தென்மராட்சி வடவரணி பகுதியில் உள்ள ஆலயம் JCP இயந்திரத்தின் மூலம் தேர் இழுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியிலுள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் தேரை இழுக்ககூடாது என்பதற்காகவே, இந்த “நவீன“ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வட வரணி சிமில் கண்ணகை அம்மன் ஆலயத்திலேயே இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதியிலுள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த மக்களும் தேர் இழுப்பதற்கு முயற்சிக்கிறார்கள் என ஆலய நிர்வாகம் கடந்த சில வருடங்களாக, அவர்களுடன் மல்லுக்கட்டி வந்தது.
இம்முறை திருவிழா ஏற்பாடுகள் நடந்தபோதும், தேர் இழுப்பது தொடர்பான சர்ச்சை எழுந்தது. குறிப்பிட்ட சமூகங்களை சேர்ந்தவர்கள் தேர் இழுக்ககூடாது என்பதில் ஆலய நிர்வாகம் விடாப்பிடியாக நின்றது.
எனினும், ஆலயத்தில் தேர் இழுக்கும் தமது உரிமையை அந்த மக்கள் விட்டுக்கொடுக்க தயாராக இருக்கவில்லை. இதையடுத்து, இந்த “நவீன ஏற்பாட்டில்“ தேர் இழுக்கப்பட்டுள்ளது.
ஆலய நிர்வாகத்தின் இந்த செயற்பாட்டிற்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டனங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. நவீன சமூகத்தில் இப்படி பிற்போக்குத்தனமாக சிந்திப்பவர்களும் இருக்கிறார்களே என அதில் விசனம் வெளியிடப்பட்டு வருகிறது.
கிறிஸ்தவ வெள்ளைக்காரன் கண்டுபிடித்த JCP இயந்திரம் கொண்டு இந்து கண்ணகியை இழுத்தாலும் இழுப்போம் ..
பெருமைக்கு தேரைச்செய்து எருமையை வச்சு இழுத்தானாம்...
நீங்கள் ஊரில இருக்கிற சனம் எத்தின அதில கோவிலுக்கு வார சனம் எவ்வளவு என்றெல்லாம் யோசிக்காம சந்நிதியான் தேருக்கு சளைக்காமல் இருக்கோனும் எங்கட தேர் பக்கத்து ஊர் தேரை விட பத்து இஞ்சியாவது உயரமா இருக்கோனும் காசைப்பற்றி யோசிக்காமல் தேரைச்செய்யுங்கோ என்று சொல்லி வெளிநாட்டில் இருந்து காசனுப்புவியல் அவங்களும் யோசிக்காமல் செய்திடுவாங்கள்
ஆனா அந்தப்பெரிய தேரை இழுக்க ஆட்கள் வேணுமே? ஊருக்கு ஊர் கோவில் எல்லாக்கோவிலும் தேர் அவனவன் தன் ஊர் தேரை இழுக்கவே ஆள் இல்லாமல் இருக்கிறான் இதுக்க உங்களுக்கு வந்து இழுத்தே குடுக்கப்போறான்? ஆம்பிளைகள் வயசுக்கு வந்த பொம்பிளைகள் முழுக்க வெளிநாடு கிழடுகட்டைகள் மட்டும்தான் ஊரில இருக்கு அதுகளை தேரை இழு என்றா இழுக்க முடியுமோ? JCB வச்சுத்தான் இழுக்கோனும்.
இதுக்கு தீர்வாய் ஒன்றில் வெக்கேசன் ரைமுக்கு திருவிழாவை மாத்துங்கோ டிக்கெட்டைப்போட்டு ஊருக்கு போய் கூடி நின்று தேர் இழுக்கலாம் இல்லாட்டில் இருக்கிற தேரை கொஞ்சம் சின்னதா வெட்டிக்குறையுங்கோ இது ரெண்டும் செய்யாட்டில் JCB தான் தேரை இழுக்கும் அரோகராவை சனம் போடும்.
சாதி குறைந்த ஒரு இந்துவை வைத்து இந்து தெய்வத்தை தேரிழுக்க நாம் தயாரில்லை என்ற சித்தாந்தம் பாராட்டுதலுக்குரியது.
சிங்களவரிடமிருந்து தமிழர்களை காபாற்றாவிட்டாலும் பரவாயில்லை, தமிழர்களிடமிருந்து தமிழர்களை காப்பதற்காகவாது
பிரபாகரன் இன்னும் சிலகாலம் ஈழத்தில் வாழ்ந்திருக்கணும் என்ற ஏக்கம் எப்போதுமே காயப்படுபவர்களிடம் இருந்துகொண்டே இருக்கும்.