கொடிகாமம் (Kodikamam) இலங்கையின் வட மாகாணத்தின்யாழ்ப்பாணக் குடாநாட்டில்,யாழ்ப்பாண மாவட்டத்தின்தென்மராட்சிப் பிரிவில்,சாவகச்சேரி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஒரு கிராமமாகும். இதன் தென்பகுதியில் கச்சாய்யும், தென்மேற்கு பகுதியில் அல்லாரைமற்றும் மீசாலையும், மேற்கு பகுதியில் மந்துவிலும், வடக்கு பகுதி வரனியும் கிழக்கு பகுதிமிருசுவிலும்,உசனும்எல்லைகளாக அமைந்துள்ளன.
ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில், பிரதேசங்கள் கோவிற்பற்று என்று பிரிக்கப்பட்டபோது, இது கச்சாய்கோவிற்பற்று என்ற பிரிவின் முக்கியமான கிராமமாக இருந்தது. இங்கு விவசாய நிலங்கள் அதிகளவில் காணப்பட்டமையால், இது கோடிகமம் (கோடி + கமம்) என ஆரம்பத்தில் அழைக்கப்பட்டு, பின்னர் அந்த காரணப் பெயர் மருவி, கொடிகாமம் என தற்போது அழைக்கப்படுகிறது.
யாழ் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரும், பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் உபவேந்தராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்ற பொ.பாலசுந்தரம்பிள்ளை என்பவர், கொடிகாமத்தை யாழ் குடா நாட்டில், யாழ் நகரத்திற்குஅடுத்த நிலையில் வைத்து வளர்த்தெடுக்கப்பட்டு நகரமாக்க வேண்டிய ஒரு கிராமமாக குறிப்பிடிருக்கிறார். காரணம் இந்தக் கிராமம் வடமராட்சி, யாழ்ப் பிரதேசம், பச்சிலைப்பள்ளி ஆகிய மூன்று பிரதேசங்களையும் இணைக்கும் முக்கியமான ஒரு சந்திக் குடியிருப்பாகவும், அதனால் மிக அதிகளவில் மக்கள் கூடும் இடமாகவும் இருந்ததும் ஆகும். சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் விளையும் விளைபொருட்களையும்,தொண்டைமானாறு முதல்,பருத்தித்துறை, நாகர்கோவில், உடுத்துறை, ஆழியவளை, ஆகிய வடபிரதேச கடலிலிருந்தும்,கடல்நீரேரியிலிருந்தும்பெறப்படும் கடல் உணவுகளையும்சந்தைப் படுத்தும் மிக முக்கிய மையமாக அமைந்துள்ளது. யாழ் குடா நாட்டிலேயே, மா, பலாபோன்ற பழ வகைகளும், மரக்கறி,தேங்காய் மற்றும் மிகச் சிறந்தபுகையிலையும்சந்தைப்படுத்தப்படும் இடமாகவும் கொடிகாமம் கிராமத்தின் சந்தைஅமைந்திருக்கிறது.
ஆரம்பத்தில் கொடிகாமத்தில் வாழ்ந்த மக்கள் விவசாயத்தில் தமது அதிக கவனத்தை செலுத்தியிருந்தமையால், கல்வித்துறையில் முன்னேறுவது பற்றி அதிகம் சிந்திக்காமல் இருந்து வந்தனர். அதனால் அங்கு பெரிய பாடசாலைகள் உருவாகவில்லை. கல்வியில் அதிக கவனம் செலுத்தியவர்கள் பொதுவாக பேருந்திலோ அல்லதுதொடருந்திலோ சாவகச்சேரிஅல்லது யாழ்ப்பாணம் போன்ற இடங்களுக்கு நாளும் பயணம் செய்து தமது கல்வியைப் பெற்று வந்தனர்