திங்கள், 9 மே, 2016


ஏழையின் கண்ணீா் துளிகள் 

பழஞ்சோறு கூட பகல் கனவாகி போகிறது 
வயிற்றிலே சில சுருக்கம்
நெஞ்சிலே பெரும் ஏக்கம்
உயிர் வாழ்வதே ஒரு போராட்டம்
பசியை மறக்க தினம்தோறும் சில தூக்கம்.....
அடுப்படியில் பூனை தூங்குகிறது
இடுப்படியில் பிள்ளை தூங்குகிறது
பக்கத்துக்கு வீட்டுக்கு கடன் வாங்க சென்ற
கணவனை நினைத்து கண்கள் ஏங்குகிறது
கணவன் கை விரித்து வரும் நிலை பார்த்து
அடக்கி வைத்த கண்ணீர் துளிகள்
கண் இமைகளை விட்டு தாண்டுகிறது.....
குறையாத ஏக்கங்களோடு
குடிசையில் வாழும் ஏழைகளுக்கு
மெழுகு வர்த்தியின் தரிசனம்
பசி என்ற இரண்டு எழுத்து 
ஏழைகளின்  தேசிய கீதமாக ஏத்தப்டுகிறது
ஏழையாக பிறந்துவிட்டோம் வையகத்தில்
வாழ வழி தெரியவில்லை எம்மிடத்தில்
கடவுளின் தரிசனம் கிடைத்திடுமோ இவ்விடத்தில்.....

பணம் படைத்த சமுதாயமே!
மிஞ்சிய சோற்றை  நாய்க்கு போடும் உங்கள் உள்ளம்
ஏன் எஞ்சிய பணத்தை ஏழைகளுக்கு கொடுக்க மறுக்கிறது
பணம் இல்லாததால் அவர்கள் இப்போது ஏழைகள்
மனம் இல்லாததால் நீங்கள் எப்போதும் ஏழைகள்.....
கால் செருப்பு இன்றி வீதியில் பிச்சை எடுக்கும்
மனிதனை பார்த்துகொண்டு
உனக்கு காரில் ஒரு பயணம் தேவையா ?
அவனுக்கு காத்திருப்பது ஆறடி
உனக்கு காத்திருப்பதும் ஆறடி
இதற்கு  இடையிலே ஏன் அந்தஸ்து என்றதொரு பேரிடி
மண்ணில் பிறப்பது  வாழ்ந்துவிட்டு இறப்பதக்குதான்
ஆனால் ஏனோ ஏழைகளை வாழ முன்பே இறக்கவைகிரீர்கள் .....
உங்களுக்கு பலத்த உணவு வயிறு நிறைய முட்டுகிறது
அவர்களுக்கு பழைய கஞ்சி வயிற்று அடியில் தட்டுகிறது
பணம் படைத்த  மனித இனமே!
கையில் எஞ்சி உள்ள பணத்தை கள்ளவழியில் போக்காமல்
ஏழைகளின் கண்ணீர் துடைக்கும் நல்ல வழியில் போக்குங்கள்
உங்களிடம் உள்ள செல்வதை ஏழைகளுக்கு அள்ளி கொடுக்க வேண்டாம்
கிள்ளியாச்சும் குடுங்கள் பாவம் ஏழைகளும் உயிர் வாழட்டும்.

                                       
                                                                      ஆக்கம்-மதிஈஸ்வரன்