திங்கள், 29 பிப்ரவரி, 2016

ஜாதகப் பொருத்தம் பார்ப்பது எப்படி

ஜாதகம் என்பது அவரவர் விதியையும் வாழ்க்கையையும் நிச்சயிக்கும்காலக்கணிதம் ஆகும் ஜாதகம் என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டதாக அமையக்கூடியது ஒருவருடைய ஜாதகத்தைப் போல் மற்றவருடைய ஜாதகம் இருப்பதில்லை ஒரே ஊரிலும் குறிப்பிட்டஒரே தேதியிலும் நேரத்திலும் இருவேறு நபர்கள்பிறந்திருந்தாலும் கூட அவர்களுடைய ஜாதகங்களில் சிறியஅளவுமாற்றங்களாவது இல்லாமல் இருப்பதில்லை இந்தச்சிறு மாற்றமே பலபெரிய மாறுதல்களை ஒருவரது வாழ்க்கையில் ஏற்படுத்திவிடக்கூடும்இருவருக்கும் இலக்கினம் ஒன்றாக இருக்கலாம் மற்றகிரகநிலைகளும் ஒரேமாதிரியாக இருக்கலாம் இதனால்அமைப்பு ஒன்றாய் இருக்கும் நவாம்ச சக்கரத்தில் மாற்றங்கள்ஏற்பட்டிருக்கும் ஜாதகம் பார்க்கும்போது இராசிச்சக்கரத்தை மட்டுமே பார்ப்பது தவறு ஜோதிடசாஸ்திரஞான மற்றவர்கள்தான் இவ்வாறு ஜாதகத்தைப் பார்த்துப்பலன் சொல்வார்கள் அத்தகையபலன்கள் நிச்சயமாகப் பலிக்கா ஏனென்றால் இராசிசக்கரத்தில் அமைந்துள்ள கிரகங்களின் வலிமையை நிச்சயிப்பது நவாம்ச சக்கரமாகும் ஆகையால் ஜாதகத்தில் இராசிகுண்டலியும் அம்ச சக்கரமும் அமைந்துள்ளனவா என்பதைப் பார்த்துக்கொண்ட பிறகே ஜாதகத்தைக் கையில் எடுத்துப்பார்க்கவேண்டும்.ஜாதகப்பொருத்தம் பார்ப்பது என்பது குறிப்பாக ஓர் ஆணின் ஜாதகத்திற்கும் ஒரு பெண்ணின் ஜாதகத்திற்கும் உள்ள பொருத்த்தைப்பற்றிய விதிமுறைகள்ஆகும்.
ஒரு பெண்ணின் நட்சத்திரமும் ஓர் ஆணின் நட்சத்திரமும் ஒன்றாகவோ இருக்கலாம் ஆனால்அதேபெண்ணின் ஜாதகமும் அதே ஆணின் ஜாதகமும் ஒன்றாக இருக்கமுடியாது மேலும்ஆணுடைய ஜாதகத்தைப்பார்க்கும் முறைக்கும் சில முக்கியமான வித்தியாசங்களிருக்கின்றன நட்சத்திரங்கள் மொத்ததில்27 தான் உள்ளன அதனால்பத்துப்பொருத்தங்களைப் பார்ப்பதற்கு அடிப்படையான நட்சத்திரங்களும் அதே போலவே நட்சத்திர அடிப்படையில் நாம் பார்க்கும் பொருத்தங்களில் 27 பிரிவுகள் மட்டுமே இருக்கமுடியும் ஜாதகப்பொருதத்தின் அடிப்படையில் பொருத்தம் பார்க்கும் போது ஆயிரக்கணக்கான பிரிவுகள் ஏற்படும் அந்தப் பிரிவுகளை ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் அடக்கிவிடமுடியாது அதனால்தான் பத்துப்பொருத்தங்கள் இருந்தாலும்இல்லாவிட்டாலுங் கூடஜாதகப்பொருதத்தைப் பார்த்துத்தான் திருமணம்செய்ய வேண்டும்ஜாதகமே இல்லாதவர்க்கும் பிறந்தநட்சத்திரம் தெரிந்தவர்களுக்கும் அந்தநட்சத்திரமே தெரியாதவர்களுக்கும் பத்து பொருத்தங்களையும் பார்க்கலாம் ஜாதகம் இருந்தாலும் பத்துப்பொருத்தங்களையும் சேர்த்துப் பார்ப்பது நல்லது ஆண்மகன் ஒருவனின் ஜாதகத்தையும் கன்னிபெண்ஒருத்தியின் ஜாதகத்தையும் எடுத்துக்கொண்டு அந்தஇரண்டு ஜாதகங்களும் பொருத்தம் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டுமனால் முதலில் இருஜாதகங்களையும் தனிதனியாக்க் கவனித்து ஆலோசித்து அந்த இரண்டு ஜாதகங்களின் பலவகைதன்மைகளையும் சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்த்த பிறகே திருமணபொருத்தங்களை பற்றிய முடிவுகளை செய்யவேண்டும் வாழ்க்கையில் நறுமணம் என்பதாலேயே திருமணம் நிகழ்த்தப்பெறுகிறது இதற்கு ஏற்றவாறுஇருவர் ஜாதகங்களையும் தனித்தனியே பார்த்துக் கிரகநிலைகளை ஆராய்வது அவசியம்