருத்தங்கள் 1,2,4,5,6,7,9,10 மொத்தப்பொருத்தம்  - 8
33.    பூரட்டாதி 1, 2, 3-ம் பாதம் (கும்பம்) -  2,3,4,5,6,7,9,10 - மொத்தப்பொருத்தம் - 8
34.    பூரட்டாதி 4-ம் பாதம் (மீனம்)  -அமையும்பொருத்தங்கள் -  2,3,4,5,6,7,9,10 மொத்தப்பொருத்தம்  - 8
35.    உத்திரட்டாதி (மீனம்) - அமையும்பொருத்தங்கள்  - 1,2,4,5,6,7,9,10 மொத்தப்பொருத்தம் -  8
36.    ரேவதி (மீனம்)  அமையும்பொருத்தங்கள்   ரஜ்ஜூ தட்டும்.    - மொத்தப்பொருத்தம்
திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி....



இந்தியாவில் திருமணத்திற்கு ஜோதிடங்கள் வழியில் திருமணப் பொருத்தம் பார்க்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. திருமணத்திற்குத் தயாராய் இருக்கும் ஆண், பெண் ஆகியோர் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு பன்னிரண்டு வகையான பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இவற்றில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இல்லையென்றால் ஜாதகப் பொருத்தமில்லை என்று அந்தத் திருமணம் தவிர்க்கப்படுகிறது. ஜாதகத்தின் வழியில் பார்க்கப்படும் அந்தப் பொருத்தங்கள்தான் என்ன?

1. தினப் பொருத்தம்

பெண் நட்சத்திரம் முதல் ஆணுடைய நட்சத்திரம் வரை கண்ட தொகையை 9- ஆல் வகுத்தால் மீதம் 3, 5, 7 வந்தால் அசுபம் மற்றவை சுபம்.

2. கணப் பொருத்தம்

தேவ கணம்

அசுவினி, மிருகசீரிஷம், புனர்வசு, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி

மனித கணம்

பரணி, ரோகிணி, திருவாதிரை, பூராடம், பூரட்டாதி, உத்தரம், உத்ராடம், உத்ரட்டாதி

ராட்சஷ கணம்

கார்த்திகை, மகம், விசாகம், சதயம், ஆயில்யம், அவிட்டம், சித்திரை, கேட்டை, மூலம்.

பெண்ணும், மாப்பிள்ளையும் ஒரே கணமாக (ராட்சஷ கணம் தவிர) இருந்தால் நலம். (தற்போது ராட்சஷ கணங்களாக இருந்தாலும் இணைக்கப்படுகிறது)

பெண் தேவ கணமும், புருஷன் மனித கணமானால் மத்திமம்.

பெண் தேவ கணமும், புருஷன் ராட்சஷ கணமானால் அதமம் (தற்போது இணைக்கப்படுகிறது)

பெண் மனித கணமும், புருஷன் ராட்சஷ கணமானால் அதமா அதமம்- பொருந்தவே பொருந்தாது (தற்போது இணைக்கப்படுகிறது)

பெண் ராட்சஷ கணமும், புருஷன் மனித கணமானால் பொருந்தாது.

3. மாகேந்திரப் பொருத்தம் (புத்திர விருத்தி மற்றும் ஸம்பத்)

பெண் நட்சத்திர முதல் புருசன் நட்சத்திரம் வரை எண்ணினால் 4, 7, 10, 13, 16, 19, 22, 25 வருமாயின் உத்தமம்.

4. ஸ்திரி தீர்க்கம் (தீர்க்க சுமங்கலி)

பெண் நட்சத்திரம் முதல் புருஷன் நட்சத்திரம் வரை 13 க்கு மேல் இருந்தால் சுபம். 13க்குக் கீழிருந்தால் பொருந்தாது.

5. யோனிப் பொருத்தம் (தாம்பத்ய சுகம்)

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மிருகம் உண்டு. பெண், ஆண் நட்சத்திரங்கள், பெண்ணுக்குப் பெண் யோனியாகவும், ஆணுக்கு ஆண் யோனியாகவும் பகையில்லாமலிருந்தால் உத்தமம். இருவருக்கும் ஆண் யோனியாக இருந்தால் ஆகாது.

அசுவினி - ஆண் குதிரை
பரணி - ஆண் யானை
கார்த்திகை - பெண் ஆடு
ரோகிணி - ஆண் நாகம்
மிருகசீரிஷம் - பெண் சாரை
திருவாதிரை - ஆண் நாய்
புனர்பூசம் - பெண் யானை
பூசம் - ஆண் ஆடு
ஆயில்யம் - ஆண் பூனை
மகம் - ஆண் எலி
பூரம் - பெண் எலி
உத்தரம் - எருது
அஸ்தம் - பெண் எருமை
சித்திரை - ஆண் புலி
சுவாதி - ஆண் எருமை
விசாகம் - பெண் புலி
அனுஷம் - பெண் மான்
கேட்டை - கலைமான்
மூலம் - பெண் நாய்
பூராடம் - ஆண் குரங்கு
உத்திராடம் - மலட்டு பசு (சில பஞ்சாங்கங்களில் கீரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.)
திருவோணம் - பெண் குரங்கு
அவிட்டம் - பெண் சிங்கம்
சதயம் - பெண் குதிரை
பூரட்டாதி - ஆண் சிங்கம்
உத்திரட்டாதி - பாற்பசு
ரேவதி - பெண் யானை

- இவற்றில்

பாம்பு x கீரி
யானை x சிங்கம்
குரங்கு x ஆடு
மான் x நாய்
எலி x பூனை
குதிரை x எருமை
பசு x புலி

-போன்றவை ஜென்ம பகை என்பதால் தவிர்க்க வேண்டும்.

6. ராசிப் பொருத்தம்

பெண் ராசியிலிருந்து பையன் ராசி வரை எண்ணினால்

6-க்கு மேலிருந்தால் பொருந்தும்.

8-வது ராசி ஆகாது.

7-வது ராசியானால் சுபம்.

அதிலும் கும்பம்- சிம்மம், மகரம்-கடகம் போன்றவை பொருந்தாது. 2, 6, 8, 12 ஆகாது.

1, 3, 5, 9, 10, 11-வது வந்தால் சுமார்.

பெண் ராசிக்கு பிள்ளை ராசி 6, 8 ஆகவோ 8, 6 ஆகவோ வந்தால் சஷ்டாஷ்டக தோஷம் எனப்படும். இது மிகவும் தீமையாகும். இதிலும் சில விதிவிலக்குண்டு. அவைகளில் மேற்கூறிய தோஷம் இல்லை.

அனுகூல சஷ்டாஷ்டகம்

பெண் ராசி பிள்ளை ராசி

மேஷம் கன்னி

தனுசு ரிஷபம்

துலாம் மீனம்

கும்பம் கடகம்

சிம்மம் மகரம்

மிதுனம் விருச்சிகம்

-ஆக இருந்தால் சஷ்டாஷ்டக தோஷம் கிடையாது.

7. ராசி அதிபதி

கிரகம் நட்பு சமம் பகை

ஒருவருக்கு ஒருவர் நட்பானால் மிக உத்தமம்.

ஒருவருக்கு சமம், ஒருவருக்கு நட்பானால் உத்தமம்

ஒருவருக்கு பகை, ஒருவருக்கு நட்பானால் மத்திமம்

ஒருவருக்கு சமம், ஒருவருக்கு பகையானால் பொருத்தமில்லை

இருவருக்கும் பகையானால் பொருத்தமேயில்லை.

8. வசியப் பொருத்தம்

பெண் ராசி பையன் ராசி

மேஷம் சிம்மம், விருச்சிகம்
ரிஷபம் கடகம், துலாம்
மிதுனம் கன்னி
கடகம் விருச்சிகம், தனுசு
சிம்மம் மகரம்
கன்னி ரிஷபம், மீனம்
துலாம் மகரம்
விருச்சிகம் கடகம், கன்னி
தனுசு மீனம்
மகரம் கும்பம்
கும்பம் மீனம்
மீனம் மகரம்

- வசியம் பொருத்தமுடையவை. மற்ற ராசிகள் பொருந்தாது.

9. ரஜ்ஜீப் பொருத்தம் (மிக முக்கியமானது)

ரஜ்ஜீ ஐந்து வகைப்படும்.

சிரோ ரஜ்ஜீ

மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம்

கண்ட ரஜ்ஜீ

ரோகிணி, அஸ்தம், திருவோணம் - ஆரோஹனம்

திருவாதிரை, சுவாதி, சதயம் - அவரோஹனம்

உதார ரஜ்ஜீ

கார்த்திகை, உத்தரம், உத்ராடம் - ஆரோஹனம்

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - அவரோஹனம்

ஊரு ரஜ்ஜீ

பரணி, பூரம், பூராடம் - ஆரோஹனம்

பூசம், அனுஷம், உத்திரட்டாதி - அவரோஹனம்

பாத ரஜ்ஜீ

அசுவினி, மகம், மூலம் - ஆரோஹனம்

ஆயில்யம், கேட்டை, ரேவதி - அவரோஹனம்

பெண், பிள்ளைகளுடைய நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜீவாக இல்லாமல் பார்த்துச் செய்தால், பெண் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாள்.

ஒரே ரஜ்ஜீவில் ஆரோஹனம், அவரோஹனம் என்று இரு பிரிவுகள் உண்டு. சிலர் ஆண், பெண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜீவில் இருந்தாலும், ஆரோஹனம், அவரோஹனம் வேறாக இருந்தால் செய்யலாம் என்கிறார்கள்

10. வேதைப் பொருத்தம்

அசுவினி - கேட்டை
பரணி - அனுஷம்
கார்த்திகை - விசாகம்
ரோகிணி - சுவாதி
திருவாதிரை - திருவோணம்
புனர் பூசம் - உத்ராடம்
பூசம் - பூராடம்
ஆயில்யம் - மூலம்
மகம் - ரேவதி
பூரம் - உத்ரட்டாதி
உத்திரம் - உத்ரட்டாதி
அஸ்தம் - சதயம்

11. நாடிப் பொருத்தம்

பெண் நாடியும் ஆண் நாடியும் வெவ்வேறாக இருக்க வேண்டும்.

பார்சுவநாடி (அ) வாத நாடி

அசுவினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி

மத்தியா நாடி (அ) பித்த நாடி

பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்ரட்டாதி

சமான நாடி (அ) சிலேத்தும நாடி

கார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்ராடம், திருவோணம், ரேவதி

ஆண், பெண் இருவருக்கும் சமான நாடி (சிலேத்தும நாடி) இருந்தால் நாடிப் பொருத்தம் இருப்பதாகக் கொள்ளப்படுகிறது.

12. விருக்ஷம்

ஆண், பெண் இருவரில் யாருக்காவது பால் மரமாக இருந்தால் புத்திர பாக்கியம் உண்டு.

பால் இல்லாதது

கார்த்திகை - அத்தி
ரோகிணி - நாவல்
பூசம் - அரசு
ஆயில்யம் - புன்னை
மகம் - ஆல்
பூரம் - பலா
உத்தரம் - அலரி
அஸ்தம் - வேலம்
கேட்டை - பிராய்
மூலம் - மா
பூராடம் - வஞ்சி
உத்ராடம் - பலா
திருவோணம் - எருக்கு
பூரட்டாதி - தேமா
ரேவதி -இலுப்பை

பால் உள்ளது

அசுவினி - எட்டி
பரணி - நெல்லி
மிருகசீரிஷம் - கருங்காலி
திருவாதிரை - செங்கருங்காலி
புனர்வசு - மூங்கில்
சித்திரை - வில்வம்
சுவாதி - மருதம்
விசாகம் - விளா
அனுஷம் - மகிழ்
அவிட்டம் - வன்னி
சதயம் - கடம்பு
உத்ரட்டாதி - வேம்பு

பால் மரம் இருவருக்கும் இல்லாவிட்டால் என்ன செய்வது? மகேந்திரம் இருந்தால் செய்யலாம். மகேந்திரமும் இல்லாவிட்டால் ஆண், பெண் ஜாதகத்தில் ஐந்தாமிடம், ஐந்துக்குரியவர், குரு இவர்களை ஆராய்ந்து பின்பு சேர்க்கலாம்.

இந்த 12 பொருத்தங்களில் தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜீ இருந்தால் திருமணத்தைத் தாராளமாகச் செய்யலாம்.
- See more at: http://athigaaran.forumta.net/t77-topic#sthash.XgiTBh9U.dpuf
ஜாதகப் பொருத்தம் பார்ப்பது எப்படி

ஜாதகம் என்பது அவரவர் விதியையும் வாழ்க்கையையும் நிச்சயிக்கும்காலக்கணிதம் ஆகும் ஜாதகம் என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டதாக அமையக்கூடியது ஒருவருடைய ஜாதகத்தைப் போல் மற்றவருடைய ஜாதகம் இருப்பதில்லை ஒரே ஊரிலும் குறிப்பிட்டஒரே தேதியிலும் நேரத்திலும் இருவேறு நபர்கள்பிறந்திருந்தாலும் கூட அவர்களுடைய ஜாதகங்களில் சிறியஅளவுமாற்றங்களாவது இல்லாமல் இருப்பதில்லை இந்தச்சிறு மாற்றமே பலபெரிய மாறுதல்களை ஒருவரது வாழ்க்கையில் ஏற்படுத்திவிடக்கூடும்இருவருக்கும் இலக்கினம் ஒன்றாக இருக்கலாம் மற்றகிரகநிலைகளும் ஒரேமாதிரியாக இருக்கலாம் இதனால்அமைப்பு ஒன்றாய் இருக்கும் நவாம்ச சக்கரத்தில் மாற்றங்கள்ஏற்பட்டிருக்கும் ஜாதகம் பார்க்கும்போது இராசிச்சக்கரத்தை மட்டுமே பார்ப்பது தவறு ஜோதிடசாஸ்திரஞான மற்றவர்கள்தான் இவ்வாறு ஜாதகத்தைப் பார்த்துப்பலன் சொல்வார்கள் அத்தகையபலன்கள் நிச்சயமாகப் பலிக்கா ஏனென்றால் இராசிசக்கரத்தில் அமைந்துள்ள கிரகங்களின் வலிமையை நிச்சயிப்பது நவாம்ச சக்கரமாகும் ஆகையால் ஜாதகத்தில் இராசிகுண்டலியும் அம்ச சக்கரமும் அமைந்துள்ளனவா என்பதைப் பார்த்துக்கொண்ட பிறகே ஜாதகத்தைக் கையில் எடுத்துப்பார்க்கவேண்டும்.ஜாதகப்பொருத்தம் பார்ப்பது என்பது குறிப்பாக ஓர் ஆணின் ஜாதகத்திற்கும் ஒரு பெண்ணின் ஜாதகத்திற்கும் உள்ள பொருத்த்தைப்பற்றிய விதிமுறைகள்ஆகும்.
ஒரு பெண்ணின் நட்சத்திரமும் ஓர் ஆணின் நட்சத்திரமும் ஒன்றாகவோ இருக்கலாம் ஆனால்அதேபெண்ணின் ஜாதகமும் அதே ஆணின் ஜாதகமும் ஒன்றாக இருக்கமுடியாது மேலும்ஆணுடைய ஜாதகத்தைப்பார்க்கும் முறைக்கும் சில முக்கியமான வித்தியாசங்களிருக்கின்றன நட்சத்திரங்கள் மொத்ததில்27 தான் உள்ளன அதனால்பத்துப்பொருத்தங்களைப் பார்ப்பதற்கு அடிப்படையான நட்சத்திரங்களும் அதே போலவே நட்சத்திர அடிப்படையில் நாம் பார்க்கும் பொருத்தங்களில் 27 பிரிவுகள் மட்டுமே இருக்கமுடியும் ஜாதகப்பொருதத்தின் அடிப்படையில் பொருத்தம் பார்க்கும் போது ஆயிரக்கணக்கான பிரிவுகள் ஏற்படும் அந்தப் பிரிவுகளை ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் அடக்கிவிடமுடியாது அதனால்தான் பத்துப்பொருத்தங்கள் இருந்தாலும்இல்லாவிட்டாலுங் கூடஜாதகப்பொருதத்தைப் பார்த்துத்தான் திருமணம்செய்ய வேண்டும்ஜாதகமே இல்லாதவர்க்கும் பிறந்தநட்சத்திரம் தெரிந்தவர்களுக்கும் அந்தநட்சத்திரமே தெரியாதவர்களுக்கும் பத்து பொருத்தங்களையும் பார்க்கலாம் ஜாதகம் இருந்தாலும் பத்துப்பொருத்தங்களையும் சேர்த்துப் பார்ப்பது நல்லது ஆண்மகன் ஒருவனின் ஜாதகத்தையும் கன்னிபெண்ஒருத்தியின் ஜாதகத்தையும் எடுத்துக்கொண்டு அந்தஇரண்டு ஜாதகங்களும் பொருத்தம் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டுமனால் முதலில் இருஜாதகங்களையும் தனிதனியாக்க் கவனித்து ஆலோசித்து அந்த இரண்டு ஜாதகங்களின் பலவகைதன்மைகளையும் சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்த்த பிறகே திருமணபொருத்தங்களை பற்றிய முடிவுகளை செய்யவேண்டும் வாழ்க்கையில் நறுமணம் என்பதாலேயே திருமணம் நிகழ்த்தப்பெறுகிறது இதற்கு ஏற்றவாறுஇருவர் ஜாதகங்களையும் தனித்தனியே பார்த்துக் கிரகநிலைகளை ஆராய்வது அவசியம்

நட்சத்திர பொருத்தம் பார்ப்பது எப்படி?திருமண பொருத்தம்

 ஆண், பெண் இருவருடைய நட்சத்திரப்படி இருவருக்கும் எத்தனை பொருத்தம் இருக்கிறது என பார்ப்பது எப்படி..? 10 பொருத்தங்களில் எத்தனை பொருத்தம் வருகிறது என பார்க்கும் சூத்திரம் இங்கு சொல்லப்பட்டிருக்கிறது.இது தவிர ஜாதக பொருத்தமும் பார்க்க வேண்டும் அது சம்பந்தமாக 10 கட்டுரைகளுக்கு மேல் எழுதி இருக்கிறேன் .அதையும் ஒருமுறை படிக்கவும்...


1) தினம்:- பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணி அதை 9 ஆல் வகுத்து மிச்சம் 2, 4, 6, 8, 9 என வந்தால் தினப்பொருத்தம் உண்டு. மற்றவை வந்தால் பொருத்தம் இல்லை.

2) கணம்:- ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் என்ன கணம் என பஞ்சாங்கத்தில் அறியலாம். ஆண், பெண் இருவருக்கும் ஒரே கணம் ஆனாலும், தேவ கணம், மனுஷ கணமானாலும் கணப் பொருத்தம் உண்டு. பெண் மனுஷ கணமும் பிள்ளை ராட்சஷ கணமானாலும் பொருத்தம் உண்டு.

3) மகேந்திரம்:- பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணும்பொழுது 4, 7, 10, 13, 14, 19, 22, 25 என வந்தால் மகேந்திரப் பொருத்தம் உண்டு.

4) ஸ்திரீ தீர்க்கம்:- பெண் நட்சத்திலிருந்து பிள்ளை நட்சத்திரம் 7க்கு மேல் இருந்தால் ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் உண்டு.

5) யோனி:- நட்சத்திரங்களுக்குரிய விலங்குகள் பஞ்சாங்கத்தில் உள்ளன. பகை விலங்குகளின் விளக்கம் கீழே உள்ளது.

குதிரை - எருமை, யானை - சிங்கம், ஆடு - குரங்கு, பாம்பு - எலி, பசு - புலி, எலி - பூனை, கீரி - பாம்பு, மான் - நாய், ஆண் - பெண் நட்சத்திரங்களின் விலங்குகள் பகையாக இல்லாமல் இருந்தால் யோனிப் பொருத்தம் உண்டு.

6) ராசி:- பெண் பிள்ளை இருவருக்கும் ஒரே ராசியாக இருந்தாலும் பெண்ணிற்கு பிள்ளை ராசி 7, 9, 10, 11. 12 இருந்தாலும் ராசிப் பொருத்தம் உண்டு.

7) ராசி அதிபதி:- பெண் ராசிக்கு அதிபதி பிள்ளை ராசி அதிபதிக்கு நட்பு அல்லது சமமாக இருந்தால் ராசி அதிபதி பொருத்தம் உண்டு.

வசியம்:- பெண் ராசிக்கு பிள்ளை ராசி வசியமாக இருந்தால் வசியப் பொருத்தம் உண்டு. வசிய ராசிகளில் விளக்கம் பஞ்சாங்கத்தில் காணலாம்.

9) ரஜ்ஜு (மாங்கல்யம்):- நட்சத்திரங்களுக்கு உண்டான ரஜ்ஜுக்கள் பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. பெண் ரஜ்ஜுவும் பிள்ளை ரஜ்ஜுவும் ஒன்றாக இல்லாமல் இருந்தால் ரஜ்ஜு அல்லது மாங்கல்யப் பொருத்தமுண்டு.

10) நாடி:- 27 நட்சத்திரங்களும் மூன்று பிரிவுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

அ) அஸ்வினி, திருவாதிரை புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி.

ஆ) பரணி, மிருகசிரிடம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.

இ) கிர்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி.

பெண், ஆண் நட்சத்திரங்கள் ஒரே பிரிவில் இல்லாமல் வெவ்வேறு பிரிவில் இருந்தால் நாடிப் பொருத்தம் உண்டு.

எனவே மொத்தம் 10 பொருத்தங்களில் 6-க்கு மேல் இருந்தால் திருமணப் பொருத்தம் உண்டு. எனினும் கீழே கொடுத்துள்ள பொது விதிகளையும் கவனிக்க வேண்டும்.

அ) ரஜ்ஜு அல்லது மாங்கல்யப் பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது.

ஆ) தினம்,கணம், யோனி, ராசி, ரஜ்ஜு - இந்த ஐந்தும் முக்கியமானப் பொருத்தங்கள்.

இ) பெண், பிள்ளை இருவரும் ஒரே ராசியாக இருந்தால் 10 பொருத்தங்களும் உண்டு.

ஈ) பெண், பிள்ளை இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருந்து பரணி, ஆயில்யம்,சுவாதி, கேட்டை,மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆக இல்லாமல் இருந்தால் 10 பொருத்தங்களும் உண்டு.

இவற்றுடன் செவ்வாய் தோஷம் சமமாக இருப்பின் திருமணம் செய்யலாம்.
சாலை யோரத்தில் நாங்கள் 
தண்ணீரை இழந்து துடிக்கும் மீன்கள் 
கண்ணீர் மட்டுமே எங்கள் சொந்தம் 
எவருமில்லை எங்கள் பந்தம் 

நாள்முழுக்க நிறைய உழைத்தும் 
வியர்வை மட்டுமே எம்மை உண்ணும் 
மேகப் பெண்ணவள் நொந்து அழுதால் 
அன்றே குளியல் வெளிச்சவிடியல் 

ஒதுக்கப்பட்டதே எமக்கு உரிமை 
அதனாலோ அழைக்கப்பட்டோம் யாமும் ஒதுக்கப்பட்டோராய் 
எம்மால் இல்லை யாருக்கும் பெருமை 
என்ற நினைப்பாலே வதைக்கப்பட்டோம் 

ஒருவேளை மட்டுமே வயித்துக்குசோறு 
வருந்தி அழுதாலும் உதவிக்கு யாரு 
எல்லோரையும் நல்லா வாழவைக்கும் ஊரு 
வாழ்க்கை எங்களுக்கோ பெரும்போரு

திங்கள், 22 பிப்ரவரி, 2016


              உலகில் மிகப் பெரியவை

              உலகில் மிகப்பெரிய விலங்கு எது? திமிங்கிலம்
      
  2) உலகில் உயரமான விலங்கு எது? ஒட்டகச்சிவிங்கி


3) உலகில் மிக உயரமான மலை எது? இமயமலை


4) உலகிலேயே மிக நீளமான நதி எது? அமேசன்(6.750 கிலோமீற்றர்)


5) உலகிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்பட்ட நதி யாது? நைல் நதி(6.690 கிலோ மீட்டர்)


6) உலகியே மிக ஆழமான ஆழி எது? மரியானாஆழி(11.522மீற்றர்)


7) உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது? லண்டன் 


உலகிலேயே பெரிய பாலைவனம் யாது? சஹாராப்பாலைவனம்


9) உலகிலேயே மிகச் சிறிய அரசு எது? வத்திக்கான்


10) உலகிலேயே பெரிய சமுத்திரம் எது? பசுபிக் சமுத்திரம்


11) உலகிலேயே பெரிய தீவு எது? கிறீன்லாந்து


12) உலகிலேயே பெரிய கண்டம் எது? ஆசியாக்கண்டம்


13) உலகிலேயே சிறிய கண்டம் எது? அவுஸ்ரேலியா


14) உலகிலேயே பெரிய நாடு எது? கனடா(ரஷ்யா சிதறிய பிறகு)


15) உலகிலேயே அதிகளவில் எரிமலைகள் உள்ள நாடு எது? இந்தோனேஷியா


16) உலகிலேயே அதிக மழை பெறும் இடம் யாது? சீராப்புஞ்சி


17) உலகிலேயே பெரிய நன்னீர் ஏரி யாது? சுப்பீரியர் ஏரி


18) சூரியனை புமி ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம் யாது? 365 நாடகள்.6 மணி 9நிமிடம். 9.54 செக்கன்


19) உலகிலேயே மிகவுயர்ந்த சிகரம் யாது? எவரெஸ்ட்


20) உலகிலேயே பெரிய எரிமலை யாது? லஸ்கார்(சிலி) 5.990 மீற்றர்


21) உலகிலேயே மிக நீளமான மலை எது? அந்தீஸ்மலை


22) உலகிலேயே மிகவும் பரந்த கடல் எது? தென்சீனக்கடல்


23) உலகிலேயே பெரிய ஏரி எது? கஸ்பியன் (ரஷ்யா-ஈரான்)


24) உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது? ஏஞ்சல்ஸ்(வெனிசுவெலா) 979மீற்றர்


25) உலகிலேயே அதிக மக்கள் தொகையுள்ள நாடு எது? சீனா


26) உலகிலேயே குறைந்த மக்கள் தொகையுள்ள நாடு எது? வத்திக்கான்


27) உலகிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் எங்குள்ளது? காரக்புர்


28) உலகிலேயே மிக ஆழமான ஏரி எது? பைக்கால் ஏரி


29) உலகிலேயே மிக நீளமான குகை எது? மாமத் குகை


30) உலகில் உள்ள ஒரே ஒரு இந்து மத நாடு எது? நேபாளம் 


31) உலகிலேயே மிகப்பெரிய பு எது? ரவல்சியாஆர்ணல்டி


32) உலகிலேயே மிக நீளமான வீதி அமைந்துள்ள இடம் எது? அலாஸ்கா


33) உலகிலேயே மிகப் பழைமையான தேசப்படத்தை வரைந்தவர் யார்? தொலமி


34) உலகிலேயே மிகப் பிரபலமான விஞ்ஞான சஞ்சிகை எது? நேச்சர் 35) ஆசியாவில் உள்ள கிறிஸ்தவ நாடு 
எது? பிலிப்பைன்ஸ்


36) உலகில் எரிமலை இல்லாத கண்டம் எது? அவுஸ்ரேலியா


37) உலகில் மிக உயரத்திலுள்ள ஏரி எது? டிடிக்காகா


38) உலகில் மிக உயரமான அணை எது? போல்டர் அணை


39) உலகிலேயே மிகப் பழைமையான கம்யுனிஸ நாடு எது? சீனா


40) உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு எது? இந்தியா


41) உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி எது? மாண்டரின்(சீனா)


42) உலகில் அதிகளவில் அச்சிடப்படும் நூல் எது? பைபிள்


43) கடல்மட்டத்திற்கு கீழே உள்ள நாடு எது? நெதர்லாந்து


44) உலகில் ஆறுகளே இல்லாத நாடு எது? சவுதி அரேபியா


45) உலகில் மிகப் பெரிய இஸ்லாமிய நாடு எது? இந்தோனோசியா


46)உலகில் மிக உயரமான அணை யாது? போல்டர் அணை ( manas hussain