கொடிகாமம் சந்தையை நவீன வடிவிலான கட்டட அமைப்பைக் கொண்டதாக மாற்றுவதற்குரிய மாதிரிப்படம் சாவகச்சேரி பிரதேச சபையால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த வரைபடம் பொதுச் சந்தையில் வைக்கப்பட்டு அங்குள்ள வர்த்தகர்கள், பொதுமக்கள், நுகர்வோர் ஆகியோரிடம் இருந்து ஆலோசனைகள் பெறப்பட்டு வருகிறது.
‘‘இந்தப் புதிய வரைபடம் சந்தையில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் விற்பனைப் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது. நவீன வடிவிலான கட்டடத் தொகுதி 90 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளது