ஞாயிறு, 31 டிசம்பர், 2017

கொடிகாம மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்


ஆண்டவனின் தோட்டத்தில் 
ஆண்டென்னும் பூச்செடியில் 
அடுத்த மலரின் ஜனனம்! – அதை 
ஆவலுடன் வரவேற்போம்! 

கடந்த வருடத்தின் 
கசப்பான நினைவுகளை 
நெஞ்சம் மறக்கட்டும். 
அவற்றில் நாம் கற்ற 
பாடம் மட்டும் நினைவில் 
என்றும் இருக்கட்டும்! 


அதிகாலை விடியலென 
ஆனந்த பூபாளமென 
அரும்பொன்று மலர்ந்து 
ஆண்டாக விரிகிறது! – நம் 
ஆசைகள் ஈடேற 
ஆசி கொண்டு வருகிறது! 


வருகின்ற புத்தாண்டு 
வளம் சேர்க்கட்டும்! 
வயலெல்லாம் விளைந்திருக்க 
வாழ்வெல்லாம் உயர்ந்திருக்க 
மனமெல்லாம் நிறைந்திருக்க 
மங்கலமே நிலைத்திருக்க 
வருகின்ற புத்தாண்டு 
வளம் சேர்க்கட்டும்!

                       
           Happy Newyear
                   2018

ஞாயிறு, 24 டிசம்பர், 2017

இயேசு எப்போது பிறந்தார்?


பைபிள் தரும் பதில்
இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாள் எதுவென்று பைபிள் எங்கேயுமே குறிப்பிடவில்லை; இதைத்தான் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில புத்தகங்களும் சொல்கின்றன:
  • கிறிஸ்து எந்தத் தேதியில் பிறந்தார் என்பது யாருக்குமே தெரியாது.”—நியு கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா.
  • கிறிஸ்துவின் பிறந்த நாள் எதுவென்று யாருக்குமே துல்லியமாகத் தெரியாது.”—என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் எர்லி க்ரிஸ்டியானிட்டி.
‘இயேசு எப்போது பிறந்தார்?’ என்ற கேள்விக்கு பைபிள் நேரடியாகப் பதில் சொல்வதில்லை என்றாலும், அவர் பிறந்த சமயத்தில் நடந்த இரண்டு சம்பவங்களைப் பற்றி அது விவரிக்கிறது; அவர் டிசம்பர் 25-ஆம் தேதி பிறக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ள அந்தச் சம்பவங்கள் நிறைய பேருக்கு உதவியிருக்கின்றன.

குளிர்காலத்தில் பிறக்கவில்லை

  1. பெயர்ப்பதிவு. இயேசு பிறப்பதற்குக் கொஞ்ச நாட்களுக்குமுன், ரோம அரசனான அகஸ்து “குடிமக்கள் எல்லாரும் பெயர்ப்பதிவு செய்ய வேண்டும்” என்று கட்டளையிட்டார். அதனால், எல்லா மக்களும் “தங்கள் சொந்த நகரங்களுக்கு” போக வேண்டியிருந்தது; இதற்கு ஓரிரு வாரங்கள் பயணம் செய்ய வேண்டியிருந்திருக்கலாம். (லூக்கா 2:1-3) வரி வசூலிப்பு சம்பந்தமாகவும், படையில் ஆள் சேர்ப்பது சம்பந்தமாகவும் தேவையான விவரங்களைப் பெறுவதற்காக அகஸ்து ஒருவேளை அந்தக் கட்டளையைக் கொடுத்திருக்கலாம்; அந்தக் கட்டளை வருஷத்தின் எந்தச் சமயத்தில் கொடுக்கப்பட்டிருந்தாலும், அது மக்களுக்குக் கடுப்பைத்தான் ஏற்படுத்தியிருக்கும். அப்படியிருக்கும்போது, அகஸ்து நிச்சயமாகக் குளிர்காலத்தில் நீண்ட தூரம் பயணம் செய்யும்படி மக்களைக் கட்டாயப்படுத்தி மேலுமாக அவர்களைக் கோபப்படுத்தியிருக்க மாட்டார்.
  2. ஆடுகள். மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, ராத்திரியில் தங்களுடைய மந்தைகளைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள்.” (லூக்கா 2:8) “பஸ்கா பண்டிகைக்கு முந்தின வாரத்திலிருந்து [மார்ச் கடைசியிலிருந்து] நவம்பர் மத்திபம்வரை” “மந்தைகள் வயல்வெளியில் தங்க வைக்கப்பட்டன. . . . குளர்காலத்தில் தொழுவத்துக்குள் தங்க வைக்கப்பட்டன; அப்படியானால், குளிர்காலத்தில் பாரம்பரியமாகக் கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் தேதி தவறென்று தெளிவாகத் தெரிகிறது; ஏனென்றால், மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கியிருந்ததாக சுவிசேஷ புத்தகம் சொல்கிறது” என இயேசுவின் காலத்தில் அன்றாட வாழ்க்கை என்ற ஆங்கில புத்தகம் குறிப்பிடுகிறது.

இலையுதிர்காலத்தின் தொடக்கத்தில்

கி.பி. 33-ன் வசந்த காலத்தில், நிசான் 14-ஆம் நாளில், பஸ்கா பண்டிகை அன்று இயேசு மரணமடைந்தார்; அந்தத் தேதியிலிருந்து பின்னோக்கிக் கணக்கிட்டால் அவர் எப்போது பிறந்தார் எனத் தோராயமாகத் தெரிந்துகொள்ளலாம். (யோவான் 19:14-16) இயேசு தன்னுடைய மூன்றரை வருட ஊழியத்தைத் தொடங்கியபோது அவருக்குச் சுமார் 30 வயது; அப்படியானால், கி.மு. 2 இலையுதிர்காலத்தின் தொடக்கத்தில் அவர் பிறந்திருக்க வேண்டும்.—லூக்கா 3:23.

கிறிஸ்மஸ் ஏன் டிசம்பர் 25 அன்று கொண்டாடப்படுகிறது?

இயேசு கிறிஸ்து டிசம்பர் 25 அன்று பிறந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாதபோதிலும், கிறிஸ்மஸ் ஏன் அந்தத் தேதியில் கொண்டாடப்படுகிறது? இயேசுவின் பிறந்த நாள் கொண்டாட்டமும், குளிர்கால பண்டிகை காலத்தில் கொண்டாடப்படுகிற “புறமத ரோமப் பண்டிகையும், அதாவது ‘வெல்லப்படாத சூரியனின் பிறந்தநாள்’ கொண்டாட்டமும், ஒரே நாளில் இருக்க வேண்டும்” என்பதற்காக சர்ச் தலைவர்கள் அந்தத் தேதியைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என என்ஸைக்ளோப்பீடியா ப்ரிட்டானிக்கா சொல்கிறது. தி என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா குறிப்பிடுகிறபடி, “கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்களுக்குக் கிறிஸ்தவ மதத்தை இன்னும் அர்த்தமுள்ளதாக ஆக்குவதற்கு” அந்தத் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம் என நிறைய அறிஞர்கள் நம்புகிறார்கள்

வெள்ளி, 22 டிசம்பர், 2017

சனிபகவானுக்கு ஒருவர் எழுதிய கடிதம்!




எப்படி இருக்கிறீர்கள் ? நலமாகத்தான் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இன்று நீங்கள் வீடு மாற்றிக்கொண்டு செல்வதாகக் கேள்விப்பட்டோம்.
புது வீட்டில் பால் காய்ச்சிக் குடியேறுகிறீர்கள்போல.
உங்களுடைய புதுமனை புகுவிழாவுக்கு வரும்படி உங்கள் அடியார்களான சோதிடர்கள் எல்லாரையும் அழைத்திருக்கிறார்கள்.
உங்கள் அடிக்கு அஞ்சுகிறவர்கள் நீங்கள் இருக்குமிடங்களுக்குச் சென்று பயபக்தியோடு வணங்கி நிற்கின்றார்கள்.
புதுவீட்டில் குடியேறினாலும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களையும் ஒருவழி பண்ணிவிடுவீர்கள் என்று கூறுகிறார்கள்.
நீங்கள் இருக்குமிடத்திற்கு நான்காம் வீட்டுக்காரரையும் எட்டாம் வீட்டுக்காரரையும் போட்டுத் தாக்கிவிடுவீர்கள் என்று அச்சுறுத்துகிறார்கள்.
இருக்கும் வீட்டையுமேகூட பெயர்த்துப் போட்டுவிடுவீர்கள் என்றுதான் எல்லாரும் சொல்கிறார்கள்.
அப்படியெல்லாம் செய்யாதீர்கள்.
ஏதோ வந்தது வந்துவிட்டீர்கள்.
வந்த இடத்திற்கு வஞ்சகம் செய்யாமல் வாழ வைக்கப் பாருங்கள்.
அக்கம் பக்கத்தார் உங்களைக் கண்டாலே ஓடி ஒளிகின்றார்களாம்.
அப்படியா அவர்களை அச்சுறுத்தி வைப்பது ?
பிள்ளைகுட்டிகள் எல்லாம் பயப்படுகின்றன.

உங்களுக்கே தெரியும்… இன்றைய நிலவரப்படி ஒரு மனிதன் பிழைத்துக் கிடப்பதே பெரும்பாடு.
பிழைப்புக்கொரு வேலை பார்த்து, பிடித்தம்போகக் கிடைப்பதை வீட்டுக்குக் கொண்டு வந்து கொடுத்து, விலைவாசியால் கொண்டாயத்தில் ஏறி நிற்கும் பொருள்களை வாங்கி ஆக்கித் தின்று, பொடுசுகளுக்குப் பள்ளிக் கட்டணம் கட்டி, பெண்டாட்டி முகம் கோணாதபடி கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து வாழ்க்கை என்ற பெயரில் ஏதோ அரையும்குறையுமாய் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறோம்.
இதில் நீங்களும் வந்து நட்ட நடு வீட்டில் அமர்ந்து கும்மியடித்துவிடாதீர். வலி தாங்க முடியாது.
உங்களிடம் அகப்பட்டுக் கொண்டமைக்காக நீங்களும் இரண்டு மொத்து மொத்தினால் நாங்கள் என்ன கதியாவோம் என்று எண்ணிப் பாரும்.
எங்களைப் பார்த்தால் பாவமாக இல்லையா ?
எங்களைப் பார்த்தால் ”இரண்டு வீங்கு வீங்குவோம்” என்றா உமக்குத் தோன்றுகிறது ?
ஏற்கெனவே ஏழெட்டுச் சனிகள் ஏறியிறங்கியதுபோலத்தானே இருக்கிறோம் ? வடிவேலைப்போல “அவ்வ்வ்வ்” என்று அழுதபடிதானே தலைக்குத் துண்டைப் போட்டு உட்கார்ந்திருக்கிறோம் ?
இதற்கும் மேலுமா எங்களை போட்டுத் துவய்ப்பதற்குத் துணிவீர்கள் ?
போதும் போதும்… கொஞ்சம் கருணை காட்டுங்கள்.
வந்த இடத்தில் வந்தது தெரியாமல் இருந்துவிட்டு, அக்கம் பக்கத்தாரையும் அனுசரித்து, ஏதோ உம்மால் முடிந்த நன்மைகளைச் செய்துவிட்டுப் போவீராக.
வழக்கம்போல் ஆட்டிப் படைக்க நினைக்காமல் அமைதி காப்பீராக
2018ம் ஆண்டில் உங்க ராசிக்கு அதிர்ஷ்ட எண் எது?
சனிபெயர்ச்சிக்கு ஏற்ப உங்களது ராசி எண் எது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
ஏனெனில் அதன் படி செயல்படும் போது நம் வாழ்க்கையில் கூடுதல் மகிழ்ச்சி கிடைக்கும்.

மேஷம்
மேஷம் ராசிக்காரர்கள் மிகவும் பலமான, ஆற்றல் வாய்ந்த, துணிச்சல் மிக்கவர்களாக இருப்பார்கள். இவர்கள் சாகசங்கள் செய்வதில் ஆர்வம் கொண்டவர்கள்.

இந்த ராசிக்கார்களின் அதிர்ஷ்ட எண்கள் 6, 18, 41, 77 மற்றும் 83 ஆகும். இந்த எண்கள் இவர்களுக்கு அதிஷ்டத்தை தருவதோடு, வாழ்க்கையில் கஷ்டமான சூழ்நிலைகளை சமாளிக்க உதவும்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்கள் ஒரு சிக்கலான சூழ்நிலையை கையாழும் போது கூட லாஜிக்காக யோசித்து செயல்படுவார்கள். ஒவ்வொரு கஷ்டமான சூழ்நிலைகளையும் பொறுமையுடன் சமாளித்து வருவார்கள்.

இந்த ராசிக்காரர்களுக்கு அடுத்த ஆண்டின் அதிஷ்ட எண் 5, 35, 50, 57, மற்றும் 82 போன்றவை ஆகும்.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்கள் அடுத்த வருடம் கடவுளை பிராத்தனை செய்து நல்ல பலனை பெறலாம். இவர்களின் அதிஷ்ட எண்கள், 1, 10, 18, 35 மற்றும் 86 ஆகியவை ஆகும்.

கடகம்
கடகம் ராசிக்காரர்களுக்கு ஆறாம் அறிவு அதிகமாக வேலை செய்யும். மிகச்சிறந்த கற்பனை திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு 1, 21, 24, 58, மற்றும் 66 ஆகியவை அதிஷ்ட எண்கள் ஆகும்.

சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்கள் அறநெறி மற்றும் விசுவாசமானவர்கள். இவர்கள் எல்லையற்ற சிந்தனை செய்யும் மனம் படைத்தவர்கள்.

இவர்களுக்கு அடுத்த வருடம் எதிர்பார்த்த விடயங்கள் அனைத்தும் நடக்கும். இவர்களுக்கு 6, 24, 39, 59, மற்றும் 83 ஆகியவை அதிஷ்ட எண்கள் ஆகும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இயற்கையாகவே உதவும் மனப்பான்மை கொண்டவர்கள். இவர்களுக்கு அடுத்த ஆண்டின் அதிஷ்ட எண்கள் 16, 29, 79, 80, மற்றும் 90 ஆகும்.

தூலாம்
தூலாம் ராசிக்காரர்கள் வாழ்க்கையை அனுபவித்து வாழ கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு அடுத்த ஆண்டு 7, 20, 55, 77 மற்றும் 86 ஆகியவை அதிஷ்ட எண்களாகும்.

விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்கள் சுயமாக யோசித்து முடிவு எடுக்க கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் அதிஷ்ட எண்கள் 27, 29, 45, 53 மற்றும் 89 போன்றவை ஆகும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் மிக்கவர்கள். இவர்கள் மறக்கும் குணமும் கொண்டவர்கள். இவர்களின் அதிஷ்ட எண்கள் 6, 16, 23, 60, மற்றும் 81 போன்றவை ஆகும்.

மகரம்
மகரம் ராசிக்காரர்கள் தங்களது இலக்கை அடைய அதிகமாக போராடும் திறன் கொண்டவர்கள். இவர்கள் அடுத்த ஆண்டிற்கான அதிஷ்ட எண்கள் 3, 21, 66, 83, மற்றும் 84.

கும்பம்
கும்பம் ராசிக்காரர்கள் தன்னடக்கம், தோழமை குணம் போன்றவற்றை உடையவர்கள். இவர்களுக்கு அடுத்த ஆண்டு 17, 40, 46, 61, மற்றும் 76 ஆகியவை அதிஷ்ட எண்களாகும்.

மீனம்
மீனம் ராசிக்கார்கள் எதையும் சிந்தித்து செயல்படும் வல்லமை கொண்டவர்கள். இவர்களுக்கு அடுத்த ஆண்டிற்கான அதிஷ்ட எண்கள் 8, 10, 27, 56 மற்றும் 69 போன்றவை ஆகும்.


திங்கள், 18 டிசம்பர், 2017

சனிப்பெயர்ச்சி!! 12 ராசிகளுக்கும் சனிபகவான் எப்படி அருள் புரிகிறார் ?



0
14445
    
மேஷம் :
அன்பான மேஷ ராசி வாசகர்களே !! உங்கள் ராசிக்கு, 19.12.17 முதல் 26.12.20 வரை 9-ல் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார் சனிபகவான். புதிய வியூகங்களால் எதிலும் சாதிப்பீர்கள். நீண்டகாலமாகத் தடைப்பட்டு வந்த வேலைகளை எளிதாக முடிப்பீர்கள்.வராது என்று நினைத்த கடன் தொகை வந்து சேரும். சிலர் வீட்டை விரிவுபடுத்துவீர்கள். பகை வர்களும் நண்பர்கள் ஆவார்கள். நோய் பாதிப்புகள் விலகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள். எனினும், தந்தைக்கு சிறுசிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும்.சனி பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டைப் பார்ப்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள்.உத்தியோகத்தில், சக ஊழியர்களாலும், அதிகாரி களாலும் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். எதிர்பார்த்து தடைப்பட்ட பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியன கிடைக்கும். சிலருக்கு வேலையின் காரணமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, உங்களை சாதிக்க வைப்பதாக அமையும்.
உங்கள் ராசிக்கு 2 மற்றும் 7-ம் வீடுகளுக்கு அதிபதியான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில், 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். இங்கிதமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். தடைப்பட்ட திருமணம் கூடிவரும். வாழ்க்கைத்துணை வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலை, நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சளித் தொந்தரவு, காய்ச்சல் ஏற்பட்டு நீங்கும்.பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. கார்த்திகை நட்சத் திரத்தில் பிறந்தவர்கள் முன்கோபத்தைத் தவிர்க்கவும்.பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். அரசால் அனுகூலம் உண்டாகும்.
பரிகாரம்:
ஸ்ரீபெரும்புதூரில் அருளும் பெருமாளையும் ராமாநுஜரையும் ஏகாதசி தினத்தில் வழிபட்டு வாருங்கள்; வாழ்வில் ஏற்றம் உண்டாகும்.
ரிஷபம் :
அன்பான ரிஷப ராசி வாசகர்களே !! இதுவரை 7-ம் இடத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை 8-ம் இடத்தில் சஞ்சரிக்க உள்ளார். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல் படவேண்டிய காலம் இது. மற்றவர்களை நம்பி ஏமாறவேண்டாம். குடும்பத்தில் சிலர் பிரச்னையை உண்டாக்க முயல்வார்கள். கவனம் தேவை.சொத்து வாங்குவது விற்பதில் வில்லங்கம் ஏற்பட்டு நீங்கும். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருக்கும். சகோதரர்களுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும். உடல் நலனை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது நல்லது.சனி பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டை பார்ப்பதால், சாதுர்யமாகப் பேசுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், தன்னைச் சுற்றி ஏதோ சதி நடப்பதாக சிலரை சந்தேகப்படுவீர்கள். சனிபகவான் 10-ம் வீட்டைப் பார்ப்பதால் வேற்றுமொழியினரால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.அலுவலகத்தில் கடுமையாக உழைத்தும் எந்தப் பயனும் இல்லையே என்று ஆதங்கப் படுவீர்கள். புது அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். எனினும் சம்பளம் உயரும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள்.மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, சிற்சில பிரச்னைகளில் சிக்கவைத்தாலும், கடின உழைப்பாலும் சமயோசித புத்தியாலும் உங்களைச் சாதிக்க வைக்கும்.
29.4.18 முதல் 11.9.18 மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால் தடைப்பட்ட வேலைகள் முடியும் கணவன் – மனைவிக்கு இடையில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். வழக்குகள் சாதகமாகும். கடன் பிரச்னை தீரும்.குடும்பத்தில் அமைதி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டு. எதிர்பார்த்த பணம் வரும். கிருத்திகை 2,3,4 மற்றும் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கூடுதல் நன்மைகள் நடக்கும். மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறு விபத்து, முன்கோபம், வீண் டென்ஷன், மனஉளைச்சல் ஆகியன வந்து செல்லும்.

பரிகாரம் : 
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி எனும் ஊரில் அமைந்திருக்கும் ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி உடனுறை ஸ்ரீநாமபுரீஸ்வரரை, பிரதோஷ நாளில் சென்று இளநீர் சமர்ப்பித்து வழிபட்டு வாருங்கள்; உயர்வு உண்டு.
மிதுனம் :
அன்பான மிதுன ராசி வாசகர்களே !!இதுவரை 6-ம் இடத்தில் இருந்து நன்மைகளைச் செய்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை 7-ம் இடத்தில் அமர்ந்து பலன் தர இருக்கிறார். கண்டகச் சனியாக இருப்பதால், எதிலும் கொஞ்சம் எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும்.விலை உயர்ந்த பொருள்கள், நகைகளைக் கவனமாகக் கையாளவும். வாழ்க்கைத் துணைக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். சிலர், வேலையின் காரணமாகக் குடும்பத்தைப் பிரிய நேரிடும். கூடுமானவரை சொந்த வாகனத்தில் இரவுநேரப் பயணம் செய்வதைத் தவிர்க்கவும்.வியாபாரிகளே! கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்தவேண்டாம். கூட்டுத் தொழிலைத் தவிர்க்கவும். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கவும். கடன் தருவதைத் தவிர்க்கவும். சிலருக்குக் கடையை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.தாயாரின் உடல்நலம் பாதிக்கும். அவருடன் வீண் விவாதங்கள் வந்து செல்லும். சனிபகவான் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால், கையிருப்புகள் கரையும். வெளியிலும் கடன் வாங்க நேரிடும்.
19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்னைகளில் இருந்து விடுபட புது வழி கிடைக்கும். முன்கோபம் விலகும்.உதவிகளும் கிடைக்கும். சொத்துச் சிக்கல் தீரும். அரசாங்க காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மிருகசீரிடம் 3,4 மற்றும் புனர்பூசம் 1,2,3-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் அக்கறைக் காட்டுவது நல்லது.29.4.18 முதல் 11.9.18 மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால், செலவுகளைக் குறைத்து,சேமிக்கத் தொடங்குங்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி உண்டாகும். என்றாலும் அவர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம்.
பரிகாரம்:
கோவை மாவட்டம், இருளர்பதி எனும் ஊரில் அருளும் ஸ்ரீசுயம்பு பெருமாளை, சனிக்கிழமையில் சென்று தரிசித்து, துளசி மாலை அணிவித்து வழிபடுங்கள்; மகிழ்ச்சி நிலைக்கும்.
கடகம் :
அன்பான கடக ராசி வாசகர்களே !!சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை 6-ல் அமர்ந்து விபரீத ராஜ யோகத் தைத் தரவுள்ளார். தடுமாற்றம் நீங்கும். வாழ்க்கையை வளப்படுத்த நல்ல வாய்ப்பு கள் அமையும்.பக்குவமான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். குழந்தை பாக்கியம் இல்லா மல் இருந்தவர்களுக்கு, அழகும் அறிவும் நிறைந்த குழந்தை பிறக்கும். சகல காரியங்களிலும் வாழ்க்கைத் துணைவர் பக்கபலமாக இருப்பார்.உங்களை உதாசீனப் படுத்திய உறவினர்களும் நண்பர்களும் தேடி வந்து உறவாடுவார்கள். சிலருக்கு சொந்த வீடு அமையும். பிள்ளைகளின் வருங்காலத்துக்காக சேமிப்பீர்கள். மகனுக்கு, தெரிந்த இடத்திலேயே சம்பந்தம் அமையும். பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள்.சனி பகவான் உங்களின் மூன்றாம் வீட்டைப் பார்ப்பதால், தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் கௌரவம் கூடும். சனிபகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் யாருக்கும் ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். சனிபகவான் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் வராது என்று நினைத்திருந்த பணமும் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆலயங்களில் முதல் மரியாதை கிடைக்கும்.இதுவரை நிலையான வேலை எதுவும் இல்லாமல் இருந்தவர்களுக்கு அதிக சம்பளத்துடன் நல்ல வேலை அமையும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். மேலதிகாரி களுடன் இருந்த மோதல்கள் விலகும். கணினித் துறையில் இருப்பவர்களுக்கு வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.
19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், பணவரவு அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். மேலும் புனர்பூசம் 4-ம் பாதம், மற்றும் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நற்பலன்கள் அதிகரிக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய வேலைகள் தடைபட்டு முடியும்.சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 மற்றும் 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரமாவதால் வாகனத்தை ஓட்டும்போது நிதானம் தேவை.புனர்பூசம் 4-ம் பாதம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் நற்பலன்கள் அமையும். ஆனால், பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும்.
பரிகாரம்:
திருவாரூர் மாவட்டம், திருக்கொள்ளிக் காடு எனும் ஊரில் அருளும், பொங்கு சனீஸ்வரரைத் தரிசித்து வழிபட்டு வாருங்கள்; வாழ்க்கை வளமாகும்.
சிம்மம் :
அன்பான சிம்ம ராசி வாசகர்களே !!இதுவரை 4-ம் வீட்டில் இருந்த சனி பகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை 5-ம் இடத்தில் அமர்ந்து பலன்களைத் தரவிருக்கிறார். இனி நல்லதே நடக்கும். தாயின் ஆரோக்கியம் மேம்படும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை நல்லபடி முடிவுக்கு வரும். பாதியில் நிற்கும் வீடு கட்டும் பணி மீண்டும் தொடங்கும். பணவரவு அதிகரிக்கும்.கணவன் – மனைவிக்குள் அந்நி யோன்யம் அதிகரிக்கும். நீண்டநாள்களாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கும்.பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுங்கள்.சனிபகவான் உங்களின் இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் சூழ்நிலை அறிந்து பேசுவது நல்லது. கண்ணை பரிசோதித்துக் கொள்வது நல்லது. யாருக்கும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சனிபகவான் உங்களின் 7-ம் வீட்டைப் பார்ப்பதால், வாழ்க்கைத்துணைக்கு கை,கால் வலி, மரத்துப் போகுதல், மறதி வரக்கூடும். வீண் விவாதங்கள் வந்து போகும்.உத்தியோகஸ்தர்களே! பணிச் சுமை குறையும். திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். கடின வேலைகளையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். விரும்பிய இடத்துக்கே மாற்றம் கிடைக்கும். சம்பளம் அதிகரிக்கும். கணினித் துறையினருக்கு வெளி நாட்டில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் பணிகள் கிடைக்கும்.
19.12.17 முதல் 18.1.19 வரை மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனி பகவான் செல்வதால், சொத்துச் சேர்க்கையுண்டு. சிலர் இருக்கும் வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். விலையுயர்ந்த தங்க நகைகள் புதிதாக வாங்குவீர்கள். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறைக் காட்டுவது நல்லது.29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால், மூத்த சகோதரர்களுடன் கருத்து மோதல்கள் உண்டாகும். கடன் பிரச்னை தொல்லை தரும். ஆரோக்கியம் மேம்படும்.
பரிகாரம்:
திருவண்ணாமலை மாவட்டம் சோகத்தூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅமிர்த வல்லி உடனுறை ஸ்ரீயோக நரசிம்மரை, ஏகாதசி திதி நடைபெறும் நாளில் சென்று நெய்தீபம் ஏற்றி வணங்கி வாருங்கள். சகலமும் நன்மையில் முடியும்.
கன்னி :
அன்பான கன்னி ராசி வாசகர்களே !!உங்கள் ராசிக்கு, 19.12.17 முதல் 26.12.20 வரை அர்த்தாஷ்டமச் சனியாக அமர்ந்து பலன்களைத் தரவிருக்கிறார் சனி பகவான். அலைச்சல் இருந்தாலும் எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். தவிர்க்கமுடியாத செலவுகள் அதிகரிக்கும்.திக வட்டிக்குக் கடன் வாங்கவேண்டாம். இரவு நேரப் பயணங்களில் கவனமாக இருக்கவும். விலை உயர்ந்த பொருள்களை இரவல் தருவதையும் வாங்குவதையும் தவிர்க்கவும். குடும்பத்தில் தம்பதிக்கு இடையேயான பிரச்னைகளைப் பெரிதுபடுத்த வேண்டாம். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். தாய்வழி சொத்துக்களில் சிக்கல்கள் வரக்கூடும். உரிய அனுமதி பெற்ற பிறகு வீடு கட்டும் பணியைத் தொடங்கவும். வழக்கில் தீர்ப்பு தாமதமாகும்.மேலதிகாரிகளை எதிர்த்துப் பேச வேண்டாம். முக்கியக் கோப்புகளைக் கவனமாகக் கையாளவும். சிலருக்கு ஏமாற்றங்களும் மறைமுக அவமானங்களும் ஏற்பட்டு நீங்கும். கடின உழைப்பால் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவீர்கள். கணினித் துறையினருக்கு கண்களில் பிரச்னை ஏற்பட்டு நீங்கும். புதிய சலுகைகள் கிடைக்கும்.
9.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தங்க நகைகளின் சேர்க்கை உண்டாகும்.உங்களின் தன – பாக்கியாதிபதியான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 மற்றும் 27.9.19 முதல் 24.2.20 மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், இக்காலக்கட்டத்தில் பண வரவு அதிகரிக்கும். பெருந்தன்மையாகப் பேசி, காரியம் சாதிப்பீர்கள். அஸ்தம், சித்திரை 1,2-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கூடுதல் நற்பலன்கள் உண்டாகும். உத்திரம் 2,3,4-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களுடன் கருத்துமோதல்கள் உருவாகும்.29.4.18 முதல் 11.9.18 மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால், பிள்ளைகளின் வருங்காலம் குறித்து ஒரு வித பயம் உண்டாகும். தங்க நகைகளை கவனமாகக் கையாளுங்கள்.
பரிகாரம்: 
திருவாதிரை நட்சத்திரம் நடைபெறும் நாளில், வேலூர் மாவட்டம் பெரியமணலி எனும் ஊரில் அருளும் ஸ்ரீநாகேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வில்வம் சாற்றி வழிபட்டு வாருங்கள்; முன்னேற்றம் உண்டாகும்.
துலாம் :
அன்பான துலாம் ராசி வாசகர்களே !!கடந்த ஏழரை ஆண்டுகளாக உங்களைப் பாடாய்ப்படுத்திய சனி பகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை தைரிய ஸ்தானம் என்னும் 3-ம் இடத்தில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். இனி, நீங்கள் தொட்டது துலங்கும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவீர்கள். முதல் முயற்சியிலேயே வெற்றி பெறுவீர்கள்.சுபநிகழ்ச்சிகளில் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும். மற்றவர்கள் வியக்கும் வண்ணம் சாதனை புரிவீர்கள். வி.ஐ.பி.களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் உண்டாகும்.சனிபகவான் உங்களின் ஐந்தாம் வீட்டைப் பார்ப்பதால் பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். பிள்ளைகளுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். சில சமயங்களில் பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துக் கொள்வார்கள். சனிபகவான் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால், சமூகத்தில் அந்தஸ்து உயரும். தந்தையாருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து செல்லும். சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும்.உத்தியோகஸ்தர்களே! பிரச்னை தந்த மேலதிகாரி மாற்றப்படுவார். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். சிலருக்கு புது வேலை அமையும். வழக்குகள் சாதகமாகும். எதிர்ப்புகள் நீங்கும்.மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, கடைக்கோடி மனிதரான உங்களைக் கோபுரத்துக்கு உயர்த்து வதாகவும் பிரபலங்களுக்கான அந்தஸ்தைப் பெற்றுத் தருவதா கவும் அமையும்.
19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், இழுபறி வேலைகள் உடனே முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். போட்டியில் வெற்றி பெறுவீர்கள். பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். செலவுகள் அதிகரிக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.25.2.20 முதல் 16.7.20 வரை மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். அரசாங்க விவகாரங்களில் எச்சரிக்கையாக இருக்கவும்.2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், நல்லது நடக்கும்.
பரிகாரம்: 
பெரம்பலூர் மாவட்டம், வெங்கனூர் எனும் ஊரில் அருளும் ஸ்ரீவிருத்தாம்பிகை உடனுறை ஸ்ரீவிருத்தகிரீஸ்வரரை, பிரதோஷ நாளில் சென்று வணங்கி வாருங்கள்; தொட்டதெல்லாம் துலங்கும்.
விருச்சிகம் :
அன்பான விருச்சிக ராசி வாசகர்களே !!இதுவரை ஜன்மச் சனியாக இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை பாதச் சனியாக அமர்ந்து பலன் களைத் தர இருக்கிறார். பணப்புழக்கம் அதிகரிக்கும். யோசித்துச் செயல் படுவீர்கள். தெளிவாகச் சிந்திப்பீர்கள். பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள்.கணவன்-மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்கவேண்டாம்.மற்றவர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொண்டு பேசவேண்டாம். வழக்குகளில் அலட்சியம் வேண்டாம். அரசாங்க சம்பந்தப்பட்ட காரியங்கள் தடைப்பட்டு முடியும். சாலைகளில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.வியாபாரிகளே! விளம்பர யுக்திகளால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல் – வாங்கல் சுமுகமாக நடைபெறும். பழைய வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள். கடையை நவீன மயமாக்குவீர்கள். பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங் கள் கையெழுத்தாகும். உணவகம், இரும்பு வகை களால் ஆதாயம் உண்டாகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள்.மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, உங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதுடன், உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுத் தருவதாகவும் அமையும்.
19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், இக்காலக்கட்டங்களில் அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சலும், செலவுகளும் வந்து போகும். விசாகம் 4-ம் பாதம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. தடைப்பட்ட காரியங்கள் முடிவடையும்.29.4.18 முதல் 11.9.18 வரை, 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால், பால்ய நண்பர்க ளால் திடீர் திருப்பங்கள் உண்டு. சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 வரை; 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் ஆவதால் குடும்பத்தினருடன் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
பரிகாரம்:
சீர்காழி-தரங்கம்பாடி பாதையில் உள்ளது திருக்கடையூர். இங்கு கோயில் கொண்டிருக் கும் அருள்மிகு அமிர்தகடேஸ்வரரை வழிபடுவதுடன், அருகிலேயே ஈசனின் அருள் பெற்று திகழும் யமதர்மனையும் வணங்கி வாருங்கள்; முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.
தனுசு :
அன்பான தனுசு ராசி வாசகர்களே !!இதுவரை விரயஸ்தானத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை ஜன்ம ராசியில் இருந்து பலன்களைத் தர இருக்கிறார். ஜன்மச் சனியாயிற்றே என்று கலங்கவேண்டாம். இனி, நிம்மதி பிறக்கும். மதிப்பு மரியாதை கூடும்.எதிர்பார்த்து ஏமாந்த பணம் கைக்கு வரும். அதிக வட்டிக்கு வாங்கி இருந்த கடனில் ஒரு பகுதியைத் தந்து முடிப்பீர்கள்.வீடு கட்டும் பணிக்கு வங்கிக் கடனுதவி கிடைக்கும். சொந்த விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் அவசரம் வேண்டாம். வி.ஐ.பி-களின் நட்பால் சில காரியங்களைச் சாதிப்பீர்கள். மகளுக்கு, திருமணம் கூடிவரும். மகனின் மனப்போக்கு மாறும்.வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்வீர்கள். சந்தை நிலவரங்களை அறிந்து முதலீடு செய்வது நல்லது. மற்றவர்களின் ஆலோசனைகளை நம்பி, பெரிய அளவில் முதலீடு செய்யவேண்டாம். லாபம் கணிசமாக உயரும். ஹோட்டல், கணினி உதிரி பாகங்கள், துணி வகைகளால் லாபம் அடைவீர்கள். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, உங்களுக்கு தன்னம்பிக்கையைத் தருவதுடன் அனைத்துப் பிரச்னைகளிலிருந்தும் விடுபடுவதற்குத் துணை புரிவதாக அமையும்.
19.12.17 முதல் 18.1.19 வரை; 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு கொஞ்சம் அலைச்சலும், ஏமாற்றங்களும் இருக்கும். ஆனால், எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். வி.ஐ.பி-கள் அறிமுகமாவார்கள். சொத்து வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். யோகா, தியானம் ஆகியவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும்.சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், வேலை கிடைக்கும். அரசால் ஆதாயமடைவீர்கள். திடீர் பணவரவு உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். தந்தைவழி சொத்துகள் வந்து சேரும்.29.4.18 முதல் 11.9.18 வரையிலும், 12.8.19 முதல் 13.9.19 வரையிலும், மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால், பிள்ளை களுக்கு தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமணம் கூடி வரும். சனி பகவான் 10.5.19 முதல் 11.8.19; 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் ஆவதால் அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு.
பரிகாரம்:
தேனி மாவட்டம் கண்டமனூர் அருகில் உள்ள குச்சனூரில், சுயம்பு வடிவாக எழுந்தருளி இருக்கும் ஸ்ரீசனீஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள். சகல பிரச்னைகளும் நீங்கி வாழ்வில் சந்தோஷம் பொங்கிப் பெருகும்.
மகரம் :
அன்பான மகர ராசி வாசகர்களே !!இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து நற்பலன்களைத் தந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை ஏழரைச் சனியாக விரயஸ்தானத்தில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். ஏழரைச் சனியாக இருந்தாலும், நல்ல பலன்களையே தருவார்.ஆன்மிகவாதிகள், மகான்கள், சித்தர்களின் ஆசிகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். மறைமுக எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். வழக்கு களில் சாதகமான திருப்பம் ஏற்படும். அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். தடைப்பட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வாகனப் பழுது சரியாகும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்கவேண்டாம். மற்றவர்களுடன் அளவோடு பழகவும். பிரச்னைகளை சுமுகமாகப் பேசித் தீர்த்துக்கொள்ளவும்.உத்தியோகத்தில், சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். மூத்த அதிகாரிகளால் முன்னுக்கு வருவீர்கள். வேலைச்சுமை அதிகமாகத்தான் இருக்கும். வேறு சில நல்ல வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கணினித் துறையில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு, சம்பள உயர்வு தடைப்பட்டாலும், போராடிப் பெறுவீர்கள்.சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
19.12.17 முதல் 18.1.19 மற்றும் 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், கொஞ்சம் அலைச்சலும் செலவுகளும் இருக்கும். பழைய நண்பர்களை பகைத்துக் கொள்ளா தீர்கள். ஊர்ப் பொது விவகாரங்களில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 வரையிலும், 27.9.19 முதல் 24.2.20 வரையிலும், 17.7.20 முதல் 20.11.20 வரையிலும் சனி செல்வதால், இக்காலக் கட்டத்தில் எதிர்பாராத பணவரவு, திடீர் யோகம் உண்டு.29.4.18 முதல் 11.9.18 வரையிலும், 12.8.19 முதல் 13.9.19 வரையிலும் மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால் பிரபலங் களின் அறிமுகம் கிடைக்கும். அயல்நாடு சென்று வர விசா கிடைக்கும். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19; 27.7.19 முதல் 13.9.19 மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் ஆவதால், இக்காலக்கட்டத்தில் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், செலவுகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.
பரிகாரம்:
விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஸ்ரீவாலீஸ்வரர் கோயிலில் அருளும்… வாலியால் தென்முகமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட சனீஸ்வர பகவானை வணங்கி வாருங்கள். வளம் பெருகும்.
கும்பம் :
அன்பான கும்ப ராசி வாசகர்களே !!இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை லாபவீட்டில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். எதிலும் உங்கள் கை ஓங்கும். மனதில் தெளிவு பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். எதிலும் ஆர்வம் பிறக்கும். பண வரவுக்குக் குறைவிருக்காது.சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி நடத்திக் காட்டுவீர்கள். மகனுக்கு வெளிநாட்டில் உயர்கல்வி அமையும். சகோதரியின் திருமணம் கூடி வரும். பழைய நகைகளை மாற்றிப் புது டிசைனில் நகை வாங்குவீர்கள். பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.சனிபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் டென்ஷன், கோபம், அலர்ஜி வந்து நீங்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். செரிமானக் கோளாறு, நரம்பு பிரச்சனைகள் வந்து நீங்கும். சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், பிள்ளைகளின் போக்கில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். படிப்பு, உத்தியோகத் தின் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய வேண்டி வரும். பூர்வீகச் சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 8-ம் வீட்டைப் பார்ப்பதால், அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.
19.12.17 முதல் 18.1.19 வரை; 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். பணம் வரும். ஆனால் செலவினங்களும் துரத்தும். சொத்துத் தகராறு, பங்காளிப் பிரச்னையில் அவசரப்பட்டு நீதிமன்றம் செல்ல வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம்.29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரம் ஆவதால், இக்காலக்கட்டத்தில் அரைகுறையாக நின்ற பல வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு மாறுவீர்கள். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 வரை; 27.7.19 முதல் 13.9.19 வரை மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் அடைவதால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு சரியாகும்.
பரிகாரம்:
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக் குறிச்சி எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபூமாதேவி சமேத ஸ்ரீஆதிவராகப்பெருமாளை, ஏகாதசி திதி நடை பெறும் நாளில் சென்று வணங்குங்கள். நன்மைகள் அதிகரிக்கும்.
மீனம் :
அன்பான மீனராசி வாசகர்களே !!இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை 10-ம் வீட்டில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். இதனால் நன்மைகளே நடக்கும். இருந்த இடம் தெரியாமல் இருந்த நீங்கள், இனி விஸ்வரூபம் எடுப்பீர்கள்.வீட்டைக் கட்டி முடிக்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கைத் திரும்பப் பெறுவீர்கள். குழந்தை இல்லாமல் வருந்திய தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சேமிக்கத் தொடங்குவீர்கள். பொது நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும்.வழக்கு களில் வெற்றி உண்டாகும்.வியாபாரிகளே! முடங்கிக்கிடந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். கடையை விரிவுபடுத் துவீர்கள். போட்டிகளை முறியடிப்பீர்கள். வியாபார நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு வரும். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். கண்ணாடி, ஆடை, பெட்ரோல், டீசல் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். கூட்டுத்தொழிலில் விலகிச் சென்ற பங்குதாரர்கள் மறுபடியும் வருவார்கள்.மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, குடத்திலிட்ட விளக்காகத் திகழ்ந்த உங்களை, கோபுர விளக்கு போன்று ஒளிரச் செய்வதாக அமையும்.
19.12.17 முதல் 18.1.19 வரையிலும், 12.8.19 முதல் 26.9.19 வரையிலும் கேதுவின் `மூலம்’ நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், உங்கள் ரசனைக்கேற்ற வீடு அமையும். புது முதலீடுகள் செய்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வேலை கிடைக்கும். மகளுக்கு வரன் அமையும். உறவினர்களுடனான பிணக்குகள் நீங்கும்.29.4.18 முதல் 11.9.18 வரையிலும், 12.8.19 முதல் 13.9.19 வரையிலும் மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். அதேநேரம் செலவுகளும் அதிகரிக்கும். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 வரையிலும், 27.7.19 முதல் 13.9.19 வரையிலும், 17.7.20 முதல் 16.9.20 வரையிலும் பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் ஆவதால், யாரையும் நம்பி பெரிய காரியங்களில் இறங்கி விடாதீர்கள்.2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், விலையுயர்ந்த ஆபரணங்கள், ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள்.
பரிகாரம்:
திருச்சி மாவட்டம் லால்குடி இடையாற்று மங்கலம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீலட்சுமி சமேத ஸ்ரீலட்சுமி நாராயணரை, சனிக்கிழமைகளில் சென்று வணங்கி வழிபட்டு வாருங்கள். காரியத் தடைகள் யாவும் நீங்கும்; நினைத்தது நிறைவேறும்.

NO COMMENTS

LEAVE A REPLY