சனி, 16 பிப்ரவரி, 2019

கொடிகாமத்தில் பழைமை வாய்ந்த அரசமரம் வேருடன் சாய்க்கப்பட்டுள்ளது!

SHARE

யாழ்ப்பாணம் கொடிகாமம் நகரப் பகுதியில் காணப்பட்ட சுமார் 50 வருட பழைமை வாய்ந்த அரசமரம் வேருடன் சாய்க்கப்பட்டுள்ளது.

கடைப் பகுதிகளை அண்டிய நகரப் பகுதியில் காணப்பட்ட அரசமரத்தை, நீர்க்குழாய் பொருத்தும் நிறுவனத்தினர் வேருடன் தறித்துள்ளனர்.

வெயிலில் வருவோர்  மற்றும் பயணிகள் களைப்பாறிச் செல்லும் இயற்கையான நிழற் குடையாகவும் பறவைகளின் உறைவிடமாகவும் இந்த அரசமரம் காணப்பட்டது.

சாவகச்சேரி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் காணப்பட்ட அரசமரத்தை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் ஏ9 முதன்மைச் சாலை தார்க் கலவையாக மாற்றும் போது கூட மரத்தை விடுவித்திருந்தனர்.

வெட்ட விடாதே மரத்தை

துளிர்க்கும் இலையே 
உனக்கு தெரியாது 
நீ மரமா மலர மாட்டிற்கு இறைய 
மனிதனின் வீட்டில் ஒரு செடியா 

மண்ணில் விழும் அனைத்து விதையும் 
வளர்ந்து நீண்டு நிற்பதில்லை 
சில விதைகள் விதைக்கும் முன்னரே 
வீணாகி விடுகிறது 
பல விதைகள் மண்ணை தொட்டதும் 
வளர தொடங்குகிறது 

புவியின் விசையை எதிர்த்து வளரும் 
அனைத்து விதையுமே 
வெற்றியாளனே 

காயோ கனியோ நிழலோ 
எதோ ஒன்று தந்து 
எங்கும் இருக்கும் 
மரத்தினை வெட்டுவது தப்பு 

பல வருடம் வளர்ந்து 
பல கிளைகளை கொண்ட மரணத்தினை 
சில நிமிடத்தில் அகற்றி 
அதற்கு ஈடாய் 
சின்ன சின்ன கன்றுகளை நடுவது நியமில்லை 

மரம் வளர்ப்போம் 
வளர்ந்த மரங்களை காப்போம்