திங்கள், 13 மார்ச், 2017

உருகும் உறவுகள்

காணாமல் போனவர்கள் எல்லாம் எங்கே சென்றார்கள்.




கடலில் கலந்த உடல்களுக்கும்
காற்றில் உலாவும் உயிர்களுக்கும்
கண்ணீர் அஞ்சலியாம்-இதற்கு
---காணாமல் போனோர் என்னும் கண்துடைப்பாம் .!

வீதியில் கைதானோருக்கும்

வெள்ளை வேனில் கடத்தப்பட்டோருக்கும்
துக்கம் அனுஷ்டிப்பாம் -இவர்களுக்கு
-----காணாமல் போனோர் என்னும் புனைப்பெயராம் .

தந்தையை தேடும் குழந்தையும்

தன் குழந்தையை தேடும் தாயையும்
தாலி பிச்சை கேற்கும் மனைவியையும்
கதறி துடிக்கும் உறவுகளையும் -
----காணாமல் போனோரின் குடும்பங்கலாம்
ஏளனப் பார்வை வீசுகிறார் - அதை
இரங்கல் என்றே நடிக்கிறார் .

சீதுவையில் நினைவு தூபியாம்

சிறைபிடிக்கப்பட்டோருக்கு .
காணாமல் போனோர் என்றால்
கல்லறை ஏன் சொல்லுங்களேன் .?

கற்பழிக்கப்பட்டார்களா -இல்லை உடல் கருகி மண்ணில் வீழ்ந்தார்களா .?

பாழும் கிணற்றில் போட்டீர்களா -இல்லை
உடலை
பாதி அறுத்துத்திண்டீர்களா.?

துடிக்கவைத்து ரசித்தீர்களா -இல்லை

சுடு நீரில்
அவித்தீர்களா .?

எம் வினாக்களுக்கு

விடையில்லை
வேதனைகளுக்கு
முடிவில்லை .

நெஞ்சம் பிளந்திட அழுகின்றோம் -அவர்கள்

நினைவுகள் வதைத்திட துடிக்கின்றோம்
விழி நீரில் மாலை தொடுக்கின்றோம்
-எம்மவர்
மீண்டு வருவார் என்று
வாழ்கின்றோம்.

அண்ணன் தம்பியரே கேளுங்களேன்

எம் அவலத்தை உலகிற்கு எடுத்து
செல்லுங்களேன் .
-----காணாமல் போன உயிர்கள் எல்லாம்
எங்கே போனது....

கொடும் யுத்தத்தால் அழிந்த

உயிர்கள் போக -மிகுதி
அவர்களை நினைத்து உருகி அழிவதை பாருங்களேன் .

ஆக்கம்
கொடியூர் மதி

வெள்ளி, 3 மார்ச், 2017

யாழ்ப்பாணத்தை உலுக்கும் பன்றிக்காச்சல் யாழில் ஐவர் பலி 2128 பேர் பாதிப்பு பன்றி காய்ச்சல் எப்படி ஏற்படுகிறது? அறிகுறிகள் என்ன?


B
5


    
பன்றி காய்ச்சல் சுவைன் புளூ (Swine flu) என்ற வைரஸ் மூலம் பரவுகிறது. இந்த வைரஸானது பன்றி மற்றும் கோழிகளிடம் காணப்படுகிறது.
பன்றி காய்ச்சல் முதன் முதலில் 1918-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் பரவியது. பின் அதை தொடர்ந்து உலகம் முழுவதும் பரவி 10 கோடி பேர் இந்தக் காய்ச்சலினால் இறந்துள்ளனர்.
பன்றி காய்ச்சல் எப்படி பரவுகிறது?
பன்றிக்காய்ச்சல் நோய் தொற்றியவரிடம் இருந்து வைரஸானது, மற்றவர்களுக்கு வேகமாக பரவும் தன்மைக் கொண்டது.
இந்தக் காய்ச்சல் சளி மூலம் அதிக அளவில் பரவுகிறது. நோய் தாக்கியவர் உமிழ் நீர், சளியை தொட்டு விட்டு கை கழுவாமல் மற்றவரை தொட்டால் அதன் மூலம் கூட பரவுகிறது.
மேலும் இந்த காய்ச்சல் மூலம் பாதிக்கப்பட்ட நபர்கள் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து வகையான பொருட்களில் இருந்து பரவும் தன்மை அதிகமாக உள்ளது.
எனவே இந்த நோய் தாக்கியவரை தனிமை படுத்தினால் தான் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முடியும்.
பன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?
  • இடைவிடாத காய்ச்சல்
  • மூச்சுத்திணறல்
  • தொண்டையில் வலி
  • வயிற்று போக்கு
  • மயக்கம், வாந்தி
  • பசியின்மை
  • சளி தொல்லை
பன்றிக்காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி?
  • தினமும் குறைந்தபட்சம் ஒரு வேளை சுத்தமான நீரில் குளிப்பதுடன், நோய்க்கிருமி எதிர்ப்பு சக்தி கொண்ட சோப்பைக் கொண்டு அடிக்கடி கைகளை நன்றாக கழுவ வேண்டும்.
  • நாம் வெளியில் சென்று வந்தால் நம்முடைய கை, கால், முகம், கழுத்து போன்ற பகுதிகளை சுத்தமான தண்ணீரால் நன்றாகக் கழுவ வேண்டும்.
  • இரவில் குறைந்த பட்சம் 8 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும். இதனால் உடலிற்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.
  • ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியமாகும்.
  • அன்றாடம் சத்தான, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை கட்டாயம் சாப்பிட வேண்டும்.
  • மது அருந்தினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் பன்றி காய்ச்சல் போன்ற நோய்க்கிருமிகள் எளிதாக பரவும். எனவே மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
  • நமது உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் என்பதால் தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியமாகும்.
குறிப்பு
பன்றிக்காய்ச்சலை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகவும் நல்லது.