ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

தொழிலாளர் தினம் தொழிலாளர்களுக்கு அல்ல மாறாக அரசியல் வாதிகளுக்கே;



மே முதலாம் திகதி தொழிலாளர் தினமாக தமிழர் தாயகத்தில் கடைப்பிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது உலகெங்கும் தொழிலாளர்கள் தினமாக குறிப்பிட்ட தினம் அமையப்பெற்றிருக்கின்றது.
மே தினத்திற்கும் மே மாதத்திற்கும் தமிழ்மக்களிடையே மிகவும் ஒரு பெரிய தொடர்பொன்று இருக்கின்றது என்பது மிக முக்கியமான விடயம்.
மக்களுக்காக, தொழிலாளர்களுக்காக, தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்காக, தொழிலாளர்களின் உரிமைக்காக, ஆரம்பத்திலே 1886ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மே எழுச்சி என்பது இன்று தொழிலாளர்களை மட்டுமல்ல அரசியல் ரீதியாக ஒரு மே மாதமாக மாறியிருக்கின்றது.
ஐரோப்பாவில், சர்வதேசத்தில் பல இடங்களில் காணாத ஒரு விடயம் இலங்கை அரசாங்கத்தினாலும், இலங்கை அரசியலில் இன்று மே மாதம் என்பது அரசியல் ரீதியாக அரசியல் வாதிகளுக்கு அறிமுக விழாவாகத்தான் இன்று பார்க்கப்படுகின்றது.
இன்று தொழில் வாய்ப்பு இன்றி வடக்கு கிழக்கு பிரதேசங்களில் எத்தனையோ ஆயிரம் இளைஞர்கள் கல்வி பயின்றும் தொழில்வாய்ப்பற்ற நிலையில் உண்ணாவிரதமிருக்கும் நிலையில் மே மாதம் என்பது தொழிலாளர்கள் உரிமைக்காக அல்ல அரசியல் வாதிகள் தங்களுடைய அறிமுகத்திற்காக பயன்படுத்துகின்ற ஒரு  விழாவாக பார்க்கப்படுகின்றது.
யுத்தம் நடந்துகொண்டிருக்கும் பொழுது மே மாதத்தில் தொழிலாளர்கள் தினம் நடாத்தப்பட்டது. அங்கு மக்கள் கொத்துகொத்தாக கொல்லப்பட்டிருக்கும் போது இங்கே அரசியல் வாதிகள் கொழும்பில் 2009 ம் ஆண்டு மே மாதத்தில் தங்களுடைய அரசியல் ரீதியான வெற்றி விழாவை கொண்டாடுவதாக இருந்தார்கள்.
அப்போது பதுங்கியிருந்த தமிழ் அரசியல் வாதிகள் குரல் கொடுக்காதவர்கள் இன்று தங்களுடைய சொந்த இலாபத்திற்காக மே மாதத்தை கையில் எடுத்து தாங்கள் முன்னுக்கும் தொழிலாளர்களை பின்னுக்கும் வைத்து தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள்.
இன்று கிட்டத்தட்ட அம்பாறை மாவட்டத்தில் தொடங்கி யாழ்ப்பாணம் மட்டும் இருபத்தையாயிரம், ஐம்பதாயிரம் இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பின்றி பட்டதாரிகள் வீதிக்கு வந்து இன்று உண்ணாவிரதம் இருந்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு தம் உரிமைகளை பெற்றுக்கொடுக்க முடியாத எம்மவர்கள் இன்று மே மாதம் என்னும் ஒரு எதிர்கால தேர்தலை மையமாக வைத்து இன்று மே மாதம் என்ற ஒரு நிகழ்வை நடாத்திக்கொண்டிருக்கிறார்கள்.
அரசியல் வாதிகள் தங்களை அறிமுகப்படுத்துவதற்காக தங்களுடைய சகாக்களை அறிமுகப்படுத்துவதற்காகவும் எதிர்கால அரசியலை மையப்படுத்தி இந்த மே மாதத்தினை பயன்படுத்துகின்றனர்.
இலங்கையில் தொழிற்சங்கத்தை  முப்பெரும் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜேவிபி  ஆகிய கட்சிகள் வைத்திருக்கின்றன. அதிலும் ஜெவிபி ஆனது தொழிலாளர்களுடைய மேம்பாடு சம்பந்தமாக தொழிலாளர்களுடைய உணர்வுகள் சம்பந்தமாக பாடுபடுகின்ற கட்சியாக இருக்கின்றது. ஆனால் எமது எந்தவொரு தமிழ் கட்சிக்கும் தொழிலாளர் சங்கத்தை கொண்டிருக்கவில்லை என்பது மனவருத்தத்திற்குரிய விடயமாக இருக்கின்றது.  காரணம் என்னவென்றால் இன்று நாங்கள் அதில் கவனம் செலுத்துவதில்லை. உண்மையான தொழிலாளர்களூடாக மட்டும் கொண்டாடப் படுகிறதுதான் தொழிலாளர் தினம்.
ஆனால் தொழிலாளர்கள் அடக்கப்பட்டு அரசியல் வாதிகளால் கொண்டாடப்படுகின்ற தொழிலாளர் தினத்தால் எங்களிற்கு நியாயம் கிடைக்கும் என்று சொல்லமுடியாது. இன்று சிங்கள அரசாங்கம் தமிழ் பிரதேசங்களில் பல அடக்கு முறைகளை செய்துகொண்டிருக்கின்றது. எங்களை கேட்காமல் எங்களுடைய பிரதேசங்களை அகலக்கால் வைத்து எங்கள் வளங்களை சுரண்டி எங்களுக்கு கிடைக்க வேண்டிய வழங்களை அபகரித்து விட்டு தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய கொடுப்பனவுகளை கொடுக்காமல் சொற்பக் காசுகளை கொடுத்துவிட்டு இந்த தொழிலாளர் தினம் கொண்டாடுவதில் என்ன நியாயம்.
சர்வதேசத்திற்கு காட்டுவதற்காக பிரமாண்டமான தொழிலாளர் தினம் இம்முறை எடுக்கப்படுகின்றது. மூவின மக்களும் இருக்கின்றார்கள் தொழிலாளர்களுக்கு கொடுக்கவேண்டிய விடயங்கள் கொடுக்கப்படுகின்றது. ஆகையினால் இந்த விடையங்கள் அனைத்தையும் விட்டு எங்களுக்கு ஜிஎஸ்ரி பிளஸ் தரவேண்டும் என்ற ஒரு மாயைக்காக எம்மவரும் ஒத்துப்போவது மிகவும் வருந்தத்தக்கது. ஆகையினால் இந்த தொழிலாளர்களுடைய அடிமட்டப் பிரச்சினைகள் தீர்க்கபட்டு அவர்களது தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டும் இந்த மே தினக் கொண்டாட்டங்கள் கொண்டாடப்படுவதில் எந்த பிரயோசனமும் இல்லை .
யாரையும் குற்றம் சொல்லவில்லை யாரையும் குற்றம் சொல்ல வேண்டிய அவசியமுமில்லை. எங்களுடைய பிரச்சினைகளை நாங்களே பேசித் தீர்க்க வேண்டிய ஒரு காலகட்டத்தில் இருக்கின்றோம். அதை விடுத்து ஏழைத் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயங்களுக்காக நாங்கள் பேசி அவர்களுக்காக நாங்கள் குரல் கொடுக்க வேண்டும்  அல்லது இந்த பட்டதாரி மாணவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும், காணாமல் போனவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். இல்லையே எங்கள்  நிலங்களை சுரண்டுபவர்களுக்கு எதிராக போராட வேண்டும். இவ்வாறான பிரச்சினைகளுக்காக நாங்கள் ஒன்றுதிரண்டு போராடிமேயானால் எமக்கு வெற்றி நிச்சயமாக கிடைத்திருக்கும்.
இவை அனைத்து பிரச்சினைகளும் இருக்கத்தக்கதாக  மே மாதத்தில் நாங்கள் விசாலமாக மேடைபோட்டு அரசியல் பற்றி பேசுவது அநாகரீகமானது. இம் மாதம் என்பது தமிழ் மக்களின் கறுப்பு மாதமாக, தொழிலாளர் தினம் எவ்வளவு ஒரு மேன்மை பொருந்தியதோ அதே போல் சர்வதேசத்திற்கு இன அழிப்புக்காக சென்ற ஒரு மாதம் தான் மே மாதம். மேமாதம் என்பது தமிழர்களின் ஒரு வருந்தத்தக்க காலத்தில் அழியாத ஒரு நாளாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.  விழித்தெழுவோம், ஒன்றுபடுவோம், எங்கள் உரிமைக்காக அனைவரும் ஒருமித்து குரல் கொடுப்போம் 

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

மூன்றாம் உலகப்போர் விரைவில் ஆரம்பம்

வானத்தைப் பார்த்து அதில் உள்ள சூன்யங்களைத் தேடி அவை சூட்சமமாக கணிக்கப்படும்.
இந்தக் கணிப்புகளைக் கொண்டு எதிர்காலம் இப்படித் தான் இருக்கும் என்ற வகையில் எதிர்வு கூறுவது சோதிடம் எனவும் கூறலாம்.
கடவுளை நம்பாதவரும் கூட இந்த சோதிடத்தை நம்புவார்கள் அந்த அளவு சிறப்பானது இந்த கணிப்பு எதிர்வுகூறல்.
இப்படியாக எதிர்காலத்தைக் கணித்து எதிர்வுகூறுவதில் இன்று வரை விசித்திர நபராக இருக்கின்றார் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தத்துவஞானி மைக்கேல் டி நாஸ்டிரடாமஸ்.
இவர் 1555ஆம் ஆண்டுகளில் கணித்து எதிர்வு கூறியது இன்றுவரை அச்சு பிசகாமல் நிறைவேறிக் கொண்டு வருகின்றது. அந்தவகையில் ஓர் தீர்க்க தரிசியாகவே இவர் வர்ணிக்கப்படுகின்றார்
அமெரிக்க அதிபர் மாற்றம் போன்றவை உட்பட பலவற்றை சரியாக கணித்துக் கூறியவர் உலக மாற்றம், அழிவு தொடர்பிலும் தெளிவாக கணித்துள்ளார்.
இந்த கணிப்பே தற்போது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. நடக்காது என்று புறந்தள்ளி விட முடியாத அளவு இவருடைய கணிப்புகள் அமைந்துள்ளன.
2016ஆம் ஆண்டு முதல் இயற்கைப் பேரிடர்கள், கடல் கொந்தளிப்புகள், நில நடுக்கங்கள் வெள்ளப்பெருக்குகள் அதிகம் ஏற்படும் எனக் கூறியவை நடைபெற்றன, தொடர்ந்தும் நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றது.
வரலாறு காணாத வகையில் காலநிலை உலகை அச்சுறுத்திக் கொண்டும் இருக்கின்றது. அத்தோடு துருவப் பகுதிகளின் உருகல் அதிகரிக்கும் என இவர் கூறிய கணிப்பு சரியாக நடக்கின்றது.
இப்படி இவர் கூறியவற்றில் முக்கியமானது 2017ஆம் ஆண்டு தொடக்கம் உலகம் பாரிய அழிவுகளைச் சந்திக்கும் என்பதே. அடுத்த உலக யுத்தம் ஆரம்பமாகும், அது உலக அழிவுக்கு வித்திடும் என்பதும் இவரது கணிப்பு.
அத்தோடு மத்திய கிழக்கு பற்றி எரியும் என்பதும், தீவிரவாத தாக்குதல்கள் அதிகரிக்கும் என்பதும் நாஸ்டிரடாமஸ் 400 ஆண்டுகளுக்கு முன்னரே தெரிவித்தவை.
அவர் கூறியது போலவே இப்போதைய நிலவரத்தில் முன்றாம் உலக யுத்தம் ஏற்படும் சாதகத்தன்மை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அமெரிக்கா இந்த விளையாட்டை ஆரம்பித்து விட்டது.
ஆனால் அமெரிக்காவிற்கு ஏனைய நாடுகள் அடிபணிந்து போனது என்னமோ பழைய கதை. தற்போது நீ தாக்கினால் நான் நொருக்குவேன் என்ற பாணியில் பயணிக்கின்றன ஏனைய நாடுகள்.
சீனாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையே போர்ச் சூழல் வலுப்பெற்று கொண்டு வருகின்றது. இரு நாடுகளுக்கு இடையேயான விமான போக்குவரத்தினை நிறுத்தும் அளவு சர்ச்சை வளர்ந்து விட்டது.
இடையே அமெரிக்கா வட கொரியாவிற்கு பகிரங்க எச்சரிக்கை கொடுக்கின்றது. வட கொரியாவும் அணு மூலம் திருப்பித் தாக்குவோம் என்று பதிலடி கொடுத்து வருகின்றது.
ஒருவேளை அமெரிக்கா வட கொரியாவிற்கு இடையே போர் மூண்டால் சீனா என்ன செய்யும் என்பது தெரியாத நிலையே இருக்கின்றது. காரணம் சீனாவின் எதிர்பார்ப்பு அமெரிக்காவின் இடம் தன் வசமாக வேண்டும் என்பதே.
மற்றொரு பக்கம் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே இருந்து வந்த பனிப்போர் தற்போது வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.
சிரியா மீது அமெரிக்காவின் தாக்குதலின் விளைவு ரஷ்யா அமெரிக்காவை நேரடியாக எதிர்க்கவும் தயாராகி விட்டது. அதனால் ஒருவருக்கொருவர் தாக்கக் கூடாது என்ற 'ஹாட்லைன்' உறுதியும் இப்போது இல்லாமல் போய் விட்டது.
மற்றொரு பக்கம் ஐ. எஸ். ஐ. எஸ் தீவிரவாதிகளை காரணம் காட்டி அமெரிக்கா தன் போர் விளையாட்டை கண் மூடித்தனமாக ஆரம்பித்து விட்டது. இந்த போர்ச் சூழலுக்கு பதில் மத்திய கிழக்கு கூடிய விரைவில் பற்றி எரியும்.
இது நாஸ்டிரடாமஸ் கணிப்பு படியே இருக்கின்றது என்பது மிகப்பெரிய ஆச்சரியமே. அத்தோடு அடுத்த உலக யுத்தம் ஏற்படும் என்று கூறிய இவருடைய கணிப்பு சாத்தியப்படும்.
அதாவது மத்திய கிழக்கில் அமெரிக்கா விளையாடினால் அமெரிக்காவின் இடத்தை கைப்பற்ற காத்திருக்கும் சீனா, ரஷ்யா, வட கொரியா உட்பட அனைத்தும் அமெரிக்காவிற்கு ஆயுதங்கள் மூலம் பதில் கூறும்.
இப்படி மாறி மாறி போர் செய்து கொள்வதற்காகவோ தெரியவில்லை சக்தி வாய்ந்த ஆயுதங்களும். அணு ஆயுதங்களும் தயார் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இதன் முடிவு கட்டாயம் மூன்றாம் உலக யுத்தம் ஏற்படும் சாத்தியக் கூறே அதிகம். இதனை எப்படி 400 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் கணித்தார் என்பது இப்போதைக்கு வியப்பு.
ஆனாலும் இந்தப் போர்ச் சூழலை உலக அமைதி அமைப்புகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருப்பது எந்த வகையிலும் நல்லதல்ல.
ஆக அடுத்த உலக யுத்தம் ஏற்படுமா? தீர்க்க தரிசி நாஸ்டிரடாமஸ் கூறியது ஏனையவற்றைப் போல பலித்து விடுமா? உலக அழிவு சாத்தியமா? அச்சத்தில் உள்ள உலக மக்களுக்கு தீர்வு என்ன? விடைகளும் பெரிய கேள்விக்குறியே.


மதீ

வியாழன், 13 ஏப்ரல், 2017

உங்கள் வாழ்வின் முக்கியமான வருடத்தின் தமிழ் வருட பெயரை தெரிந்து கொள்ளுங்கள்.



தமிழ் புத்தாண்டு

இந்த ஏ விளம்பி ஆண்டில் உங்கள் அனைவருக்கும் எனது தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

தமிழ் மாதங்கள் சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரெண்டு ஆகும். உண்மையில் இவை, சூரிய மாதங்களாகும். அதாவது பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே மாதங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

நாம் பயன் படுத்தும் இந்த தமிழ் ஆண்டுக்குறிப்பேடு (calendar ) மொத்தம் 60 ஆண்டு சுழற்சிகளை கொண்டது . இந்த தமிழ் வருடத்தின் பெயர் விக்ருதி. தற்பொழுது நடக்கும் 60ஆண்டு சுழற்சி 1987 ஆம் ஆண்டு துவங்கியது.

தமிழ் வருடத்தின் பெயர் மற்றும் அதற்குறிய ஆங்கில வருடத்தை அடைப்பு குறிக்குள் கொடுத்துள்ளேன்.
01. பிரபவ (1987 - 1988)
02. விபவ (1988 - 1989)
03. சுக்ல (1989 - 1990)
04. பிரமோதூத (1990 - 1991)
05. பிரசோற்பத்தி (1991 - 1992)
06. ஆங்கீரச (1992 - 1993)
07. ஸ்ரீமுக (1993 - 1994)
08. பவ (1994 - 1995)
09. யுவ (1995 - 1996)
10. தாது (1996 - 1997)
11. ஈஸ்வர (1997 - 1998)
12. வெகுதானிய (1998 - 1999)
13. பிரமாதி (1999 - 2000)
14. விக்கிரம (2000 - 2001)
15. விஷு (2001 - 2002)
16. சித்திரபானு (2002 - 2003)
17. சுபானு (2003 - 2004)
18. தாரண (2004 - 2005)
19. பார்த்திப (2005 - 2006)
20. விய (2006 - 2007)
21. சர்வசித்து (2007 - 2008)
22. சர்வதாரி (2008 - 2009)
23. விரோதி (2009 - 2010)
24. விக்ருதி (2010 - 2011)
25. கர (2011 - 2012)
26. நந்தன (2012 - 2013)
27. விஜய (2013 - 2014)
28. ஜய (2014 - 2015)
29. மன்மத (2015 - 2016)
30. துன்முகி (2016 - 2017)
31. ஹேவிளம்பி (2017 - 2018)
32. விளம்பி (2018 - 2019)
33. விகாரி (2019 - 2020)
34. சார்வரி (2020 - 2021)
35. பிலவ (2021 - 2022)
36. சுபகிருது (2022 - 2023)
37. சோபகிருது (2023 - 2024)
38. குரோதி (2024 - 2025)
39. விசுவாசுவ (2025 - 2026)
40. பரபாவ (2026 - 2027)
41. பிலவங்க (2027 - 2028)
42. கீலக (2028 - 2029)
43. சௌமிய (2029 - 2030)
44. சாதாரண (2030 - 2031)
45. விரோதகிருது (2031 - 2032)
46. பரிதாபி (2032 - 2033)
47. பிரமாதீச (2033 - 2034)
48. ஆனந்த (2034 - 2035)
49. ராட்சச (2035 - 2036)
50. நள (2036 - 2037)
51. பிங்கள (2037 - 2038)
52. காளயுக்தி (2038 - 2039)
53. சித்தார்த்தி (2039 - 2040)
54. ரௌத்திரி (2040 - 2041)
55. துன்மதி (2041 - 2042)
56. துந்துபி (2042 - 2043)
57. ருத்ரோத்காரி (2043 - 2044)
58. ரக்தாட்சி (2044 - 2045)
59. குரோதன (2045 - 2046)
60. அட்சய (2046 - 2047)

உங்கள் வாழ்வின் முக்கியமான வருடத்தின் தமிழ் வருட பெயரை தெரிந்து கொள்ளுங்கள்.படித்து, அறிந்து மகிழவும்.