வெள்ளி, 28 நவம்பர், 2014

தெரிந்துகொள்வோம்

தெரிந்துகொள்வோம்
பிரிட்ஜ் (FRIDGE MAINTENANCE ) பராமரிப்பது எப்படி?
1. . பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.
2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும்.
3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.
4. பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.
5. வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும். மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்கவும்.
6. பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.
7. பிரிட்ஜ்ஜிலிருந்து வித்தியாசமாக ஓசை வந்தால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.
8. அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவேளி விட்டு வைக்க வேண்டும்.
9. பிரிட்ஜுக்குக் கண்டிப்பாக நில இணைப்புகள் (Earth) கொடுக்க வேண்டும்.
10. பிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். பிரிட்ஜின் உள்ளே குறைந்தப் பொருள்களை வைத்தால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்தாகும்.
11. பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.
12. உணவுப் பொருட்களைச் சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின்தான் வைக்க வேண்டும். வாழைப்பழத்தை எக்காரணத்தை கொண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.
13. பச்சைக் காய்கறிகளை பாலிதீன் கவர்களில் போட்டு வைக்கவும். பிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்.
14. பச்சை மிளகாய் வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டுத் தான் வைக்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை மூடி வைக்க வேண்டும்.
15. பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.
16. கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை இவைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.
17. பிரிட்ஜின் காய்கறி ட்ரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகு நாள் அழுகிப் போகாமல் இருக்கும்.
18. சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷாக இருக்கும்.
19. பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் முறுமுறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.
20. அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை வாங்கினால், மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்தும்.

பெண் டிரைவ்

இன்றைய தொழில்நுட்ப உலகில் பெண் டிரைவ் தினந்தோறும் நமக்கு அதிகம் பயன்படுகிறது, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்க்கு பைகளை நகல் எடுத்து கொண்டுசெல்ல முன்பு ஃபிளாப்பி, சிடி/டி‌வி‌டி இருந்தது ஆனால் இதன் கொள்ளளவு மிகவும் கம்மி. பெண் டிரைவ் கொள்ளவு அதிகம், மேலும் எளிதாக கையில் எடுத்து செல்லலாம். மிக வேகமாக நகல் எடுக்கலாம் என பெண் டிரைவ் வசதிகள் ஏராளமாக இருந்தாலும் பெண் டிரைவுக்கு என்று பிரச்சனைகளும் நியைவே இருக்க்றது. 

பெண் டிரைவை பிரவுசிங் சென்டர் மற்றும் பொது இடங்களில் பயன்படுத்தும் போது எளிதாக வைரஸ் புகுந்துவிடுகிறது. பெண் வைரஸ்கள் பல வகை உண்டு, பெரும்பாலான வைரஸ் பெண் டிரைவில் உள்ள பைல்களை மறைத்து ஷார்ட்கட் (Shortcut) பைல்களை மட்டும் காண்பிக்கும், மேலும் சில பெண் டிரைவில் சில வகையான பைகளை அழித்துவிடும், சில வைரஸ் படங்களை (Images) எக்ஸிகியூட்டபிள் பைலாக மாற்றிவிடும். இதை தவிர்த்து பெண்டிரைவில் Write Protected பிழை தோன்றும். 

இந்த பதிவில் பெண் டிரைவ் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் அதை தீர்க்கும் வழிமுறைகளையும் ஒவ்வொன்றாக பாக்கபோகிறோம். 

இன்று முதலில் நாம் பார்க்கபோவது ஷார்ட்கட் வைரஸ் பாதிக்கப்பட்டால் எப்படி எளிதாக பெண்டிரைவில் உள்ள பைல்களை மீட்பது என பார்க்காலாம். 

இதற்கு பழைய டாஸ் (MS DOS) கமாண்ட் தெரிந்தாலே போதும். 

இதற்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணினியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுக்கலாம்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.
2) Start ==> Run ==> CMD ==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது என வைத்து கொள்வோம் அதற்க்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -s -h /s /d *.* என டைப் செய்யுங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாக கொடுக்கவும். உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும் உங்களின் விண்டோ இது போல இருக்க வேண்டும்.

நீங்கள் சரியாக கொடுத்து உள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.

இதை படி படியாக வீடியோவில் பார்க்க கீழே உள்ள யூடுப் சுட்டியை கிளிக் செய்து பாருங்கள். 



தொடர்ந்து எழுதுவேன்.... 



நண்பர்களே உங்களுக்கு மேலும் எதேனும் சந்தேகம் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் கேளுங்கள் உடனுக்குடன் அளிப்போம். பேஸ்புக் நண்பர்கள் எங்கள் தகவல்குரு பக்கத்திலும் கேள்விகளை கேட்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம். 



நாம் அனைவருக்கும் யார் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை பார்த்துள்ளார் இதனையும் அறிய முடியும். இது மிக எளிய வழிதான். 

சரி முதலாவதாக உங்களின் Facebook login செய்து உங்கள் Profile பகுதிக்கு செல்லவும்.

அடுத்து Profile பக்கத்தில் வைத்து [ CTRL + U ] அழுத்தவும். அப்பொழுது profile பக்கம் Source Code
இல் புதிய Window மூலம் Open ஆகும்.

அதன்பிறகு Source Code இன் Window இல் [ CTRL + F ] அழுத்தவும், இப்போது Search Bar Open ஆகும்.

அந்த Search Bar இல் {"list" இதை Type செய்து Enter பண்ணவும். அல்லது -2 or -3 என்று கொடுத்து தேடவும்.



தற்போது இது மாதிரி {"list""1000011345400-2","10000043254566-3" இருக்கும் list கிடைக்கும்.

உங்களுக்கு தெரியுமா Facebook Username System அறிமுகமாக முன் அனைவருக்கும் இதுமாதிரி Code வழங்கப்பட்டது, அதாவது இதில் 1000011345400 இது உங்களுடைய FB Profile க்கு வந்தவர் -2" இது எத்தனை முறை வந்துள்ளார் என்பது தெரியும். சரி இந்த இலக்கத்தை வைத்து நண்பரை கண்டுபிடிப்போம்‌?

புதிய பக்கத்தில் www.facebook.com என்று type செய்து [ / ] sigh இதை இட்டு உங்கள் நண்பரின் இலக்கத்தை paste பண்ணவும். அதாவது இதுமாதிரி [ www.facebook.com/1000011345400]

இப்பொது Enter கொடுக்கவும் உங்களின் profileக்கு வந்தவரின் profile ஓபன் ஆகும்.