இன்று தொடக்கம் மூன்று நாட்களுக்குள்
வடக்கு கிழக்கை புயல் மற்றும் சுனாமி தாக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் சுனாமி எச்சரிக்கை மையம் தற்போது சிவப்பு எச்சரிக்கையாக அறிவித்துள்ளது. சுமார் 100-130 km வேகத்தில் காற்று வீசும் எனவும் அது மட்டுமல்லாது சுமார் 200mm மழை வீழ்ச்சியும் பதிவாகலாம் எனவும் மக்களை அவதானமாக இருக்குமாறும் முன் ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறும். கடற்கரையோர மக்களை கடற்பிரதேசத்தில் இருந்து சுமார் 3km க்கு அப்பால் இடம்பெயந்திருக்குமாறும். மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.