திங்கள், 29 பிப்ரவரி, 2016

சாலை யோரத்தில் நாங்கள் 
தண்ணீரை இழந்து துடிக்கும் மீன்கள் 
கண்ணீர் மட்டுமே எங்கள் சொந்தம் 
எவருமில்லை எங்கள் பந்தம் 

நாள்முழுக்க நிறைய உழைத்தும் 
வியர்வை மட்டுமே எம்மை உண்ணும் 
மேகப் பெண்ணவள் நொந்து அழுதால் 
அன்றே குளியல் வெளிச்சவிடியல் 

ஒதுக்கப்பட்டதே எமக்கு உரிமை 
அதனாலோ அழைக்கப்பட்டோம் யாமும் ஒதுக்கப்பட்டோராய் 
எம்மால் இல்லை யாருக்கும் பெருமை 
என்ற நினைப்பாலே வதைக்கப்பட்டோம் 

ஒருவேளை மட்டுமே வயித்துக்குசோறு 
வருந்தி அழுதாலும் உதவிக்கு யாரு 
எல்லோரையும் நல்லா வாழவைக்கும் ஊரு 
வாழ்க்கை எங்களுக்கோ பெரும்போரு