திங்கள், 25 செப்டம்பர், 2017

கொடிகாமம் கச்சாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு அருகில் வாள் வெட்டு


கொடிகாமம் கச்சாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு அருகில் வாள் வெட்டு

யாழ்பாணம் கொடிகாமம் கச்சாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு அருகாமையில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று இரவு 9:30 மணியளவில் இளைஞர் குழுக்களுக்கு இடையில் நடைபெற்ற சம்பவத்தில் இளைஞர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிசார் விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்.

சனி, 2 செப்டம்பர், 2017

ஏழை சிறுவனின் ஏக்கம்....



பேருந்தில்
ஜன்னலோர இருக்கை
வழக்கமான பாதை
இருப்பினும்
சற்றும் சலிக்காமல் வெளியே
ரசித்துக்கொண்டிருந்தன
இரு விழிகள் !


திடிரென்று இரு விழிகளும்
வலித்தன
ஒரு பேருந்து நிலைய வளைவில்!

கூவி கூவி அனைவரையும்
அழைத்துகொண்டிருந்தது
அந்த பத்து வயது உதடுகள்!

ஒளி மின்னும்
சிறு நாவல் கனிக்கு பின்னால்
ஒளி இழந்த முகத்தோடு
அந்த சிறுவன்!

யாராவது தன் அருகில்
வருவார்களா
வயிற்று பசிக்காவது
வழி செய்வார்களா
என்ற ஏக்கத்தில் விழிகள் !

நாவல் கனியை சுவைத்து உண்ண வேண்டிய
மனம்
ரணமாய்
கனிகளோடு கெஞ்சிக்கொண்டே இருந்தது!

சற்றென்று கடந்ததது
பேருந்து மட்டுமே
என் மனது அங்கேயே
பயணித்துக்கொண்டிருந்தது.....
     
                                       #கவிமதி